Tuesday, July 31, 2012

ஒவன் பேக்ட் மசாலா வடை

ஒவன் பேக்ட் மசாலா வடை
என் தோழி கீதா ஆச்சலின் ரெசிப்பி பார்த்து செய்தது. இதில் சின்ன மாற்றாம் நான் பட்டாணி பருப்பு நிற்ய்யவும் கால் கப் கடலை பருப்பும் சேர்த்து செய்தேன்.
நன்றி கீதா.
நீண்ட நாடகள் கழிந்து ஒரு நல்ல ரெசிப்பியோட உங்களை எல்லாம் இங்கு மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழச்சி.

பேக்ட் மசாலா வடை

தேவையானவை


கடலைபருப்பு
மிளகாய் வற்றல்
இஞ்ஞி
வெங்காயம்
பச்சைமிளகாய்
சோம்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி
புதினா
எண்ணெய்
உப்பு
பேக்கிங் ட்ரே
அலுமினியம் பாயில்

செய்முறை

பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து மிளகாய் வற்றலோடு சேர்த்து ரவை பததிற்க்குஅரைதெடுக்கவும்.

வெங்காயம், இஞ்ஞி பச்சைமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக அரியவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா,சோம்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

குக்கிங்க் ஸ்பேரே அல்லது கொஞ்சம் எண்ணெய் பேக்கிங் ட்ரேயில் பேக்கிங்க் ஷீட் அல்லது அனுமினியம் பாயில் போட்டு அதில் குக்கிங் ஆயில் ஸ்ப்ரே தெளித்து வடைகளை கொஞ்சம் இடைவெளி விட்டு வைக்கவும்.

பேக்கிங் முறை அவரவ ஆவனின் மாடலை பொறுத்து வைக்கவும்.
முதலில் 10 நிமிடம் ப்ராயில் மோடில் வைக்கவும்.
பின் அதை திருப்பி விட்டு 350 டிகிரியில் 15 நிமிடம் வைத்து எடுத்தால் நல்ல மொறு மசால வடை ரெடி.
யாராலயும் கண்டுபிடிக்க முடியாது இது ஒவனில் செய்த்தது என்று சொன்னால் தான் தெரியும்.
சுவை மணம் எல்லாம் பொரித்தெடுக்கும் வைடை போலவே நன்றாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்க்கு ஏற்றது.