கத்தரிக்காய் பிரட்டல்
தேவையானவை
சின்ன கத்தரிக்காய் - 6
வெங்காயம் 1
தக்காளி 1
அரைக்க
துறுவிய தேங்காய்
சின்ன வெங்காயம்
பூண்டு
சோம்பு
கறிவேப்பிலை
தாளிக்க
எண்ணெய் 1/2 தே.க
கடுகு 1/4 தே.க
பெருங்காயத்தூள் 1/4 தே.க
வெந்தயம் 1/4 தே.க
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை
முதலில் அரைக்கவேண்டியதை அரைக்கவும்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் தாளிக்கயுள்ளதை தாளித்து பின் அரைத்த கலவையை விட்டு குறைந்த தீயில் வைத்து வதக்கவுக்ம், வதங்கியதும் வெட்டியுள்ள கத்தரிக்காயை சேர்த்து நன்றாக கிளறி விட்டு அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பும் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
இது சாததிற்க்கு தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
நல்லெண்ய் சேர்த்து வதக்கினால மேலும் சுவை கூடும்.
சிலர் பூண்டு சேர்த்தும் செய்வார்கள்.
எளிதில் செய்யகூடிய பிரட்டல். கத்தரிக்காய் குழையாமல் வேகவைத்து எடுக்கவும்.
நான் மனோ சாமிநாதன் அவர்களின் கத்தரிக்காய் பிரட்டலை சின்ன மாற்றத்தோடு செய்தேன், மிகவும் ருசியாக இருந்தது.