Wednesday, December 8, 2010

வாழக்காய கிர்ஸ்பி வறுவல்





தேவையானவை

வாழக்காய் 2
தனியா தூள் 1/2 தே.க
மஞ்சள் தூள் 1/2 தே.க
மிளகாய்தூள் 1/2 தே.க
புளி பேஸ்ட் 1/2 தே.க
உப்பு தேவைகேற்ப்ப

தாளிக்க
எண்ணெய் 1/2 தே.க
கடுகு 1/2 தே.க
உளுத்தம்பருப்பு 1/4 தே.க
பெருங்காயத்தூள் 1/2 தே.க
க்றிவேப்பிலை 4 இலைகள்

செய்முறை

வாழைக்காயை நல்ல தோலெடுத்து 1/4 இன்ஞ் கனத்தில் வட்ட வடிவத்தில் வெட்டி புளிபேஸ்ட் அல்லது புளிதண்ணிரில் ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து அதில் தண்ணிரை நன்றாக வடித்து காயை போட்டு நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் தனியாத்தூள்,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள் போட்டு நன்றாக பிரட்டி எடுக்கவும்.
நல்ல கிரிஸ்பி வாழக்காய் வறுவல் ரெடி.
இதை கலந்த சாதம், தயிர்சாதம், வற்றகுழம்பு சாதம் எல்லாவற்றிற்கும் பெஸ்ட் காம்பினேஷன்.
டூருக்கும் எடுத்து செல்ல பெஸ்ட்.

நீண்ட இடைவெளிக்கு பின் வர முடிந்தது. என் கம்யூட்டரில் மேஜர் வைரஸ் அட்டாக் ஆகி டாக்டரிம் சென்று விட்டு நிறய்ய ப்ர்காஷன் மெடிகேசன்ஸோட மீண்டும் உஙக் எல்லோரையும் ஆவலோடு பார்க்க இந்த விஜிஸ் வெஜ் கிச்சன் வந்தாச்சு.


26 comments:

Kurinji said...

curd riceku perfecta erukkum Viji..

அந்நியன் 2 said...

ரொம்ப நாள் கழிச்சு சமைக்கிற மாதுரி தெரியுது,விரதமா ?
ஏழை வீட்டிற்கும் வந்து படிச்சுட்டு போங்கள்.

http://naattamain.blogspot.com/

புவனேஸ்வரி ராமநாதன் said...

பார்க்கவே சூப்பரா இருக்கு.

Pushpa said...

Yummy vazhakka varuval.

Krishnaveni said...

looks yumm

அன்புடன் மலிக்கா said...

விஜி எப்படியிருக்கீங்க நலமா

எனக்கு பிடித்த டிஷ்.. அருமை..

Porkodi (பொற்கொடி) said...

மனக்கண்ணால சாப்பிட்டே 2 பவுண்ட் ஏறிட்டேன் :D

Asiya Omar said...

சூப்பர்,விஜி.

ஹுஸைனம்மா said...

வாழைக்காயைப் புளியில் ஊற வைப்பது ஏன் விஜி?

ஹுஸைனம்மா said...

follow..

மாதேவி said...

சுவையான வறுவல்.

தெய்வசுகந்தி said...

புளி சேர்ப்பது புதிதாக உள்ளது.

Kanchana Radhakrishnan said...

சூப்பர் varuval.

சாருஸ்ரீராஜ் said...

வறுவலுக்கு புளி சேர்ப்பது புதிது .

Vijiskitchencreations said...

kurinji correct.
அந்நியன் 1 எங்கே போச்சு.
அந்நியன் 2 க்கு வந்திட்டேன்.
இல்லிங்க டெய்லி சமைச்சே ஆகனும்.
கொஞ்சம் பிஸி அவ்வள்வு தான்.

Vijiskitchencreations said...

புவனேஸ்வரி நன்றி.
புஸ்ப்பா நன்றி.

Vijiskitchencreations said...

கிருஷ்னவேணி நன்றி.
பொற்கொடி என்ன எப்படி இருக்கிங்க.
பார்த்ததுமே வெயிட்டா சரி சரி நடக்கட்டும்.

Vijiskitchencreations said...

மல்லிகா நான் நலமே. நலம் நலமறியா ஆவல்.

வாங்க எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
அடிக்கடி வந்துட்டு போங்க.

Vijiskitchencreations said...

மாதேவி வாங்க வாங்க.நன்றி.
காஞ்சனா வாங்க நன்றி.

Vijiskitchencreations said...

ஹூசைனம்மா, நன்றி.
உஙகளுக்கும், சாருக்கும்.தெய்வசுகந்திக்கும்
உள்ள டவுட்டை சரி செய்துடலாம்.
எங்க கேரளாவிலே கச்சை வாழை என்று ஒருவித காய் கிடைக்கும் அதுவும் வாழைக்காய் தான்.
அதில் லேசாக புளி தண்னிர் சேர்த்து செய்தால் டேஸ்ட தூக்கிவிடும்.
இங்கு ஒரே ஒரு டைப் தான் கிடைக்கும்.
எண்ணெய் கொஞ்சமா சேர்த்தால் போதும் அதற்க்காகவும், மசாலா ராவாக இல்லாமல் கொஞ்சம் மாயிஸ்டாக காயில் ஒட்டி கொள்வதற்க்கும் தான் சேர்க்கபடுகிறது.
இதிலும் அதே போல் புளி சேர்த்து மசாலா பௌடர் சேர்த்து செய்தால் அதன் ருசியே தனிங்க.
ஒரு ஸ்பூன் புளி தண்னிர் தாங்க சேர்க்கனும்.
மேலும் டவுட் இருந்தால் வேற யாராச்சும் இதே போல் செய்திருக்கிங்களா என்று சொல்லவும்.
நன்றி நன்றி..
ஹுசைனம்மா நன்றி.
வாங்க வந்து 2010 டைரி தொடர் பதிவை ரிப்பன் கட் செய்து தொடங்கி வையுங்க.

மனோ சாமிநாதன் said...

வாழைக்காய் வறுவல் நன்றாக இருக்கிறது விஜி!

GEETHA ACHAL said...

வாழைக்காய் வறுவல் சூப்பர்ப்...அடிக்கடி வந்து பதிவு போடுங்க...வாழ்த்துகள் விஜி...

Padhu Sankar said...

So inviting!! Thanks a lot for dropping by

Reva said...

ungal samaiyal kuripugal arumai...puthandu nal vaazhthukkal..
Reva.

Anonymous said...

சாம்பார் சாதத்துடன் அருமையாக இருக்கும்.புத்தாண்டு நல்வாழ்த்துகள் விஜி

துளசி கோபால் said...

PRIVATE MAIL

Dear Viji,

I am in Chandigarh.

Just came to Chennai for XMAS holidays. Leaving to Chandigarh on 2nd early morning flight.

My e mail ID

gopal.tulsi@gmail.com

Happy New Year.