Friday, January 8, 2010
வெஜ் கேசடீயா
வெஜ் கேசடீயா Veg quesadilla
தேவையானவை
டோர்டியா - 2
வெங்காயம் - 1
சீஸ் துறுவியது - 1/2 கப்
காயகறி கலவை
ப்ரோக்கலி,காரட்,
கேபேஜ்,காப்ஸிகம் - 1/2 கப்
உப்பு - தேவைகேற்ப்ப
கறுப்பு பீன்ஸ் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1/4 தே.க
போர்சன் அல்லது டின் பின்ஸ் ரெடியாக கிடைக்கும்.
பின்ஸ் முதல் நாள் இரவே ஊறவைத்து வேகவைக்கவும்.
பானில் எண்னெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் பீன்ஸ், காய்கறி கலவை,உப்பு சேர்த்து வதக்கவும்.
தவாவில் டோர்டியாவை போட்டு மிதமான தீயில் இரு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
டோர்டியாவின் அரைபாகத்தில் காய்கறி கலவை, துறுவிய
சீஸ் கலவை வைத்து மறு பாதியால் மூடவும்.
அதன் மேல் கொஞ்சம் பட்டர் அல்லது எண்ணெய் தடவி
மீண்டும் தவாவில் மூடிய டோர்டியாவை போட்டு உள்ளே
இருக்கும் சீஸ் உருகும் வரை வைத்து எடுக்கவும்.
இதை விரும்பிய வடிவில் வெட்டி சாப்பிடலாம்.
நல்ல சத்தான ருசியான வெஜ் கேசடியா தயார்.
குழந்தைகளுக்கு சீஸ் கேசடியா ஸ்குல் லன்ஞ் குடுத்தனுப்பலாம்.
எல்லாரும் விரும்பி உண்ணகூடியது.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சரிங்க, குழந்த பொறந்ததும் குடுத்து பாக்கறேங்க.....
எங்கடா ஆளை கானோம் என்று நினைத்தேன்.இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்திருந்து நானே அங்கு அண்ணாமலையான பார்க்க வரலாம் என்று இருந்தேன்.
விஜீ ஏன் பின்னூட்டம் அழிந்து இருக்கு
கமெண்ட்ஸில் எதோ ஒன்றை சரி செய்ய போய் இது போயிடுச்சு. இதுக்கு தான் குரு வேண்டும்.
மன்னித்து கொள்ளவும் ஜலீ.
Post a Comment