தேவையானவை
டொமேட்டோ பாஸ்தா 1 கப்
பார்மாஸான் சீஸ் 1/4 கப்
பட்டர் 1 தே.க
உப்பு தேவைகேற்ப்ப
பேஸில் இலை கொஞ்சம்
வெங்காயம் பெரிது 1 பெரிய துண்டுகளாக அரிந்தது
கேப்ஸிகம் 1 துண்டுகளாக்கியது
ப்ரோசன் பீஸ் 1/4 கப்
சில்லி ப்ளேக்ஸ் காரத்திற்கேப்ப
ஓலிவ் எண்னெய் 1/2 தே.க
செய்முறை
இந்த பாஸ்தா டொமேட்டோ ப்யூரியில் செய்து விற்கபடுகிறது.
இதற்க்கு தனியாக டொமேட்டோ சாஸ் தேவையில்லை.
பாஸ்தாவை நிறய்ய தண்னிர் விட்டு வேகவிடவும். கையில் எடுத்து பார்த்து அதை ஒட்டாமல் ப்ரஸ் செய்தால் நல்ல ப்ரஸ்ஸானல் வெந்து இருக்கிறது.
கடாயில் பட்டர்+ஒலிவ் எண்ணெய் விட்டு சூடானதும் சில்லி ப்ளேக்ஸ் போடவும் அடுத்து பொடியாக அரிந்துள்ள பேஸில் இலைகளையும் போட்டு வெங்காயம், கேப்ஸிகம், பீஸ் எல்லாவற்றையும் கலந்து நன்றாக வதக்கவும். க்ரன்சியாக வதக்க வேண்டும் நல்ல மசிய விடவேண்டாம், வெந்த பாஸ்தாவை அதில் சேர்த்து துறுவிய சிஸ் தூவி குறைந்த தீயில் கலந்து விட்டு மூடி விடவும். ஐந்து நிமிடம் கழிந்து சர்விங் பௌலில் மாற்றி மேல் பேஸில் இலை, துறுவிய சீஸ் சேர்த்து பரிமாறவும்.
குட்டிஸ், பெரியவங்க எல்லோருக்கும் பிடித்த ஹெல்தியான உணவு.
4 comments:
பாஸ்தா அதுவும் டொமட்டோ சீஸ் பாஸ்தா,கேட்கவே வேண்டாம், இப்பவே சுவைக்கத்தோணுது.சூப்பர் யம்..
nan thangalin puthu thozhi.my fav pasta.yummy.check my space when you time.
சூப்பர்
டொமட்டோ பாஸ்டா என்றே கிடைக்கீறதா? நான் இதுவரை கவனிக்கலை, நல்லா இருக்கு!
Post a Comment