Monday, October 25, 2010

விழாவுக்கு வாங்க ஸ்விட் சாப்பிடுங்க



அப்பம்



தேவையானவை


கோதுமை மாவு 1 கப்
அரிசி மாவு 1 தே.க
வாழைபழம் 1
ஏலத்தூள் 1/2 தே.க
வெல்லம் 1 கப் (தூளாக்கியது)
எண்ணெய் பொரிக்க

செய்முறை


பாத்திரத்தில் வாழைபழத்தை தோலெடுத்து நன்றாக மாஷரால்
அல்லது முள்கரண்டியால மசிக்கவும்.அதே பாத்திரத்தில் மாவு
வகைகளை போடவும்.ஏலத்துளையும் சேர்க்கவும்.
தூளாக்கிய வெல்லத்தை ஒரு பௌலில் கொஞ்சமா தண்னிர்
விட்டு அது கொதித்ததும் வெல்லத்தை சேர்த்து கொதிக்கவிடவும்.
கெட்டியானதும் அதை இந்த மாவுக்லவையில் ஊற்றி நன்றாக
முள்க்ரண்டியால் கலக்கவும்.
கடாய் அல்லது குழிபணியார சட்டியில் எண்ணெய் விட்டு அது
சூடானதும் ஒரு பெரிய ஸ்பூனால் மாவை எடுத்து ஊற்றவும்.
மிதமான தீயில் வைத்து சூடக்கவும்.
பொன்னிறமானதும் திருப்பி போட்டு மறுபக்கமும் பொன்னிறமானதும்எடுக்கவும்.
இந்த அப்பம் மிகவும் டேஸ்டியாகவும், சாப்டாகவும் சாப்பிட நன்றாக இருக்கும்.
இதில் நல்ல கனிந்த வாழைபழம் 2 சேர்த்தால் மேலும் மிருதுவாக இருக்கும்.
குழந்தகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவாங்க
செய்வதற்க்கு எளிது.

என்னோட 100 வது பதிவு இந்த இனிய அப்பதோடு உங்களை மேலும் இனீப்பூட்ட
எப்பவும் போல் உங்க ஒத்துழைப்போடு தொடர்கிறேன்.
நன்றி நன்றி நன்றி நன்றி ..................
என் எல்லா நணபர்களுக்கும் இதில் தொடர்கின்ற என் தள நட்புகளுக்கும்
இனைய தளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

என் தள வருகையாளார்கள் எல்லொருக்கும் 100 வித இனிப்பு சமையோலோடு நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்.
குறிப்பு: இந்த் இனிப்பு ஸுகர் ப்ரி+பேட் ப்ரி.இது வெல்லதில் செய்வதால் தாரளாமாக எல்லோரும் சாப்பிடலாம்.


Monday, October 11, 2010

தேவதையில் விஜிஸ் கிரியேஷன்ஸ்



தேவதை இதழில்



இந்த மாத தேவதை இதழின் என் வலைதளம் வந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செதியை தெரிவித்து கொள்கிறேன்.


தேவதை இதழை நான் விடாமல் படித்து வருகிறேன். இந்தியாவில் இருந்து என் சிஸ்டர் தொடர்ந்து இதுவும், மங்கையர் மலரும் அனுப்புவிடுவாங்க.நானும் இதுவரைக்கும் விடாமல் விரும்பி படிக்கும் இதழ்கள்.


தேவதை இல்லதரசிகளுக்கும்,பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரு நல்ல பயனுள்ள மாதமிருமுறை இதழாக மலருகிறது. நல்ல பயனுள்ல தகவல்கள், செய்திகள் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் தேவதை.


அதில் என்னுடைய்ய வலைதலமும் வந்துள்ளது என்று கேட்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இதை வெளியிட்ட திரு நவநீதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நிங்களும் எல்லோரும் பார்த்து படித்துவிட்டு சொல்லுங்க.


Friday, October 8, 2010

Akshya's 10th Birthday


Haapy Birthday Akshyaya



இப்ப பிறந்தது போல் இருந்தது, அதற்க்குள் வளர்ந்து விட்டாள்.

காலங்கள் வெகு வேகமாக போகிறது.

இன்று என் மகள் அக்‌ஷ்யாவின் பத்தாவது பிறந்தநாள்.

கேக் + பார்டி.


எல்லாரும் பார்டிக்கு வாங்க வாங்க என்று வரவேற்கிறோம்.

என்னடா எப்படி வருவது என்று யோசிப்பிங்க. யோசித்து வைங்க.

எப்பவும் என் மகளுக்கு உங்க எல்லோருடைய்ய ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்று பெருமையுடன் மீண்டும் நன்றி கூறிகொள்கிறேன்..











Friday, October 1, 2010

தண்டு கீரை பொரியல்




தேவையானவை

தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது
வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது
பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது

தாளிக்க

எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
உளுத்தம் பருப்பு - 1/4 தே.க
பெருங்காய தூள் - 1/4 தே.க
கறிவேப்பிலை - கொன்ச்ஜம்

செய்முறை

தண்டுகீரையை நல்ல மண்போக அலசி தண்டு கீரையை நல்ல
சின்ன துண்டுகளாக அரியவும்.
வெங்கயாத்தை பொடியாக அரியவும்.
பருப்பை மலர வேகவைக்கவும்.
கடாயில் தாளிக்கயுள்ளதை தாளித்து வெங்காயம்,கீரை,
உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெந்ததும் பருப்பையும் சேர்த்து வேண்டுமானல் துறுவிய
தேங்காயும் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.
இது சாதத்திற்க்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.