Tuesday, March 30, 2010

வாழப்பூ பருப்பு உசிலி




தேவையானவை
கடலைபருப்பு - ½ கப்மிளகாய் வற்றல் - 3
தேங்காய துருவல் - 1 தே.கமஞ்சள் தூள் - ½ தே.கபெருங்காயம் - சின்ன துண்டுஉப்பு - தேவைகேற்ப்ப


செய்முறை


வாழைப்பூவைநன்குஆய்ந்துபொடியாகநறுக்கிமோர்+தண்ணிர்,உப்பு,
மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும். (மோர் சேர்த்தால் கருக்காமல் இருக்கும்).பருப்பு,மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து தண்ணிர் இல்லாமல் அரைத்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்துள்ள பருப்பு
கலவையை போட்டு மிதமான தீயில் கிளறவும்.
நன்றாக உதிரியானதும் வேகவைத்துள்ள வாழைப்பூ, தேங்காய துருவல் சேர்த்து மீண்டும் கிளறவும்.
பருப்பு உசிலி, மோர் குழம்பு காம்பினேஷன் sநன்றாக இருக்கும்.
குறிப்பு: சிலபேர் பருப்பு கலவயை இட்லி தட்டில் வைத்து வேகவைத்து உதிர்த்து சேர்ப்பதுண்டு
சிலபேர் துவரம்பருப்ம்,கடலைபருப்பும் சேர்த்து செயுவார்கள்.

Friday, March 26, 2010

பைனாப்பிள் ரசம்




பைனாப்பிள் ரசம்

பைனாப்பிள் துண்டுகள் - ¼ கப்
வேகவத்த துவரம் பருப்பு – 4 தே.க
புளி - நெல்லிகாய் அளவு
ரசப்பொடி - 1 தே.க
மஞ்சள் தூள் - ¼ தே.க

தாளிக்க

நெய் - ½ தே.க
கடுகு - ½ தே.க
சீரகம் - ¼ தே.க
வற்றல் மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - ¼ தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்


செய்முறை

பைனாப்பிள் துண்டுகளை அரைத்தும் போடலாம் இல்லை அப்படியே வேகவைக்கவும்.

புளிதண்னிரில் அரைத்த பைனாப்பிள், ரசப்பொடி,
வெந்த பருப்பு மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து
நன்றாக கொதிக்கவைக்கவும்.
நல்ல பச்சை வாசனை போனதும் தாளித்து போடவும்.
இந்த பைனப்பிள் ரசம். உடம்பு ஜீரனத்திற்க்கு ரொம்ப நல்லது.

அவார்ட்

இந்த அவார்டை என் தோழி மேனகா,ஜலீயும் எனக்கு கொடுத்தது.


நன்றி மேனகா & நன்றி ஜலீ.
இதை என் தோழிகளுக்கு நான் கொடுக்கிறேன். வந்து பெற்றுகொள்ளவும்.
sarusriraj
சிநேகிதி
susri
prabhadamu vedagiri
மற்றும் என் தள வருகையாளர்களுக்கும் இந்த அவார்டை கொடுக்கிறேன்.

Thursday, March 25, 2010

புதினா சாதம்


புதினா சாதம்

தேவையானவை

வடித்த சாதம் - 1 கப்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப்ப



அரைக்க

புதினா - 1 கட்டு
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
பச்சை மிளகாய் – 2
இஞ்ஞி - 1 சின்ன துண்டு
லெமன் ஜூஸ் - ½ தே.க

தாளிக்க

எண்ணெய் - 1 தே.க
கடுகு - ½ தே.க
மிளகாய் வற்றல் - 1
பெருங்காய தூள் - ¼ தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை

சாதத்தை நல்ல உதிரியாக வடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து
அரைத்துள்ள மசாலவை போட்டு உப்பு சேர்த்து
நல்ல பச்சை வாசனை போக வதக்கவும்.
வடித்துள்ள சாதத்தை அதில் கலந்து நல்ல கிளறவும்.
லெமன் ஜுஸ் விட்டு, கொஞ்சம் நெய்யும் சேர்த்து
கிளறி விட்டு இறக்கவும்.
நல்ல சட்னியோட சாப்பிட நன்றாக இருக்கும்.
விரும்பினால் வெங்காயம் பொடியாக நறுக்கி வதக்கி
சேர்க்கலாம்.

Wednesday, March 24, 2010

பானகம்,நீர்மோர்,கோசமல்லி

இன்று ஸ்ரீ ராம நவமி. கடவுள் ஸ்ரீ ராமர் பிறந்த தினம்.
தசாவதரத்தில் 7 வது அவதாரமாக அவதரித்தவ்ர்.
இந்த ஸ்லோகத்தை முன்று முறை ஜெபிக்கவும்.

Sri Rama Rama Ramethi Rame Rame Manorame
Sahasranama Tathulyam Rama Nama Varaname




ஸ்ரீராம நவமிக்கு கடவுக்கு நிவேதன்ம் செய்யகூடியது.

நீர்மோர்,பானகம்,கோசமல்லி.





பானகம்

வெல்லம் - ½ கப்
சுக்கு தூள் – ¼ தேக
ஏலத்தூள் - ¼ தே.க
லெமன் ஜூஸ்- ½ தே.க

செமுறை
வெல்லத்தை 1 கப் தண்ணிரில் கரைக்கவும்.
நல்ல கல் போக வடிகட்டவும்.
வடிகட்டிய வெல்ல தண்ணிரில் ஏலத்துள்
சுக்கு பொடி,லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலந்ஹ்டு
பரிமாறவும்.

நீர்மோர்

தயிர் - 1 கப்
இஞ்ஞிதுருவல் – ¼ தே.க
பச்சைமிளகாஉ - 1
பெருங்காயத்தூள் – ¼ தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
லெமன் ஜூஸ் – ¼ தே.க

தயிரை முக்கால் கப் தண்ணிர் சேர்த்து
கடைந்து வைக்கவும்.
பச்சைமிளகாயை பொடியாக் அரியவும்
இஞ்ஞிதுருவல், பச்சை மிள்காய்,உப்பு,
பெருங்காயத்தூள்,லெமன் ஜூஸ் கடைந்த
மோர் எல்லவற்றையும் ஒரு பாத்திரத்தில்
ஊற்றி நன்றாக கலந்து மேலே
கொத்தமல்லி இலை பொடியாக அரிந்து
போட்டு பரிமாறவும்.

கோசமல்லி

வெள்ளரிக்காய் பொடியாக அரிந்தது - ½ கப்
மாங்காய் பொடியாக அரிந்தது - ¼ கப்
பச்சை மிளகாய் பொடியாக அரிந்தது – 1
பச்சை பருப்பு - ¼ தே.க
உப்பு - தேவைகேற்ப்ப

செய்முறை


பச்சை பருப்பை ஊறவைக்கவும்.
மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக
கலந்து வைத்து பரிமாறவும்.

இந்த மூன்றும் ராமருக்கு நைவேத்தியம் செய்வது
வழக்கம்.

Tuesday, March 23, 2010

மைக்ரோவேவ் சாக்லேட் பர்ப்பி

(03/24/10)இதுஎன் பிறந்தநாளுக்கு செய்த ஸ்வீட்.





தேவையானவை

மில்க் பௌடர் - 1 கப்
பொடித்த சர்க்கரை - 1 கப்
விப் க்ரிம் - ½ கப்
கோக்கோ பௌடர் - 1 தே.க


செய்முறை

ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் எல்லா பொருட்களையும்
ஒன்றாக போட்டு நன்றாக கலந்து மைக்ரோவேவில் 1 நிமிடம்
வைக்கவும்.
வெளியில் எடுத்து நன்றாக கலந்து மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
திரும்பவும் எடுத்து நன்றாக கலந்து மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
இதே போல் மொத்தம் ஒவ்வொரு நிமிடமாக வைத்து
கலந்து 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.
ஒரு ட்ரேயில் வெண்ணை தடவி அதில் இந்த கலவயை
ஊற்றவும்.
5 நிமிடம் பின் மீதியுள்ள கலவையில் சாக்லேட் பௌடர்
சேர்த்து நன்றாக கலந்து பால் கலவையின் மேல் ஒரே சீராக
ஊற்றவும்.
இதை ப்ரிட்ஜில் வைக்கவும். 6 மணிநேரம் பின் எடுத்து வில்லகளாக்கி பரிமாறவும்.

Monday, March 22, 2010

கீரை வடை




தேவையானவை

உளுத்தம்பருப்பு - 1 கப்
கீரை - ½ கப் அரிந்தது
பச்சைமிளகாய் - 1
இஞ்ஞி - ¼ தே.க
உப்பு - தேவைகேற்ப்ப


செய்முறை

உளுந்தை 2 மணிநேரம் தண்ணிரில் ஊறவைக்கவும்.
தண்ணிர் வடியவிட்டு உப்பு சேர்த்து நல்ல அரைக்கவும்.
தண்ணிர் வேண்டுமானல் கொஞ்சமாக தெளித்து அரைக்கவும்.
கிரையை பொடியாக அரிந்து வைக்கவும்.
பச்சைமிளகாயை பொடியாக அரியவும்.
இஞ்ஞியை துருவியில் துருவி கொள்ளவும்.
அரைத்த மாவில் கீரை,பச்சைமிளகாய்,இஞ்ஞி
சேர்த்து கலந்து சின்ன வடைகளாக தட்டி
எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இது நல்ல ஹெல்தியான கீரை வடை

Friday, March 19, 2010

எரிசேரி








இது கேரளாவில் செய்யகூடிய ஒரு கூட்டு.

தேவையானவை

சேனை துண்டுகளாக்கியது - 1/2 கப்
வாழக்காய் துண்டுகளாக்கியது - 1/2 கப்

மசாலா
------------

தேங்காய துருவியது - 1/2 கப்
சீரகம் - 1 தே.க
மிளகு - 1/4 தே.க
வற்றல் மிளகாய் - 2


தாளிக்க
------------

தேங்காய எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
வற்றல் மிளகாய் - 1
பெருங்காய தூள் - 1/4 தே.க
கறிவேப்பிலை - 3 இலைகள்

மேலே தூவ
-------------------
வறுத்த தேங்காய் துருவல் - 1/4 தே.க


செய்முறை
-----------------

வாழைக்காய், சேனை இரண்டும் சேர்த்து தண்ணிர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.
கால் தே.க தேங்காய துருவலை வெறும் கடாயில் வறுத்து வைக்கவும்.
மசாலா பொருட்களை அரைத்து வெந்த காய்களோடு சேர்த்து கொதிக்கவிடவும்.
நல்ல பச்சை வாசனை போனதும்,வறுத்த தேங்காய் துருவல்+தாளிக்கயுள்ளதை தாளித்து போட்டு
கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு பச்சை கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
நல்ல மருத்துவ குணமடங்கிய கூட்டு.
இது சாததிற்க்கு நல்ல சைட்டிஷ்.


Thursday, March 18, 2010

கோக்கனட் லாடு(மில்க்மெய்ட்)


கண்டென்ஸ்ட் மில்க் (மில்க் மெய்ட்) - 1 டப்பா
தேங்காய் துருவல் - 3/4 கப்
பட்ட்ர் அல்லது நெய் - 1/2 தே.க
சர்க்க்ரை - 1/4 தே.க
ஏலத்தூள் - 1/4 தே.க

செய்முறை

ஒரு கனமான பாத்திரம் அல்லது நான்ஸ்டிக் கடாய் வைத்து அடுப்பை மிடியமாக வைத்து அதில் கொஞ்சம் பட்டர் விட்டு மில்க்மெய்டை ஊற்றி அதை நல்ல கிளறி விடவும்.
பாத்திரத்தின் ஒரத்தில் ஒட்டாமல் வரும் போது தேங்காய் துருவல்,ஏலத்தூள் சேர்த்து நல்ல கிளறி விட்டு எடுக்கவும்.
ஒரு தட்டில் 2 தே.க தேங்காய் துருவல் போட்டு வைக்கவும்.
மிதமான சூடு இருக்கும் போது கையில் கொஞ்சம் நெய் அல்லது பட்டர் தடவி சின்ன உருண்டைகளாக செய்து அதை தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.
நல்ல டேஸ்டியான ரிச் மில்க்மெய்ட் கோக்கனட் லாடு ரெடி.
எல்லாரும் விரும்பி 1 லாடுக்கு பதிலாக 3 லாடு எடுத்து சாப்பிடுவார்கள்.
இது செய்வது ரொம்ப ரொம்ப சிம்பிள் மொத்தமே 10 நிமிடம் தேவை.
இதில் பால் பௌடர் சேர்த்தும் செய்யலாம்.
நான் இதை ஒரு கெட் டு கெதர் பார்டிக்கு எடுத்து சென்றேன்.எல்லாமே காலியாகிட்டது.

Friday, March 12, 2010

வாழைபழ கேக்(Banana Walnut Cake)






மைதா மாவு - 1 கப்
பேக்கிங சோடா - 1 தே.க
பேக்கிங் பௌடர் - 1 தே.க
உப்பு - 1/4 தே.க
வெனிலா எஸன்ஸ் - 1 தே.க
முட்டை - 2
சர்க்கரை - 1 கப்
வெஜிடெபிள் எண்ணெய் 1/2 கப்
மசித்த வாழைபழம் - 2
வால்நட் - 1 தே.க
செய்முறை



அவனை முறுசூடு செய்யவும். 350 டிகிரி 45 நிமிடங்கள்


வாழை பழங்களை நல்ல மசித்து கொள்ளவும்.
மாவு,பேக்கிங் சோடா,பேக்கிங் பௌடர், உப்பு சேர்த்து நன்றாக சலிக்கவும்.

முட்டை, சர்க்க்ரை சேர்த்து நன்றாக 6 நிமிடங்கள் அடிக்கவும்.

அதில் மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதி பழகலவையை சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.

விரும்பினால் வால்நட் சேர்த்து கலக்கவும்.

லோஃப் பான்,அல்லது பேக்கிங் ட்ரேயில் ஊற்றி முற்சூடு செய்த
அவனில் 45 நிமிடங்கள் வைக்கவும்.

ஒரு முள்கரண்டியால் குத்தி பார்த்து ஒட்டாமல் வந்தால் வெளியில்எடுக்கவும்.

இதை காலை நேர ப்ரேக் பாஸ்டாகவும், மாலை நேர டி கேக்காகவும் சாப்பிட நன்றாக இருக்கும்.

Sunday, March 7, 2010

சில்லி பன்னிர்







தேவையானவை
---------------

குடைமிளகாய் - 2
உருளைக்கிழங்கு - ஒன்று
பட்டாணி - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பனீர் துண்டுகள் - ஒரு கப்
இஞ்சி விழுது - கால் தேக்கரண்டி
பூண்டு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
நெய் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
தண்ணீர் - ஒரு கப்
கொத்தமல்லி இலை - சிறிது

அரைக்க
--------

வெங்காயம்
தக்காளி
இஞ்சி
பூண்டு

மசாலா
---------

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை


பனீரை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அரைத்த விழுதை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை தீயை மிதமாக வைத்து வதக்கவும். அதில் மசாலா தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்
அதன் பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி விடவும்
அதில் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு வேக விடவும். விருப்பப்பட்டால் பட்டாணியும் சேர்த்து செய்யலாம்.
வறுத்த பனீர் துண்டுகளை போட்டு நன்றாக ஒரு முறை கிளறி மேலும் ஐந்து நிமிடம் வேக விடவும்.
கலவை நன்கு கெட்டியாக வந்தவுடன் இறக்கி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி மேலே கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும். சுவையான சில்லி பனீர் ரெடி. இதை நெய் சாதம், பூரி, பரோட்டா, ரொட்டி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Thursday, March 4, 2010

கிட்ஸ் இட்லி மிளகாய் பொடி




தேவையானவை


வற்றல் மிளகாய் - 2
பொட்டு கடலை - 2 தே.க
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/2 கப்
எள் - 1 தே.க
பெருங்காயம் - 1/2 தே.க
எண்ணெய் - 1 தே.க


செய்முறை

கடாயில் எள்ளை எண்ணையில்லாமல் வெடிக்க வறுக்கவும்.
பொட்டுகடலை வாசனை வரும் வரை வறுக்கவும்.
மற்ற எல்லா பொருட்களை நல்ல பொன்நிறமாக வரும் வரை வறுக்கவும்.
கடைசியாக எண்ணெய் விட்டு பெருங்காயம், வற்றல் மிளகாய்
சேர்த்து வறுக்கவும்.
சூடு ஆறியதும் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பொடிக்கவும்.
இதை ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.
இட்லி,தோசை ஊத்தப்பம்,பொடி தோசை எல்லாவற்றிக்கும் தொட்டு சப்பிடலாம்.

Wednesday, March 3, 2010

பருப்பு மசால் வடை



தேவையானவை

கடலை பருப்பு - 1 கப்
வற்றல் மிளகாய் - 3
வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது
உப்பு - தேவைகேற்ப்ப
கறிவேப்பிலை - கொஞ்சம்
இஞ்ஞி - 1/4 தே.க துறுவியது


செய்முறை

பருப்பை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
தண்னிரை வடியவிட்டு வற்றல் மிளகாய்,உப்பு சேர்த்து
ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும.
நறுக்கிய இன்ஞி,வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக
கலந்து சின்ன சின்ன வடைகளாக தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
தேங்காய சட்ணியோட சாப்பிட நன்றாக இருக்கும்.
இதே வடையை ரசத்தில் போட்டு ரசவடையாகவும்,
சாம்பாரில் போட்டு சாம்பார் வடையாக சாப்பிட நன்றாக இருக்கும்.

Tuesday, March 2, 2010

ப்ரோக்கலி கேரட் பொரியல்



ப்ரோக்கலி - 1

கேரட் - 1


தாளிக்க


எண்ணெய் - 1 தே.க

கடுகு - 1/2 தே.க

உளுந்தம் பருப்பு - 1/4 தே.க

சீரகம் - 1/2 தே.க

பெருங்காயம் - 1/2 தே.க

மிளகு தூள் - 1/4 தே.க

கொததமல்லி இலை - கொஞ்சம்



செய்முறை


பாத்திரத்தில் தண்னிரை விட்டு கொதிக்க வைக்கவும்.

கொத்தித தண்ணிரில் உப்பு போட்டு ப்ரோக்கலி பூவை தனிதனியாக பிரித்து போடவும்.

ஐந்து நிமிடம் கழிந்து நல்ல வடிகட்டவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கயுள்ளதை தாளிக்கவும்,

கேரட்டை போட்டு ஐந்துநிமிடம் வதக்கவும்.

வதங்கிய பின் வடியவைத்துள்ள ப்ரோக்கலி பூவை சேர்க்கவும்.

பின் பெப்பர் அல்லது மிளகாய் தூள் தூவி நல்ல பிரட்டி எடுக்கவும்.

நல்ல சத்துள்ள ஸ்டிர் ப்ரை ப்ரோக்கலி கேரட் ரெடி.


ப்ரோக்கலி சீக்கிரம் வெந்து விடும். நிறய்ய நேரம் தண்ணிரில் வேகவிடகூடாது.