Sunday, September 16, 2012

Angel Hair Pasta



Angel Hair Pasta
தேவையானவைபாஸ்தா - 1 பாக்கேட்
துறுவிய சீஸ் = 1 தே.க
பெஸ்டோ சாஸ் (டொமேட்டோ சாஸ்) - 1/2
தே.கவெண்ணெய் - 1/2 தே.க
பீன்ஸ் - கொஞ்சம் நீட்டமாக அரிந்தது
செர்ரி தக்காளி - 5
ஆஸ்பெராகஸ் -1"
பட்டாணி - 1/4 க
ப்சில்லி ப்ளேக்ஸ் - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
வெங்காயம் - 1 நீட்டமாக வெட்டியது
பூண்டு - 1 பொடியாக அரிந்தது
எண்ணெய் - ஆலிவ் (எந்த)

செய்முறை

பானில் பாஸ்தா முழ்கும் வரை தண்ணிர் ஊற்றிஉப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது பாஸ்தாவை போட்டு 15 நிமிடம் வேக விடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சில்லி பேள்க்ஸ், வெட்டிய காய்கறிகள்வெங்காயம் சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடம் சாட்டே செய்யவும்.
நிறய்ய நேரம் வதக்க வேண்டாம்.வதங்கியதும் அதை பாஸ்தா பானில் போட்டு நன்றாக கலந்து துறுவிய சீஸ் மேலே போட்டு விரும்பினால் பெஸ்டோ சாஸ், ஆல்பெரெட்டோ சாஸ் அல்லது டொமேட்டோ சாஸ் சேர்த்து5 நிமிடம் அடுப்பில் வைத்து கிளறிவிட்டு எடுக்கவும்.
குழந்தைகளுக்கு பிடித்த பாஸ்தா அயிட்டமில் இதுவும் ஒன்று,
நூடுல்ஸ் டைப் என்றால் விரும்பி சாப்பிடும்.காரம் கூட்டினால் பெரியர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

I am sending this recipe to FAST FOOD EVENT - PASTA Shamas Easy2CookRecipes.com.

Thanks Shama.









Friday, September 14, 2012

சீஸ் போண்டா

`

சீஸ் போண்டா
தேவையானவைப்ரெட் 2 துண்டுகள்(ஒரம் வெட்டியது)
வேகவைத்த உருளை 1
Parmaseean Cheese - 1 தே.க
மிளகாய் தூள் 1/2 தே.க
கரம் மசாலா தூள் 1/2 தே க
உப்பு தேவைகேற்ப்ப
கொத்தமல்லி இலை கொஞ்சம் பொடியாக அரிந்தது
லெமன் ஜூஸ் 1/4 தே.க
சாட் மசாலா தூள் 1/4 தே.க
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
பௌலில் வேக்வைத்த உருளை கிழங்கு, ஒரம் வெட்டிய ப்ரெட் ஸ்லைஸை தண்ணிர் தொட்டு நன்றாக ப்ரஸ் செய்து தண்னிர் இல்லாமல் அதை கையால் பிட்டு போடவும்.உப்பு, கொத்தமல்லி இலை, சாட் தூள், லெமன் ஜூஸ் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.கலவை எடுத்து சின்ன பால்ஸாக செய்து எண்ணெயில் பொன்னிறமாக வெந்து எடுக்கவும்.இதற்க்கு சாஸ் அல்லது கெட்சப் தொட்டு சாப்பிடலாம்.
குறிப்பு: சீஸ் கிடைக்கவில்லை என்றால் அதற்க்கு பதில் துறுவிய பன்னிர் கூட சேர்க்கலாம் ஆனல் கொஞ்சம் டேஸ்ட் மாறும்.
இந்த குறிப்பை என் தோழி இனிய இல்லம் பார்டி ஈவெண்ட்க்கு அனுப்புகிறேன். நல்ல ஹெல்தி குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்.
நன்றி பாயிஜா. என்னையும் இந்த ஈவெண்டிக்கிற்க்கு அழைத்தற்க்கு.



Saturday, September 8, 2012

கிருஷ்ண ஜெயந்தி



இன்று கிருஷ்ண ஜெயந்தி சிலபேர் கொண்டாடுகிறார்கள்.நான் போன மாதத்தில் வந்ததினால் அதை தான் எங்கள் வீட்டில் கொண்டாடினார்கள். நானும் சில பலகாரங்கள் செய்தேன். இன்று கிருஷ்ண ஜெயந்தி வாழ்வில் எல்லோருக்கும் எல்லா வளமும் பெற்று சந்தோஷமா இருக்கணும் என்று வேண்டிணேன்.