Showing posts with label விசேஷங்கள். Show all posts
Showing posts with label விசேஷங்கள். Show all posts

Saturday, September 8, 2012

கிருஷ்ண ஜெயந்தி



இன்று கிருஷ்ண ஜெயந்தி சிலபேர் கொண்டாடுகிறார்கள்.நான் போன மாதத்தில் வந்ததினால் அதை தான் எங்கள் வீட்டில் கொண்டாடினார்கள். நானும் சில பலகாரங்கள் செய்தேன். இன்று கிருஷ்ண ஜெயந்தி வாழ்வில் எல்லோருக்கும் எல்லா வளமும் பெற்று சந்தோஷமா இருக்கணும் என்று வேண்டிணேன்.


Tuesday, August 28, 2012

ஓணம்

ஓணா விழா கொண்டாடும் எல்லோருக்கும் என் இணிய ஓண வாழ்த்துக்கள்.





இந்த தடவை எங்க வீட்டில் ரொம்ப சிம்பிள். அப்பா மறைந்து நாட்கள் ஆகவில்லை. இருந்தாலும் வீட்டில் பெரியவர்கள் சொன்னதினால் சிம்பிள்.

அவியல், அடை ப்ரதமன்.




Tuesday, August 14, 2012

சுதந்திரதின ஊத்தப்பம்











என்னுடைய்ய சுதந்திர தின ஊத்தப்பம் ரெசிப்பி+படங்களுடன் தமிழ்குடும்பத்தில் இருக்கு.



http://www.tamilkudumbam.com/2009-03-20-12-54-
37/2933.html
இந்தியர்களுக்கு எல்லாம் எனதினிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.
ஜெய் ஹிந்.




Saturday, April 14, 2012

தமிழ் புதாண்டு வாழ்த்துக்கள் - இனிய விஷு

இனிப்பு போளி






















எல்லா வலையுலக நண்பர்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எல்லா மலையாள நணபர்களுக்கும் என் இனிய விஷு புத்தாண்டு வாழ்த்துக்கள்.



















Thursday, March 22, 2012

யூகாதி பண்டிகை





















































































தெலுங்கு வருட பிறப்பு-யூகாதி

தேங்காய போளி

தேவையானவை

மைதாமாவு 1 கப்
தேங்காய் துறுவியது 1 கப்
வெல்லம் பொடித்தது 1 கப்
உப்பு 1/2 தே.க
ஏலத்தூள் 1 தே.க
தண்ணிர் கொஞ்சம்
எண்ணெய் 2 தே.க
நெய் 1 தே.க
வாக்ஸ் பேப்பர் 2 சிறிய துண்டுகள்

செய்முறை

மைதாமாவை உப்பு, கொஞ்சம் தண்ணிர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்
நன்றாக பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

பூரணத்திற்க்கு ஒரு அடிகனமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணிர் விட்டு குறைந்ததீயில்
வைக்கவும். தண்ணிர் கொதிக்க ஆரம்பித்ததும். அதில் வெல்லத்தை போட்டு நன்றாக கிளறி விடவும்.
நன்றாக கொதிக்கும் போது துறுவிய தேங்காயும் சேர்த்து கிளறி விடவும். பாத்திரத்தில் ஒரங்களில் ஒட்டாமல் நல்ல திக்காக வரும் போது ஏலத்தூள்,நெய், விரும்பினால் 1/2 தே.க ரவையும் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.

கை பொறுக்கும் சூடு இருக்கும்போது சின்ன உருண்டைகளாக்கி வைக்கவும்,
மேல் மாவிற்க்கு மைதாமாவில் இருந்து சிறு உருண்டைகளாக எடுத்து கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிவிட்டு ஒரு பேப்பரில் வைத்து கையால சின்ன சப்பாத்தி போல் பரத்தவும். அதில் பூரண உருண்டையை வைத்து நன்றாக எல்லாபக்கமும் மூடி விடவும்.
அதை முதலில் ஒரு வேக்ஸ் பேப்பரில் வைக்கவும், அதன் மேல் அடுத்த வேக்ஸ் பேப்பர் வைத்து சப்பாத்தி குழவியால் நன்றாக பரத்தவும்.

இப்போது தவாவில் குறைந்த தீயில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்நிறமாக வெந்து எடுக்கவும்.
நல்ல டேஸ்டியான தேங்காய் போளி ரெடி.


எல்லா தெலுகு மக்களுக்கும் இனிய யூகாதி வாழ்த்துக்கள்.













Tuesday, January 17, 2012

Happy Pongal

Wish you a haapy pongal all my friends.

This time I am late.



Sunday, January 1, 2012

HAPPY NEW YEAR

WISH YOU A HAPPY NEW YEAR FOR ALL MY BLOG FRIENDS AND FAMILIES.












Saturday, December 24, 2011

CHRISTMAS HOME MADE COKIES





MERRY CHRISTMAS





Tuesday, October 25, 2011

தீபாவளி வாழ்த்துக்கள்






இந்த தடவை கொஞ்சம் இனிப்புகள் தான் செய்ய முடிந்தது.

பேசன் லாடு
தேங்காய் பர்பி
தேன்குழல்
முள்ளுமுறுக்கு





எல்லாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.





Thursday, September 8, 2011

Happy Onam
















Wish all my readers,Facebook friends,followersa very Happy Onam











Thursday, September 1, 2011

விநாயக சதுர்த்தி

விநாயக சதுர்த்தி



இந்த கனேச சதுர்த்தி நாளில் எல்லோருக்கும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நோய் நொடியின்ற் நிடுழி வாழ வேண்டும் என்று நானும் வேண்டிகொள்கிறேன்.
விடுமுறை முடித்து நேற்று முன் தினம் தான் வந்தேன். இன்று முதல் இங்கு பள்ளி திற்ந்தாச்சு. இனிமேல் ரெகுலராக் வருவேன் என்று சொல்லிகொண்டு நானும் தொடர்கிறேன்.














Sunday, June 19, 2011

தந்தையர் தின வாழ்த்துக்கள்








உலகில் எல்லா தந்தையருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
இன்று என் மக்ள் தந்தைக்கு ஸ்ட்ராபெர்ரி பான் கேக் ப்ரேக்பாஸ்ட் செய்து குடுத்தாள்.
ஒரு பிக்‌ஷர் ப்ரேம்+கார்ட்டும் சின்ன மகள் டேபிள் டாப் பிக்‌ஷர் ப்ரேம் செய்து குடுத்து எங்கள் தோழிகள் எல்லாரும் சேர்ந்து பார்க்+பீச் பிக்னிக் போய் எல்லார்ரும் உணவுகள்+ஸ்னாக்ஸ்,டெசர்ட்ஸ் எல்லாம் எடுத்டு சென்று நல்ல பிச்சில் ஆட்டம் போட்டு எல்லா தந்தையருக்கும் அவங்க குழந்தைகள் கேக் குடுத்து அசத்திட்டாங்க.











Thursday, April 14, 2011

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனிப்பு போளி

எல்லா தமிழ் மக்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.






















Monday, April 4, 2011

HAAPY UGADI WISHES

HAPPY UGADI





Monday, February 14, 2011

வாலண்டேன்ஸ் டே கேக்




தேவையானவை
ஆல் பர்பஸ மாவு (மைதா மாவு) 1 கப்
சர்க்கரை 1/2 கப்
வெனிலா எசன்ஸ் 1 டீஸ்பூன்
முட்டை 2
பேக்கிங் பௌடர் 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா 1 டீஸ்பூன்
உப்பு 1 சிட்டிகை
பட்டர் 8 தே.க(1 ஸ்டிக்)அல்ல்து எண்ணெய் பாதி+பட்டர்
எண்னெய் சேர்த்தால் எண்ணெய் 1/2 கப் பட்டர் 1/2 கப்
ஆரஞ் பழ தோல் சீவியது - 1/2 டீஸ்பூன்
கேக் பான்
குக்கிங் ஸ்ப்ரே அல்லது வெண்ணெய் - 1/2 தே.க

செய்முறை

அவனை 350 டிகிரி முற்சூடு செய்யவும்.
முதலில் மாவை சலித்து வைக்கவும் அதில் பேக்கிங் சோடா, பேக்கிங் பௌடர் சேர்க்கவும்.
ஒரு பெரிய பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நல்ல ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அதில் வெண்ணெய் +எண்னெய் சேர்த்து மீண்டும் ஐந்து செகண்ட்ஸ் அடிக்கவும்
இதில் வெனிலா எசன்ஸ், சர்க்கரை ,ஆரஞ் தோல் சேர்த்து மீண்டும் அடிக்கவும்.
சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக
கலந்து ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அவனில் கேக் பானில் குக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் தடவி
இந்த கேக் மாவு கலவையை ஊற்றி 25 ல் இருந்து 30 நிமிடம் பேக் செய்யவும்.
டூத் பிக்க்ர் வைத்து எடுத்து ஒட்டாமல் வந்ததும் வெளியில் எடுக்கவும்.
நன்றாக ஆறியபின் அவரவர் விருப்பத்திற்க்கு தகுந்த ப்ராஸ்டிங் செய்யலாம்.
இங்கு ப்ளயின் கேக் தான் செய்துள்ளேன். மேலே ஸ்ப்ரிங்ள்ஸ்
தூவியும் அல்லது பொடித்த சர்க்கரையும் மேல் தூவியும் பரிமாறலாம்.
என் குழந்தைகளுக்கு ப்ராஸ்டிங், ஐசிங் விரும்பாததினால் செய்யவில்லை.
விரும்பினால் சாக்லேட் ப்ராஸ்டிங், ஐஸிங், க்ரிம் சேர்த்தும் சாப்பிடலாம்





இந்த கேக்கை சாப்பிட்டு நிங்களும் வாலண்டேஸ் டே கொண்டாடி மகிழுங்க.
எல்லாருக்கும் ஹாப்பி வாண்டேஸ் டே வாழ்த்துக்கள்.

Friday, January 14, 2011

பொஙகல்




எல்லா தோழர் தோழியருக்கும், வலைதள் பார்வையாளார்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

நாளைக்கு தான் பொங்கல் வைக்கனும் அதனால் இப்ப கூகில் படம் போட்டிருக்கேன்.
எல்லோரும் எங்க வீட்டுக்கு வாங்க நல்ல இனிப்பா பொங்கல் சாப்பிடலாம்.
ஸாரி கரும்பு இல்லை.கிடைக்கவில்லை.

Friday, December 31, 2010

Happy New Year 2011

வலயுலக நண்பர்களுக்கும்,வருகை தரும் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எல்லோருக்கும் வாழ்வில் நோய் நொடிக்யின்றி,எல்லா புகழும் பெற வாழ்த்துக்கள்.





Friday, November 5, 2010

தீபாவளி வாழ்த்துக்கள்+இனிப்புகள்




எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பதிவுலக நண்பர்களுக்கும், பார்வையாளாருக்கும்
இனிப்போடும்,புத்தாடையோடும்,பட்டாசோடும் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.
வாங்க இங்கு இதோ இனிபோட பார்த்துகொண்டே நிங்க வாழ்த்துவதை நானும் பார்க்கிறேன்.
இந்த தடவை எங்க வீட்டில் செய்த பலகாரங்கள்.

ரவாலாடு
மில்க் கோகனட் பர்ப்பி
அசோகா
முந்திரி பர்ப்பி
அப்பம்(அதிரசம் சரியா வராது)

முள்ளு முறுக்கு
தேன்குழல்
மிக்ஸர்.


வாழ்த்து தெரிவித்த எல்லோருக்கும் நன்றி.



Thursday, November 4, 2010

தீபாவளி இனிப்பு பலகாரங்கள்





நம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள்.

ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி

இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது.

இதெல்லாம் நாளை எங்க வீட்டு தீபாவளி சமையல்,

வெள்ளை அப்பம், பஜ்ஜி,இட்லி சாம்பார்,சட்னி,அவியல்,உருளை வருவல்,வடை,அப்பளம்,பாயசம்,வெள்ளடிக்காய் பச்சடி.

எல்லோரும் வாங்க எங்க வீட்டு தீபாவளிக்கு வந்து எங்களோட சேர்ந்து இந்த இனிய பண்டிகையை பலகாரங்களோட கொண்டாடுவோம்.ஸாரி இங்கு பட்டஸ் கிடையாது,

நாங்க கோவிலுக்கு போவோம் அங்கு எல்லோருக்கும் 2 கம்பி மத்தாப்பூ கொடுப்பாங்க.

எல்லா என் தள வருகையாளார்களுக்கும், என் நன்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.