Tuesday, December 18, 2012

பேச்சிலர்ஸ் சமையல் போட்டி



சமையல் அட்டகாசங்கள் நடத்தும் பெரிய பேச்சிலர்ஸ் பிஃஸ்ட் போட்டி நல்ல விறுவிறுப்பா போய் கொண்டிருக்கிறாது. நம்ம மக்கள்ஸ் எல்லாம் அல்ரெடி உங்க குறிப்பை கொடுத்து அசத்து இருப்ப்பிங்க இருந்தாலும் நமக்கு தெரிந்தவர்களுக்கும் நம்ம வலைப்பூவை அடிக்கடி வந்து போகிற நணபர்கள் எல்லோருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
நல்ல அழகிய சமைத்து அசத்தலாம் வலைபூ முதன் முதல் சமையல் போட்டி வைத்து அசத்துகிறாங்க.
நான் என் பங்கு குறிப்புகளை அதில் குடுத்துவிட்டேன். உங்க எல்லோருக்கும் பயனுள்ளாதாக இருக்கும்.

இது தான் நம்ம தோழி ஜலீ என்கிற ஜலீலாவின் வலைபூ.


http://samaiyalattakaasam.blogspot.com/









இதில் பங்கு பெறுகிற எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.





Tuesday, December 11, 2012

கேரட் உருளை வதக்கல் (கேரளா ஸ்டைல்)







தேவையானவை

கேரட்   பொடியாக அரிந்தது         1 கப்
உருளை     ”                                           1 கப்
வெங்காயம்                                          1
மஞ்சள் தூள்                                          1/2 தே.க
உப்பு                                                          தேவைகேற்ப்ப
கறிவேப்பிலை
  
அரைக்க

தேங்காய துருவல்                2 தே.க
சீரகம்                                           1/4 தே.க
மிளாகாய வற்றல்                  2(காரத்திற்க்கு எற்ப)

தாளிக்க

எண்ணெய் (தேங்காய் )            1
கடுகு                                                1/4 தே.க
உளுந்தம்பருப்பு                          1/4 தே.க
பெருங்காயத்தூள்                       1/4 தே.க



செய்முறை

கடாயில் தாளிக்கயுள்ளதை தாளித்து, வெங்காயம், சேர்த்து வதக்கியதும் அதில் தாளிக்கயுள்ளதை தாளித்து வெட்டி வைத்துள்ள காய்களையும் சேர்த்து ,மஞ்சள் தூளையும் சேர்த்து  1/2 தே.க எண்ணெய் விட்டு நன்றாக  கலந்து குறைந்த தீயில் 5 நிமிடம் வதக்கவிடவும்., நன்றாக வதங்கியதும் உப்பை சேர்த்து மேலும் குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும். கொஞ்சமாக தண்னிர் தெளிக்கவும். நிறய்ய தண்ணிர் விட்டால் அதன் டேஸ்ட்  வேறுபடும்.
கடைசியாக அரைத்துள்ள தேங்காய் கலவை சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
நல்ல டேஸ்டியான கேரட் உருளை வதக்கல் (பொரியல்) ரெடி.

குறிப்பு: தேங்காய், சீரகம், வற்றல்மிளாகாய் ஒன்றிரண்டாக க்ரஸ் செய்தது போல் அரைத்து எடுக்கவும். தண்ணிர் சேர்க்க வேண்டாம்.
உப்பு கடைசியில் சேர்க்கவும்.

இது எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு ஹெல்தியான வெஜ் பொரியல்.






Friday, November 30, 2012

கத்தரிக்காய் பிரட்டல்




கத்தரிக்காய்  பிரட்டல்

தேவையானவை

சின்ன கத்தரிக்காய் - 6
வெங்காயம்                  1
தக்காளி                          1


அரைக்க

துறுவிய தேங்காய்
சின்ன வெங்காயம்
பூண்டு
சோம்பு
கறிவேப்பிலை
 


தாளிக்க

எண்ணெய்              1/2 தே.க
கடுகு                          1/4 தே.க
பெருங்காயத்தூள் 1/4 தே.க
வெந்தயம்                 1/4 தே.க
கறிவேப்பிலை        கொஞ்சம்


செய்முறை

முதலில் அரைக்கவேண்டியதை அரைக்கவும்

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் தாளிக்கயுள்ளதை தாளித்து பின் அரைத்த கலவையை விட்டு குறைந்த தீயில் வைத்து வதக்கவுக்ம், வதங்கியதும் வெட்டியுள்ள கத்தரிக்காயை  சேர்த்து நன்றாக கிளறி விட்டு அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பும் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

இது சாததிற்க்கு தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
நல்லெண்ய் சேர்த்து வதக்கினால மேலும் சுவை கூடும்.
சிலர் பூண்டு சேர்த்தும் செய்வார்கள்.
எளிதில் செய்யகூடிய பிரட்டல். கத்தரிக்காய் குழையாமல் வேகவைத்து எடுக்கவும்.

நான் மனோ சாமிநாதன் அவர்களின் கத்தரிக்காய் பிரட்டலை சின்ன மாற்றத்தோடு செய்தேன், மிகவும் ருசியாக இருந்தது.

நன்றி மனோ அவர்களுக்கு.



Wednesday, November 7, 2012

அமெரிக்கா எலக்‌ஷன்

அமெரிகா அதிபர் ஒபாமா வெற்றி. மீண்டும் வெற்றி.
உலகம் முழுதும் எதிர்பார்த்து இருக்கிற அடுத்த அமெரிக்க அதிபர்  யார் என்று எல்லா நாட்டிலும் பேப்பரிலும் முகபுத்தகத்திலும், ப்ளாஷ் நியூஷிலும் காத்திருந்த மக்களின் முகத்தில் பெரிய ஒரு மகிழ்ச்சி. மீண்டும் வெற்றி பெற்ற பராக் ஒபாம.


ஒட்டு பதிவு போட்டாச்சு. குடும்பத்தோட போய் போட்டு வந்தோம்.
இங்கு குழந்தைகளையும் அழைத்துட்டு போகலாம். அவங்க ஸ்கூலில் தான். அதனால் அவங்களுக்கு ஜஸ்ட் டுப்ளிகேட் ஒட் ட்ரையல் நேற்று அவங்க பள்ளியில் குழந்தைகளிடம் டம்மி ஒட்டு பாக்ஸ் ஒன்று செய்து அதில் அவங்களுக்கு எலக்‌ஷன் என்றால் என்ன , எப்படி ஒட்டு போடுவது யார் நிற்கிறார்கள்.என்ன என்று குழந்தைகளுக்கு கற்று கொடுத்து இந்த ப்ரசிடண்டுக்கு என்ன கலர் பிடிக்கும் என்ன பேவரிட் உணவு, அவங்க குடும்பம் என்று எல்லாவற்றையும் ஒரு புக்லெட் போட்டு அவங்களையும் எலக்‌ஷ்னுக்கு போய் ஒட்டு போடு என்று அழைத்து ஒரு பெரிய வரிசையாக போய் ஒவ்வொரு குழந்தையும் போட்டு விட்டு I VOTED  என்று வீட்டில் வந்து சொன்னாங்க. வாவ் குழந்தைகள் முதல் பெரியவர் வரை இன்று எலக்‌ஷ்னின் ரிசல்டுக்கு வெயிட்டிங்.

இதோ மீண்டும் எங்கள் நாட்டின் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்று விட்டார். அந்த மகிழ்ச்சியை உங்க எல்லோரோடும் பகிர்ந்துக்கிறேன். இங்கு ஒட்டு போடும் நாள்  எந்த ஒரு கலவரமும் இல்லாம்ல் நடைபெற்றது. நியூ ஜெர்ஷியில் மிகுந்த சாண்டி வந்து நிறைய்ய சேதம் அடைந்தாலும் அவர்களுக்காக சிறப்பு வசதி செய்து  ஒட்டை பெற்றார்கள்.

வெற்றி வெற்றி பாராக் ஒபாமா.
எங்கள் ஊர் செனட்டர் எலிசபெத் வாரான்.

மீண்டும் வெற்றி பெற்ற பாராக் ஒபாமா சிரித்த முகத்தோடு வரவேற்கிறார் வெற்றியை.








Sunday, September 16, 2012

Angel Hair Pasta



Angel Hair Pasta
தேவையானவைபாஸ்தா - 1 பாக்கேட்
துறுவிய சீஸ் = 1 தே.க
பெஸ்டோ சாஸ் (டொமேட்டோ சாஸ்) - 1/2
தே.கவெண்ணெய் - 1/2 தே.க
பீன்ஸ் - கொஞ்சம் நீட்டமாக அரிந்தது
செர்ரி தக்காளி - 5
ஆஸ்பெராகஸ் -1"
பட்டாணி - 1/4 க
ப்சில்லி ப்ளேக்ஸ் - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
வெங்காயம் - 1 நீட்டமாக வெட்டியது
பூண்டு - 1 பொடியாக அரிந்தது
எண்ணெய் - ஆலிவ் (எந்த)

செய்முறை

பானில் பாஸ்தா முழ்கும் வரை தண்ணிர் ஊற்றிஉப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது பாஸ்தாவை போட்டு 15 நிமிடம் வேக விடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சில்லி பேள்க்ஸ், வெட்டிய காய்கறிகள்வெங்காயம் சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடம் சாட்டே செய்யவும்.
நிறய்ய நேரம் வதக்க வேண்டாம்.வதங்கியதும் அதை பாஸ்தா பானில் போட்டு நன்றாக கலந்து துறுவிய சீஸ் மேலே போட்டு விரும்பினால் பெஸ்டோ சாஸ், ஆல்பெரெட்டோ சாஸ் அல்லது டொமேட்டோ சாஸ் சேர்த்து5 நிமிடம் அடுப்பில் வைத்து கிளறிவிட்டு எடுக்கவும்.
குழந்தைகளுக்கு பிடித்த பாஸ்தா அயிட்டமில் இதுவும் ஒன்று,
நூடுல்ஸ் டைப் என்றால் விரும்பி சாப்பிடும்.காரம் கூட்டினால் பெரியர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

I am sending this recipe to FAST FOOD EVENT - PASTA Shamas Easy2CookRecipes.com.

Thanks Shama.









Friday, September 14, 2012

சீஸ் போண்டா

`

சீஸ் போண்டா
தேவையானவைப்ரெட் 2 துண்டுகள்(ஒரம் வெட்டியது)
வேகவைத்த உருளை 1
Parmaseean Cheese - 1 தே.க
மிளகாய் தூள் 1/2 தே.க
கரம் மசாலா தூள் 1/2 தே க
உப்பு தேவைகேற்ப்ப
கொத்தமல்லி இலை கொஞ்சம் பொடியாக அரிந்தது
லெமன் ஜூஸ் 1/4 தே.க
சாட் மசாலா தூள் 1/4 தே.க
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
பௌலில் வேக்வைத்த உருளை கிழங்கு, ஒரம் வெட்டிய ப்ரெட் ஸ்லைஸை தண்ணிர் தொட்டு நன்றாக ப்ரஸ் செய்து தண்னிர் இல்லாமல் அதை கையால் பிட்டு போடவும்.உப்பு, கொத்தமல்லி இலை, சாட் தூள், லெமன் ஜூஸ் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.கலவை எடுத்து சின்ன பால்ஸாக செய்து எண்ணெயில் பொன்னிறமாக வெந்து எடுக்கவும்.இதற்க்கு சாஸ் அல்லது கெட்சப் தொட்டு சாப்பிடலாம்.
குறிப்பு: சீஸ் கிடைக்கவில்லை என்றால் அதற்க்கு பதில் துறுவிய பன்னிர் கூட சேர்க்கலாம் ஆனல் கொஞ்சம் டேஸ்ட் மாறும்.
இந்த குறிப்பை என் தோழி இனிய இல்லம் பார்டி ஈவெண்ட்க்கு அனுப்புகிறேன். நல்ல ஹெல்தி குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்.
நன்றி பாயிஜா. என்னையும் இந்த ஈவெண்டிக்கிற்க்கு அழைத்தற்க்கு.



Saturday, September 8, 2012

கிருஷ்ண ஜெயந்தி



இன்று கிருஷ்ண ஜெயந்தி சிலபேர் கொண்டாடுகிறார்கள்.நான் போன மாதத்தில் வந்ததினால் அதை தான் எங்கள் வீட்டில் கொண்டாடினார்கள். நானும் சில பலகாரங்கள் செய்தேன். இன்று கிருஷ்ண ஜெயந்தி வாழ்வில் எல்லோருக்கும் எல்லா வளமும் பெற்று சந்தோஷமா இருக்கணும் என்று வேண்டிணேன்.


Tuesday, August 28, 2012

ஓணம்

ஓணா விழா கொண்டாடும் எல்லோருக்கும் என் இணிய ஓண வாழ்த்துக்கள்.





இந்த தடவை எங்க வீட்டில் ரொம்ப சிம்பிள். அப்பா மறைந்து நாட்கள் ஆகவில்லை. இருந்தாலும் வீட்டில் பெரியவர்கள் சொன்னதினால் சிம்பிள்.

அவியல், அடை ப்ரதமன்.




Sunday, August 19, 2012

Brussels Sprouts Fry (ஸ்ப்ரவுட்ஸ்)


தேவையானவை
ஸ்ப்ரவுட்ஸ் கொஞ்சம்
வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு 1 சின்ன துண்டு
எண்னெய் 1 தே.க
உப்பு தேவையானவை
கறிபௌடர் 1/2 தே.க
செய்முறை
வெங்காயம், தக்காளி துண்டுகளாக்கி வைக்கவும்,
ஸ்ப்ரவுட்ஸை நன்றாக கழுவி அப்படியே போடலாம் வேண்டுமென்றால் சிறியதாகவும் போடலாம்.
எண்னெயில் முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்ஞி, பூண்டு போட்டு வதக்கி அதில் ஸ்ப்ரவுட்ஸையும் போட்டு வதக்கவும்.
ஐந்து நிமிடம் வதங்கிய பின் கறி பௌடர் போட்டு உப்பையும் போட்டு கிளறி விட்டு குறைந்த தீயில் வதக்க வேண்டும்
நன்றாக வதங்கியபின் மேல் கொத்தமல்லி இலை தூவி சாததோடும், பாஸ்தாவோடும் பறிமாறவும்.

Saturday, August 18, 2012

Eid Mubarak


இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

என் இனிய வலைதள நணபர்களுக்கு இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.












Tuesday, August 14, 2012

சுதந்திரதின ஊத்தப்பம்











என்னுடைய்ய சுதந்திர தின ஊத்தப்பம் ரெசிப்பி+படங்களுடன் தமிழ்குடும்பத்தில் இருக்கு.



http://www.tamilkudumbam.com/2009-03-20-12-54-
37/2933.html
இந்தியர்களுக்கு எல்லாம் எனதினிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.
ஜெய் ஹிந்.




Tuesday, July 31, 2012

ஒவன் பேக்ட் மசாலா வடை

ஒவன் பேக்ட் மசாலா வடை
என் தோழி கீதா ஆச்சலின் ரெசிப்பி பார்த்து செய்தது. இதில் சின்ன மாற்றாம் நான் பட்டாணி பருப்பு நிற்ய்யவும் கால் கப் கடலை பருப்பும் சேர்த்து செய்தேன்.
நன்றி கீதா.
நீண்ட நாடகள் கழிந்து ஒரு நல்ல ரெசிப்பியோட உங்களை எல்லாம் இங்கு மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழச்சி.

பேக்ட் மசாலா வடை

தேவையானவை


கடலைபருப்பு
மிளகாய் வற்றல்
இஞ்ஞி
வெங்காயம்
பச்சைமிளகாய்
சோம்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி
புதினா
எண்ணெய்
உப்பு
பேக்கிங் ட்ரே
அலுமினியம் பாயில்

செய்முறை

பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து மிளகாய் வற்றலோடு சேர்த்து ரவை பததிற்க்குஅரைதெடுக்கவும்.

வெங்காயம், இஞ்ஞி பச்சைமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக அரியவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா,சோம்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

குக்கிங்க் ஸ்பேரே அல்லது கொஞ்சம் எண்ணெய் பேக்கிங் ட்ரேயில் பேக்கிங்க் ஷீட் அல்லது அனுமினியம் பாயில் போட்டு அதில் குக்கிங் ஆயில் ஸ்ப்ரே தெளித்து வடைகளை கொஞ்சம் இடைவெளி விட்டு வைக்கவும்.

பேக்கிங் முறை அவரவ ஆவனின் மாடலை பொறுத்து வைக்கவும்.
முதலில் 10 நிமிடம் ப்ராயில் மோடில் வைக்கவும்.
பின் அதை திருப்பி விட்டு 350 டிகிரியில் 15 நிமிடம் வைத்து எடுத்தால் நல்ல மொறு மசால வடை ரெடி.
யாராலயும் கண்டுபிடிக்க முடியாது இது ஒவனில் செய்த்தது என்று சொன்னால் தான் தெரியும்.
சுவை மணம் எல்லாம் பொரித்தெடுக்கும் வைடை போலவே நன்றாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்க்கு ஏற்றது.















Saturday, June 30, 2012

திவ்யாகுட்டியின் பிறந்தநாள்




நீண்ட இடைவெளிக்கு பின் உங்க எல்லோரையும் மீண்டும் நல்ல ஒரு சந்திப்போடு தொடர்ந்து இங்கு  சந்திக்கிறேன்.


என் மகள் திவ்யாகுட்டிக்கு இன்று பிறந்தநாள். அவளுக்கு பிடித்த கப்கேக்கும் சாக்லேட் ஃப்ராஸ்டிங்கோட கேக்கும் செய்தேன். இன்று ப்ளே இடத்தில் அவளுடைய்ய க்ளாஸ் ப்ரென்ஸுக்கு பார்ட்டி குடுக்கிறாள்.  இன்று பார்ட்டி முடிந்ததும் கோவில்,பீச் என்று தற்சமயம் வரை ப்ரோக்ராம் செய்துள்ளோம்.
இங்கு வெதர் கொஞ்சம் மழைமூட்டத்தோட இருக்கிறதால் சில சமயம் சேஞ் ஆக வாய்ப்பு இருக்கிறது.


வாங்க எல்லோரும் பார்டிக்கு வந்து என் மகளுக்கு உங்க எல்லோரட வாழ்த்துகளோடயும் ஆசிர்வதித்து மேன் மேலும் இதே போல் வாழ்வில் எல்லா வளமும் பெற்று  மேன் மேல் பிறந்ததினத்தை கொண்டாட நான் கடவுளிடம் வேண்டுகிறேன்.
நிங்களும் வந்து என் மகளை ஆசிர்வதித்து பார்டிக்கும் வந்து கலந்து கொள்ளவும்.


Sunday, May 13, 2012

Mothers Day

WISH YOU A HAPPY MOTHERS DAY





Monday, April 16, 2012

பெரும் துயரம்

இன்று எங்கள் அப்பா இறைவனடி எய்தினார்.
என்றும் என்றும் மறக்கமுடியாத உங்கள் அன்பும் அரவனைப்பும் என்னால் எப்போதும் விலைகொடுத்தாலும் கிடைக்கத என் பாசமிகுந்த அப்பாவுக்காக நானும் எங்கள் குடும்பமும் ஆழந்த இந்த தருனத்தை வார்த்தகளால் சொல்ல முடியவில்லை.







Saturday, April 14, 2012

தமிழ் புதாண்டு வாழ்த்துக்கள் - இனிய விஷு

இனிப்பு போளி






















எல்லா வலையுலக நண்பர்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எல்லா மலையாள நணபர்களுக்கும் என் இனிய விஷு புத்தாண்டு வாழ்த்துக்கள்.



















Saturday, March 24, 2012

பிறந்தநாள் இனிப்பு பைனாப்பிள் வீப்
































இன்று என் பிறந்தநாளுக்கு நான் செய்த இனிப்பு, இன்று வெளியில் லன்ஞ்க்கு ஓலிவ் கார்டன்+கோவில் போய் வந்து மீதியை அடுத்தபதிவில் சந்திக்கிறேன். எல்லாரும் வந்து இனிப்பை பார்த்து நிங்களும் செய்விங்க என்று நம்புகிறேன்.நேரில் வருகிறவர்களுக்கு நிறையவும், வராதவர்களுக்கு அவசியம் பார்சல் உண்டு. எல்லாரும் ஹேப்பி தானே.வாங்கோ வாங்கோ.




தேவையானவை

பைனாப்பிள் துண்டுகள் - 1கப்
கூல் வீப் - 1
மில்க்மெய்ட் - 1 டின்
பாதாம், அக்ரூட் - 1 தே.க

செய்முறை

ஒரு பெரியா கேஸ்ரோல் அல்லது நல்ல ப்ரிஜரில் வைக்ககூடிய சேப் பௌல் அதில் கூல் வீப்+பைனாப்பிள் துண்டுகள் (மிக மிக பொடியாக அரிந்தது, முடிந்தால் மிக்ஸியில் போட்டு ஒரு சாப் செய்தது)மில்க் மெய்ட் எல்லாவற்றையும் போட்டு நன்றாக போர்க்கால் கிளறிவிட்டு அதன் மேல் உலர் பருப்புகள் போட்டு அலங்கரித்து ப்ரிஜரில் 3 மணி நேரம் வைத்து பரிமாறுவதற்க்கு முன் ப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து சாப்பிடவும். விநாடிகளில் காலியாகிவிடும்.

எளிதில் அடுப்பே இல்லாமல் செய்து அசத்திவிடகூடிய இனிப்பு.






Thursday, March 22, 2012

யூகாதி பண்டிகை





















































































தெலுங்கு வருட பிறப்பு-யூகாதி

தேங்காய போளி

தேவையானவை

மைதாமாவு 1 கப்
தேங்காய் துறுவியது 1 கப்
வெல்லம் பொடித்தது 1 கப்
உப்பு 1/2 தே.க
ஏலத்தூள் 1 தே.க
தண்ணிர் கொஞ்சம்
எண்ணெய் 2 தே.க
நெய் 1 தே.க
வாக்ஸ் பேப்பர் 2 சிறிய துண்டுகள்

செய்முறை

மைதாமாவை உப்பு, கொஞ்சம் தண்ணிர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்
நன்றாக பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

பூரணத்திற்க்கு ஒரு அடிகனமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணிர் விட்டு குறைந்ததீயில்
வைக்கவும். தண்ணிர் கொதிக்க ஆரம்பித்ததும். அதில் வெல்லத்தை போட்டு நன்றாக கிளறி விடவும்.
நன்றாக கொதிக்கும் போது துறுவிய தேங்காயும் சேர்த்து கிளறி விடவும். பாத்திரத்தில் ஒரங்களில் ஒட்டாமல் நல்ல திக்காக வரும் போது ஏலத்தூள்,நெய், விரும்பினால் 1/2 தே.க ரவையும் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.

கை பொறுக்கும் சூடு இருக்கும்போது சின்ன உருண்டைகளாக்கி வைக்கவும்,
மேல் மாவிற்க்கு மைதாமாவில் இருந்து சிறு உருண்டைகளாக எடுத்து கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிவிட்டு ஒரு பேப்பரில் வைத்து கையால சின்ன சப்பாத்தி போல் பரத்தவும். அதில் பூரண உருண்டையை வைத்து நன்றாக எல்லாபக்கமும் மூடி விடவும்.
அதை முதலில் ஒரு வேக்ஸ் பேப்பரில் வைக்கவும், அதன் மேல் அடுத்த வேக்ஸ் பேப்பர் வைத்து சப்பாத்தி குழவியால் நன்றாக பரத்தவும்.

இப்போது தவாவில் குறைந்த தீயில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்நிறமாக வெந்து எடுக்கவும்.
நல்ல டேஸ்டியான தேங்காய் போளி ரெடி.


எல்லா தெலுகு மக்களுக்கும் இனிய யூகாதி வாழ்த்துக்கள்.













Friday, March 16, 2012

கீரை மிளகூட்டல் (கேரளா)
















கீரை மிளகூட்டல்

தேவையானவை

கீரை - 1கட்டு

அரைக்க
-------


தேங்காய் துறுவல் - 2 தே.க
மிளகாய் வற்றல் - 1
மிளகு - 1/2 தே.க
சீரகம் - 1/2 தே.க
உளுந்து - 1/2 தே.க


தாளிக்க

தே.எண்ணெய்அல்லது(எந்த) - 1/2 தே.க
உளுந்தம் பருப்பு - 1/4 தே.க
கடுகு - 1/ 4தே.க
பெருங்காயதூள் - 14 தே.க
கறிவேப்பிலை - கொஞசம்

செய்முறை


கீரையை மண்போக நன்றாக அலசி பொடியாக அரியவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து, மிளகு,மிளாகாய் போட்டு வறுத்து எடுக்கவும்.சூடு ஆறியது தேங்காய துருவல் சேர்த்து நல்ல அரைக்கவும்.


கீரை கொஞ்சமாக உப்பு சேர்த்து தண்ணிர் விட்டு முடாமல் வேக வைக்கவும், வெந்ததும் அதில் அரைத்துள்ள விழுதை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் மூடி போடாமல் வேகவைக்கவும்.
தாளிக்கயுள்ளதை தாளித்து அதில் சேர்க்கவும்.

டிப்ஸ்: கீரை பார்க்க பச்சையாக வேண்டுமென்றால் மூடாமல் குறைந்த தீயில் வைக்கவும்,
வற்றல் குழம்பு, சுட்ட அப்பளம், கீரை காம்பினேஷனோட சூடா சாதம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

கீரை சாப்பிட விரும்பாதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.







Wednesday, March 7, 2012

3 இன் 1 ப்ரேக்பாஸ்ட் (க்ரஸாண்ட்,வாவில்ஸ்,)
















தேவையானவை

க்ரஸாண்ட் - 2
வாவிள்ஸ் - 2
ஸ்க்ராம்பிள்ட் எக் அல்லது ஆம்லெட்
சீஸ் ஸ்லைஸ் - 1(விரும்பினால்)

செய்முறை

க்ராஸாண்ட் (ரெடிமேடா கையில் கிடைக்கும்) அதை வாங்கவும்.
வாவில்ஸ் (ரெடெமேட்)
முட்டை - 2 அதை ஆம்லெட்டாகவும், அல்லது ஸ்க்ராம்பில்ட்டாகவும் செய்து வைக்கவும்.
டோஸ்டரில் க்ராஸாடையும், வாவில்ஸையும் டோஸ்ட் செய்யவும்.
க்ராஸாண்ட் வாம்மாக இருக்கும் போதே சீஸ் சைலஸையும், ஸ்க்ராம்பில்ட் எக்கையும் அதில்வைத்த்து க்ராஸண்ட் சான்ட்விச்சாகவும் ப்ரேக்பாஸ்டாக குழந்தை முதல் பெரியவரை சாப்பிடலாம்.

வாவில்ஸையும் இதே போல் டோஸ்டரில் இருந்து எடுத்ததும், அதில் சீஸ்ஸ்லைசயும் ஸ்க்ராம்பில்ட் எக்கையும் வைத்து சாப்பிட குடுக்கலாம்.

இரடுமே ப்ரேக்பாஸ்டாக சாப்பிடலாம்.

நல்ல ஹெலொதி ப்ரேக்பாஸ்ட்.

என் கனவருக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த ப்ரேக்பாஸ்ட்.எங்கள் வீட்டில் வெக்கேசனுக்க்கு என் குழந்தைகளின் ப்ரென்ட்ஸ் வந்தபோது இதை குடுத்தோம் எல்லோருக்கும் ரொம்ப விரும்பி மேலும் கேட்டு சாப்பிடாங்க நானும் விரும்பி சாப்பிட்டேன்,நிங்களும் அவசியம் அடுத்த முறை இதே போல் செய்து சாபிட்டு சொல்லுங்க.












Wednesday, February 29, 2012

மாங்கோ பை- லீப் வருட டெசர்ட்













தேவையானவை

மாம்பழ கூழ் - 1 டின் ரெடெமேட் ( வீட்டிலும் மாம்பழதை கட் செய்து
அந்த சதை பகுதியை வழித்தெடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
பால் - 2 பெரிய கப் (புஃல் பேட்)
சர்க்கரை - 1/2 கப்
ஜெல்லடின் - அன் ப்ளேவர்ட் 1 பாக்கெட்
க்ரஸ்டு - 1 (க்ராம் க்ராக்கர்ஸ் க்ரஸ்டு) ரெடிமேடாக கிடைக்கும்
அலுமினியம் ட்ரே




செய்முறை

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி குறைந்த தீயில் வைத்து லேசாக கொதிக்க ஆரம்பிக்கும் போது மாம்பழ கலவையை அதில் ஊற்றி ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடவும். வேற ஒரு பாத்திரத்தில் தண்ணியை விட்டு லேசாக வார்ம் செய்து அதில் ஜெல்லடினை போட்டு போர்க்கால நல்ல மிக்ஸ் செய்து அதையும் மாம்பழ கலவையோடு சேர்த்து நன்றாக கிளறி விட்டு அதில் சர்க்க்ரையை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்
நல்ல கொஞ்சம் கொதிக்கும் போது அடுப்பை அணக்கவும், நல்ல க்ளேஸ்டாக தெரியும்.
இந்த கலவையை க்ரஸ்ட் இருக்கும் ட்ரேயில் ஊற்றி ப்ரிஸரில் 3 மணிநேரம் வைக்கவும்
பின் அதை எடுத்து பிஸ்ஸா கட் செய்வது போல் செய்து டெசஸ்ட்டாக பரிமாறவும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு டெசர்ட்.
பெரியவர்களை கேட்கவே வேண்டாம் உடனே காலி செய்திடுவாங்க.











Tuesday, January 17, 2012

Happy Pongal

Wish you a haapy pongal all my friends.

This time I am late.



Sunday, January 1, 2012

HAPPY NEW YEAR

WISH YOU A HAPPY NEW YEAR FOR ALL MY BLOG FRIENDS AND FAMILIES.