Saturday, December 19, 2009

வெஜ் ப்ரைட் ரைஸ்



வெஜ் ப்ரைட் ரைஸ்
-----------------

தேவையானவை
---------------

பாஸ்மதி அரிசி - 1 கப்
காரட் - 1
க்ரின் பீஸ் - 1/2 கப்
காப்ஸிகம் - 1
வெங்காயம் - 1
உருளை - 1
பீன்ஸ் - 1/2 கப்
தக்காளி - 1


மசாலா
-------

பிரியாணி இலை - 1
பூண்டு - 1
இஞ்ஞி - 1
சில்லி சாஸ் - 1 தே.க
நெய் - 1/2 தே.க
எண்னெய் - 1/2 தே.க


செய்முறை
----------

பாஸ்மதி அரிசியை தண்னிரில் அலசி
பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

காய்கறிகளை 1” நீளத்தில் மெல்லிதாக கட் செய்யவும்.
வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை டைஸ்ஸகாகவும்
கட் செய்யவும்.

இஞ்ஞி, பூண்டு பேஸ்டாகவும் சேர்க்கலாம், இல்லை அதை
சீவலில் சீவி சேர்க்கவும்.

குக்கர் பாத்திரத்தில் எண்னெய்+நெய் விட்டு
மாசால சாமன்களை போட்டு வறுத்து அதில்
வெங்காயம், தக்காளியையும் போட்டு வதக்கி
பின் காயகறிகளை போட்டு வதக்கி ஊற வைத்துள்ள
அரிசியும் போட்டு வதக்கி சில்லி சாஸ்,உப்பு சேர்த்து 2 கப்
தண்ணிர் விட்டு குக்கரில் வேகவிடவும்.
அரிசியை தனியாகவும் வேகவத்தும் காய்கறி கலவையுடன்
சேர்க்கலாம்.


குக்கரில் 1 விசில் வைத்தால் போதும்.
குறிப்பு:அரிசி குழைய கூடாது காய்கறிகளும் நல்ல வேகவேண்டாம்.

இதற்க்கு தக்காளி வெங்காயம் ரைத்தா சேர்த்து சாப்பிடலாம்.

1 comment:

Jaleela Kamal said...

அட குக்கரில் வைத்து ஈசியா வேலை முடிந்து விடும் போல இருக்கே