Thursday, November 19, 2009

தேன்குழல் முறுக்கு


















தேவையானவை
---------------------

அரிசிமாவு - 1கப்
உளுத்தம் மாவு - 1/2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
சீரகம் - 1/2 தே.க
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

அரிசிமாவு, உளுத்தம்மாவு சீரகம்,உப்பு எல்லாவற்றையும்
சூடாகியிருக்கும் எண்னெயில் இருந்து 1 தே.க விட்டு
கலந்து கொஞ்சம் தண்ணிர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
மாவு ரொம்ப கெட்டியாகவும், தளர்வாகவும் இல்லாமல்
இருக்கனும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் மாவை தேன்குழல்
முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து பொன்நிறமாக பொரித்து
எடுக்கவும்.

இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் 1 வாரம்
வரை கெடாமல் இருக்கும்.

மனகொம்பு

















தேவையானவை


பச்சரிசி மாவு - 1 கப்
பச்சபருப்பு மாவு - 1/2கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
உப்பு - தேவைகேற்ப்ப
வெண்னெய் - 1/4 தே.க

செய்முறை

பச்சபருப்பை வெறும் கடாயில் நல்ல
வாசனை போக வறுத்து பொடிக்கவும்.
பொட்டுக்க்டலையை பொடிக்கவும்.
பச்சரிசி மாவு+பொட்டுக்க்டலை பருப்பு மாவு+பச்சப்ருப்பு மாவு,வெண்ணெய்,உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கொஞ்சம் தண்ணிர் தெளித்து கையில் பிசைவது போல்
வரும்போது எடுத்து மனகொம்பு முறுக்கு அச்சில் போட்டு எண்ணெய் சூடானதும் பிழிந்து பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.
இதை காற்று புகாத டப்ப்பாவில் போட்டு வைத்தால் நல்ல மொறுவென்று இருக்கும்.

இதில் நிறய்ய ப்ரோட்டின்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்னாக்.

கடலை பருப்பு சுண்டல்

Tuesday, November 17, 2009

உளுந்து வடை



உளுந்து வடை
--------------

உளுந்து - 1கப்
உப்பு - தேவைகேற்ப்ப
எண்னெய் - பொறிக்க
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை

உளுந்தை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
நல்ல தண்னிரை வடித்து ப்ளண்டரில் அல்லது
க்ரைண்டரில் தண்ன்ரிர் கொஞ்சமாக தெளித்து உப்பும்
சேர்த்து நல்ல கெட்டியாக அரைக்கவும்.
உடனே செய்வதாயிருந்தால் 1 தே.க அரிசிமாவு சேர்த்து
செய்தால் நல்ல மொறு மொறு வடையாக சாப்பிடலாம்.
ப்ரிட்ஜில் வைத்து செய்தால் மாவு நல்ல கெட்டியாக இருக்கும்.
இதில் விரும்பினால் வெங்காயம், பச்சமிளகாய் சேர்த்தும்
செய்யலாம்.

குறிப்பு: மாவு வடையாக தட்ட வராமல் இருந்தால் அதில்
கொஞ்சம் அரிசிமாவு சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்.
இதற்க்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

காலிப்ஃளவர் பராத்தா
















தேவையானவை
----------------

கோதுமை மாவு - 2 கப்
நெய்


ஸ்டப் செய்வதற்க்கு
--------------------------

காஃலிப்ளவர் - துறுவியது 1 கப்
பச்சைமிளகாய் - 1 அரிந்தது
சீரகம் - 1/4 தே.க
கொத்தமல்லி இலை - கொஞ்சம் அரிந்தது
உப்பு - தேவைகேற்ப்ப

செய்முறை
-------------
கோதுமைமாவை நன்றாக தண்னிர் சேர்த்து
பிசைந்து அரைமணி நேரம் வைக்கவும்.

துறுவிய காஃலிப்ளவரை தண்னிர் இல்லாமல் வடித்து வைக்கவும்.

கடாயில் எண்னெய் விட்டு அதில் சீரகம் போட்டு
பொரிந்தது மீதமுள்ள எல்லாவற்றையும் ஸ்டப்
செய்யவேண்டியவற்றை போட்டு வதக்கி எடுக்கவும்.

ஒரு நெல்லிகாயை அளவு மாவை எடுத்து அதை சின்ன
வட்டமாக இட்டு அதில் நடுவில் ஒரு ஸ்பூன் ஸ்டபிங்
கலவையை எடுத்து வைத்து மூடி எல்லா இடமும் ஒரே
போல பரவலாக வரும்படி இட்டு குறைந்த தீயில் அடுப்பை
வைத்து தோசைகல் போட்டு 2 புறமும் திருப்பி போட்டு கொஞ்சம் நெய் விட்டு தடவி அதை எடுத்து வைக்கவும்.

இதற்க்கு தொட்டு கொள்ள தயிர் அல்லது ஊறுகாய் நன்றாக இருக்கும்.