Tuesday, December 15, 2009

பைனாப்பிள் ரவா கேசரி






தேவையானவை
---------------------

ரவை - 1 கப்
சீனி - 3/4 கப்
நெய் - 1/2 கப்
பைனாப்பிள் எஸன்ஸ் - 1/2 தே.க
முந்திரி - 1/2 தே.க
கிஸ்மிஸ் - 1/4 தே.க
கேசரி கலர் - 1/4 தே.க

செய்முறை
------------------
கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கிஸ்மிஸ்,முந்திரி சேர்த்து
வறுக்கவும்.

அதே கடாயில் மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு
அடுப்பை நிதானமாக வைத்து ரவையை சேர்த்து
வாசனை போகும் வரை வறுக்கவும்.

கடாயில் 2 கப் தண்னிர் விட்டு கொதிக்க வைக்கவும்.
ரவையை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் பைனாப்பிள்
எஸன்ஸ்,சீனி, கேசரி கலர் சேர்த்து மேலும் நன்றாக கிளறி அடுப்பை குறைந்த தீயில்
வைத்து வேகவிடவும்.

கடாயில் ஒட்டாமல் வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக
நெய் சேர்த்து கிளறவும்.
நன்றாக நெய் மிதந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது
கிஸ்மிஸ்,முந்திரி,ஏலதூள் தூவி ஒரு நெய் தடவிய தட்டில்
கொட்டி வில்லைகளாக போடவும். வில்லைகள் போடமலும்
பரிமாறலாம்.

No comments: