Friday, May 31, 2013
ஒட்ஸ் உப்புமா
தேவையானவை.
ஒட்ஸ்(Old Fashion Oats) 1 கப்
எண்ணெய் 1 தே.க
மிளகாய் வற்றல் 1
பச்சைமிள்காய் 1
வெங்காயம் 1
தக்காளீ 1
பச்சை பட்டாணி 1 தே.க
இஞ்ஞி கொஞ்சம்
தாளிக்க தேவையாவ அளவு
உப்பு
கடுகு
கறிவேப்பிலை
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
செய்முறை
ஒட்ஸை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும். சிவக்க கூடாது.
சூடு ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
வெங்காயம் பொடியாக அரிந்து வைக்கவும்.
தக்காளி பொடியாக அரியவும்
பச்சைமிளகாயை நீட்டமாக வெட்டிவைக்கவும்,
கடாயில் என்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து பின் வெங்காயம், தக்காளி, பச்சை பட்டாணி சேர்த்து வதக்கியதும் அரை கப் தண்ணிர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்ததும் பொடித்துள்ள ஒட்ஸை சேர்த்து நன்றாக கிளறி குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வைக்கவும்.
ஒட்ஸ் சீக்கிரம் வெந்து விடும்.
சுவையான எளிதில் செய்யகூடிய ஒட்ஸ் உப்புமா.
ஹெல்தி+டயட் சிற்றுண்டி.
குறிப்பு: ஒட்ஸ் பிடிக்காதவர்கள் இதில் கொஞ்சம் ரவை(கோதுமை ரவை) சேர்த்தும் செய்யலாம்.
Subscribe to:
Posts (Atom)