Saturday, March 1, 2014
ரோஸ்டட் உருளைகிழங்கு
தேவையானவை
சின்ன உருளைகிழங்கு 1/4 கிலோ (உப்பு சேர்த்து வேகவைக்கவும்)
எண்ணெய் 1/2 தே.க
கடுகு 1/4 தே.க
மஞ்சள்தூள் 1/4 தே.க
மிளகாய்த்தூள் 1/4 தே.க
பெருங்காயத்தூள் 1/4 தே.க
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை போட்டு தாளிக்கவும்
தீயை மிதமாக வைத்து தேவையான அளவு காரத்திற்கேப்ப சேர்த்து மீண்டும் தேவையான
அளவு உப்பு சேர்த்து மஞ்சள்தூள்
வேகவைத்து தோலுரித்த உருளையை சேர்க்கவும்.
மிதமான தீயில் மூடி போடாமல் வேகவைத்து எடுக்கவும்.நல்ல கிரிஸ்பியான உருளை ரோஸ்ட் ரெடி.
Saturday, November 2, 2013
Thursday, June 27, 2013
டபுள் பீன்ஸ் கூட்டு
தேவையானவை
டபுள் பீன்ஸ் ஊற வைத்தது 1 கப்
கடலைபருப்பு 2 தே . க
உப்பு தேவைக்கேப்ப
அரைக்க
தேங்காய் துறுவியது 1/4 கப்
உளுத்தம் பருப்பு 1 தே.க
மிளகு 1/4 தே.க
வற்றல் மிளகாய் 1
சீரகம் 1/2 தே.க
தாளிக்க
எண்ணெய் 1 தே.க
கடுகு 1/2 தெ.க
வற்றல் மிளகாய் 1
உளுத்தம் பருப்பு 1/4 தே.க
கறிவேப்பிலை கொஞ்சம்
பெருங்காயத்தூள் 1/4 தே.க
செய்முறை
டபுள் பீன்ஸை 24 மணிநேரம் ஊறவைத்து எடுக்கவும்.( எங்க வீட்டில் கடலைபரூப்பு பதில் வேர்க்கடலை சேர்த்தும் செய்வதுண்டு
)
ஒரு கடாயில் அரைக்கயுள்ளதை தேங்காய தவிர மற்ற எல்லாவற்றையும் நல்ல மணம் வரும் வரை வறுத்தெடுக்கவும்(ட்ர ரோஸ்ட்).
பாத்திரத்தில் டபுள் பீன்ஸ்+கடலைபருப்பு உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
தேங்காயும் சேர்த்து வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்களோடு அரைத்தெடுக்கவும்.
அரைத்த விழுதோடு கொஞ்சம் தண்ணிர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும். நன்றாக கொதித்ததும் தாளிக்கயுள்ளதை சேர்த்து தாளித்தெடுக்கவும்.
இது சாதத்தோடு சேர்த்து சாப்பிட நல்ல ஹெல்தியான கூட்டு ரெடி.
இதேயே சப்பாத்தி, பூரிக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிடனும் என்றால் கொஞ்சம் மாசாலாவை மாற்றி செய்தால் போதும்
வெங்காயம், தக்காளி 1 எடுத்து அரிந்து அதை நன்றாக வதக்கி பூண்டு, இஞ்ஞி பச்சமிளகாய் விழுது சேர்த்து வதக்கி கொஞ்சம் கரம் மசாலா அல்லது கிச்சன் கிங் மசாலா + கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்றாக வதக்கி காரத்திற்கேற்ப்ப சில்லி பௌடர் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதிக்கி விட்டு தளர்வாக வேண்டுவர்கள் மேலும் கொஞ்சம் தண்ணிர் சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான ப்ரோட்டின் சப்ஜி ரெடி.
செய்து பார்த்து உங்க கமெண்ட்ஸை சொல்லுங்க.
Friday, May 31, 2013
ஒட்ஸ் உப்புமா
தேவையானவை.
ஒட்ஸ்(Old Fashion Oats) 1 கப்
எண்ணெய் 1 தே.க
மிளகாய் வற்றல் 1
பச்சைமிள்காய் 1
வெங்காயம் 1
தக்காளீ 1
பச்சை பட்டாணி 1 தே.க
இஞ்ஞி கொஞ்சம்
தாளிக்க தேவையாவ அளவு
உப்பு
கடுகு
கறிவேப்பிலை
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
செய்முறை
ஒட்ஸை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும். சிவக்க கூடாது.
சூடு ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
வெங்காயம் பொடியாக அரிந்து வைக்கவும்.
தக்காளி பொடியாக அரியவும்
பச்சைமிளகாயை நீட்டமாக வெட்டிவைக்கவும்,
கடாயில் என்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து பின் வெங்காயம், தக்காளி, பச்சை பட்டாணி சேர்த்து வதக்கியதும் அரை கப் தண்ணிர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்ததும் பொடித்துள்ள ஒட்ஸை சேர்த்து நன்றாக கிளறி குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வைக்கவும்.
ஒட்ஸ் சீக்கிரம் வெந்து விடும்.
சுவையான எளிதில் செய்யகூடிய ஒட்ஸ் உப்புமா.
ஹெல்தி+டயட் சிற்றுண்டி.
குறிப்பு: ஒட்ஸ் பிடிக்காதவர்கள் இதில் கொஞ்சம் ரவை(கோதுமை ரவை) சேர்த்தும் செய்யலாம்.

Tuesday, April 16, 2013
நினைவாஞ்சலி
இன்று என் தந்தை எங்களை விட்டு பிரிந்து ஒரு வருடமாகிறது.
அவரின் ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்தனை செய்துகொள்கிறேன்.
என் பாசமிக்க அப்பா எப்போடும் சிரித்த முகத்தோடும் நல்ல பாசமோடும் எங்களை வளர்த்து இன்றக்கு நாங்க எல்லோரும் சந்தோஷமாக குடும்பத்தோடும் வாழ்கிறோம் என்றால் அதற்க்கு என் அப்பாவுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்
அப்பா ஒரு நாளும் எங்களை திட்டினது கிடையாது. கோபம் என்பது அவர் குழந்தைகளிடம் ஒரு போதும் காட்டியதில்லை.
பாசமிக்க என் அப்பாவின் பிரிவு எனக்கும் என் குடும்பத்துக்கும் மிகபெரிய அதிர்ச்சி, இழப்பு இன்றும் தாங்கமுடியவில்லை.
அவரின் நல்ல ஆத்மா சாந்தியடைய இறாஇவனிடம் வேண்டுகிறேன்.
நான் அவருக்காக எழுதிய இந்த ஒரு சின்ன கவிதையை அவருக்கு அர்பனிக்கிறேன்.
To My Dad
On the First Anniversary of his Death
Dear Dad(My Appa)
To My Dad
It has been one year since your left us.
I miss you
I miss talking to u
I miss asking for your advice.
I miss your presence at family events.
I spoke to mom today it was hard for her without u
I wish of u were still here with us.
I am sitting here typing this though my tears.
Iam thinking of u and loving u and missing you... today and every day.
Love
To My DadSaturday, February 2, 2013
டோர்டிட்யா பிஸ்ஸா
டோர்ட்டியா பிஸ்ஸா
தேவையானவை
டோர்டியா 1(அவரவர் தேவைகேற்ப்ப)
பிஸ்ஸா சாஸ்
விரும்பிய காய்கறிகள்
துறுவிய சீஸ்
செய்முறை
டோர்டியாவில் டொமொட்டோ சாஸை நனறாக ஒரு கோட் ஸ்ப்ரட் செய்து அதன் மேல் விரும்பியா காய்கறிகள்( மஷ்ரூம், குடமிளகாய், ப்ரோக்கலி,ஆனியன்,ஆர்டிசோக் ஆலிவ்ஸ் பைனாப்பிள்) இங்கு நான் குழந்தைகளுக்காக வெறும் சீஸ் பிஸ்ஸா செய்திருக்கேன். ஒரு கைபிடிக்கும் மேல் கொஞ்சம் துறுவிய சீஸை அதன் மேல் தூவி அவனில் வைத்து எடுத்தால் சூப்பர் டோர்டியா பிஸ்ஸா ரெடி.
எல்லோரும் எளிதில் செய்து அசத்தலாம். சுவையும் மிக நன்றாக இருந்தது. எங்க வீட்டில் வந்த கெஸ்ட்+ குழந்தைகள் எல்லார்ம் விரும்பி சாப்பிட்டாங்க யாரும் நம்பவே இல்லை இது டோர்டியாவில் செய்தது என்று சொன்னதும் சான்ஸே இல்லை ரொம்ப நன்றாக இருந்தது என்று சொல்லி அசத்திட்டாங்க.
நான் இங்கு வீட் (கோதுமையில் செய்தேன்) இதே போல் கார்ன் டோர்டியாவில் செய்யலாம்.
நான் ப்ர்ட் டோஸ்டர் ஒவனில் செய்தேன்.
Monday, January 28, 2013
பருப்பு தொவையல்
பருப்பு தொவையல்
தேவையானவை
துவரம் பருப்பு 1/4 கப்
மிளகாய் வற்றல் 2
தேங்காய் துருவல் 1 தே.க (விரும்பினால்)
பெருங்காயத்தூள் 1/2 தே.க
உப்பு தேவைகேற்ப்ப
பூண்டு (விரும்பினால்) 2 பல்.
நெய் அல்லது எண்ணெய் 1/2 தே.க
செய்முறை
கடாயில் நெய் விட்டு பெருங்காயத்தூள், மிளகாய் வற்றல், பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிதமான தீயில் பொன்நிறாமாக வறுக்கவும்.
சூடு ஆறியதும் மிக்ஸியில் முதலில் பருப்பு வகைகளை போட்டு பொடித்து கொள்ளாவும்.
அடுத்து உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து ரவை பதத்தில் (கொஞ்சம் தண்ணிர் தெளித்து) அரைத்தெடுக்கவும்.
வாய்க்கு ருசியாகவும், ப்ரோட்டின்ஸ் அடங்கியதுமான ஒரு நல்ல தொவையல் ரெடி.
இதற்க்கு மேட்சிங் மிளகு ரசம் அப்பளம் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
மிளகு குழம்பு அல்லது, வற்றல் குழம்பும் நன்றாக இருக்கும்.
எனக்கு 2 வாரமாக காய்ச்சல்,சளி+இருமல். வாய் கசப்பு இருக்கிறதனால் இதை செய்து சாப்பிடனும் போல் இருந்தது.
வாய்க்கு ருசியாக நன்றாக இருந்தது.
Subscribe to:
Posts (Atom)