கீரை மிளகூட்டல்
தேவையானவை
கீரை - 1கட்டு
அரைக்க
-------
தேங்காய் துறுவல் - 2 தே.க
மிளகாய் வற்றல் - 1
மிளகு - 1/2 தே.க
சீரகம் - 1/2 தே.க
உளுந்து - 1/2 தே.க
தாளிக்க
தே.எண்ணெய்அல்லது(எந்த) - 1/2 தே.க
உளுந்தம் பருப்பு - 1/4 தே.க
கடுகு - 1/ 4தே.க
பெருங்காயதூள் - 14 தே.க
கறிவேப்பிலை - கொஞசம்
செய்முறை
கீரையை மண்போக நன்றாக அலசி பொடியாக அரியவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து, மிளகு,மிளாகாய் போட்டு வறுத்து எடுக்கவும்.சூடு ஆறியது தேங்காய துருவல் சேர்த்து நல்ல அரைக்கவும்.
கீரை கொஞ்சமாக உப்பு சேர்த்து தண்ணிர் விட்டு முடாமல் வேக வைக்கவும், வெந்ததும் அதில் அரைத்துள்ள விழுதை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் மூடி போடாமல் வேகவைக்கவும்.
தாளிக்கயுள்ளதை தாளித்து அதில் சேர்க்கவும்.
டிப்ஸ்: கீரை பார்க்க பச்சையாக வேண்டுமென்றால் மூடாமல் குறைந்த தீயில் வைக்கவும்,
வற்றல் குழம்பு, சுட்ட அப்பளம், கீரை காம்பினேஷனோட சூடா சாதம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
கீரை சாப்பிட விரும்பாதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.




