Friday, April 29, 2011

சமோசா பேல்பொரி(Samosa Bhel)













தேவையானவை
சமோசா 4 ரெடிமேட் சமோசா அல்லது ப்ரெஷ்
பொரி 1 கப்
சேவ்(ஒமபொடி) 1/2 கப்
வெங்காயம் பொடியாக அரிந்தது 1/2 கப்
தக்காளி பொடியாக அரிந்தது 1
உருளை கிழங்கு 1 வேகவைத்தது
கொத்தமல்லி இலை கொஞ்சம்
லெமன் ஜூஸ் 1/2 தே.க
இனிப்பு சட்னி
புதினா சட்னி
உப்பு தேவைகேற்ப்ப

செய்முறை

சமோசாவை சின்னதாக் கையால் நொருக்கி அல்லது பிய்த்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, வேகவைத்த உருளைகிழங்கு எல்லாவற்றையும் ஒரு பௌளில் போடவும்.
சாப்பிடுவதற்க்கு முன் சேவ்வும், பொரியும் சேர்த்து மேலே லெமன் ஜுஸ்,உப்பு இனிப்பு சட்னி, புதினா சட்னி விட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
காரம் வேண்டுவர்களுக்கு கொஞ்சம் சாட் மசாலா தூவி சாப்பிடவும்.
எளிதில் செய்ய கூடியது.

Thursday, April 14, 2011

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனிப்பு போளி

எல்லா தமிழ் மக்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.






















Monday, April 4, 2011

HAAPY UGADI WISHES

HAPPY UGADI





Friday, April 1, 2011

பீன்ஸ் சன்னா கறி.


பீன்ஸ் சன்னா கறி

தேவையானவை


பீன்ஸ் - பொடியாக அரிந்தது 1 கப்
கடலை - ஊற வைத்தது 1/4 கப்
வெங்காயம் - 1 பெரிது பொடியாக அரிந்தது
தக்காளி - 1 பொடியாக அரிந்தது.
சாம்பார் துள் - 1 தே.க
தாளிக்க

எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
மிளாகாய் வற்றல் - 1
பெருங்காயதூள் - 1/2 தே.க
கறிவேப்பிலை - 4 இலை


செய்முறை

பீன்ஸை தேவையான உப்பு சேர்த்து 15 நிமிடம் வேகவைக்கவும்.
கொண்டைகடலையையும் உப்பு சேர்த்து வேகவைத்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து, சாம்பார் தூள் சேர்த்து வேகவைத்துள்ள பீன்ஸையும், வேகவைத்துள்ள கொண்டைகடலையும் சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடம் முடி போட்டு வேகவிடவும்.

பீன்ஸ சண்ணா ரெடி.
இதை சப்பாத்திக்குள் வைத்து ரோல் செய்து லஞ்ச் பாக்ஸுக்கு எடுத்து செல்லலாம்.
சாத்ததிற்க்கு தொட்டு சாப்பிட நல்ல காம்பினேஷன்.

குறிப்பு: பூண்டு,சோம்பு சேர்த்தும் செய்யலாம்.


Thursday, March 24, 2011

தக்காளி பிரியாணி(பர்த்டே ஸ்பெஷல்)



இன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி
எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மெனு. என்னவரும்ம் என் குட்டிஸும் நைட் வெளியில் போய் சாப்பிடலாம் என்று சொல்லிட்டாங்க, அவங்க ட்ரிட் இன்றைக்கு.


தேவையானவை


பாஸ்மதி அரிசி 1 கப்
தக்காளி 4
பச்சைமிளகாய் 2
வெங்காயம் 1
பூண்டு 2
இஞ்ஞி 1 துண்டு
தேங்காய பால் 1/2 கப்
கரம் மசாலா தூள் 1 தே.க



மசாலாவிற்க்கு

பட்டை 1 துண்டு
நெய் 2 தே.க
ஏலம் 2
பிரியாணி இலை 2


செய்முறை

பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்கயுள்ளதை தாளிக்கவும்.
வெங்காயம் பெரியதாக அரிந்து அதையும் சேர்த்து வதக்கவும்.
இஞ்ஞி பூண்டு பேஸ்ட்டும் சேர்த்து வதக்கவும்.
அதில் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணிர் வடித்துவிட்டு சேர்த்து வதக்கவும்.
இதில் கரம்மசாலா தூள், அரைத்துள்ள தக்காளி பேஸ்ட், தேங்காய பால் எல்லாம் சேர்த்து
நன்றாக கலந்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரில்(1:2)தண்ணிர் வைத்து 1 விசில் வைத்தெடுக்கவும்.
ரைஸ் குக்கர் என்றால்
தண்ணிர் - 1 கப்
தேங்காய பால் - 1/2 கப்
என்ற விகிதத்தில் வைக்கவும்.
சுவையான தக்காளி பிரியாணி நல்ல ஆறியதும் மேலே கொஞ்சம் நெய் ஊற்றி கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
வெங்காயம் ரைத்தா, வெள்ளரி ரைத்தா சேர்த்து சாப்பிடலாம்.



Thursday, March 17, 2011

கீரை மிளகூட்டல் (கேரளா ஸ்டைல்)



கீரை மிளகூட்டல்

தேவையானவை


கீரை ஒரு கட்டு
பாசிபருப்பு அல்லது துவரம்பருப்பு 1/4 கப்
வற்றல் மிளகாய் 2

மசாலா அரைக்க

தேங்காய துறுவியது 4 தே.கரண்டி
சீரகம் 1/2 டீ ஸ்பூன்
பச்சை அரிசி 1/2 டீ ஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் 1 தே.க
கடுகு 1/2 தே.க
உளுந்தம்பருப்பு 1/2 தே.க
வற்றல் மிளகாய் 1
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை

துவரம்பருப்பு அல்லது பாசி பருப்பை வேகவைத்தெடுக்கவும்.
கீரரையை நல்ல மண்போக அலசி பொடியாக அரிந்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்னெய் விட்டு தாளிக்கயுள்ளதை போட்டு தாளிக்கவும்.
கீரையை சேர்த்து வதக்கி அதில் வெந்த பருப்பு, உப்பும் சேர்த்து நன்றாக கிளறி விட்டு
கொஞ்சமா தண்னிர் சேர்த்து வேகவிடவும்.
அரைத்துள்ள மசாலாவை சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
கொஞ்சம் தேங்காய எண்ணெய் சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிட்டு
எடுக்கவும். நல்ல கமகம கீரை மிளகூட்டல் ரெடி.
கீரை சாப்பிட பிடிக்காதவங்க கூட இதை விரும்பி சாப்பிடுவாங்க.
சூடான சாதத்தில் இதை ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். நல்ல ருசியாக இருக்கும்.
இதற்க்கு தொட்டு கொள்ள பொரித்த அப்பளம், நல்ல வாழைக்காய், உருளை வறுவலோடு சாப்பிடலாம்.