Friday, September 10, 2010

வலைதளத்தில் விஜியின் தொடர்பதிவு

பதிவுலகில் இலாவின் அழைப்பு

விஜியை பற்றி மேலும் தெரியனும் என்று பதிவுலகில் விரும்பறாங்க.
என் அன்பான தோழி இலா என்னை அழைத்திருக்கும் இந்த வலைபதிவு தொடரில் எனக்கு தெரிந்தை உங்களோடு பகிர்ந்துக்கறேன்.
மேலும் என்னோட நட்புள்ளங்களுக்கும்,இதோ எனக்கு தெரிந்த தமிழில் எழுதுகிறேன். நிறை குறை இருந்தால் கண்டிப்பா வந்து சொல்லுங்க.

1,வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


ஏனுங்க இப்படி முதலிலேயே சந்தேகத்தோட கேட்கறிங்க.
என் பேரிலேயே ஒரு வெற்றி இருக்கு Victory.அது தான் என் அம்மா, அப்பா ஆசையாக வைத்த பெயர்.
அடுத்து என்னவரும்,என்னை சுற்றியுள்ள சொந்தமும்,சுற்றமும்,நட்பும் சேர்ந்து எனக்கு ஒரு பேர் சூட்டினார்கள்
அந்த பேரில் தான் இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கேன்.
இந்த நாட்டில் அப்பாவின் பேரை கடைசியில் சேர்த்து அழைப்பது முறை.
அதன் படி என்னை அழைக்கவேண்டும் என்றால் ரொம்ப கஷ்டபடுவார்கள்.
இந்நாட்டவர்கள் என்னை மிஸ் வி என்றும் அழைக்கிறார்கள்.

2.அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.

இதில் சந்தேகமே வேண்டாம், என் பேரை சொல்ல நான் எப்பவுமே பெருமை கொள்கிறேன்.
என் பேரில் தான் எல்லாமே இருக்கு, இருக்கணும்.

3.நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

அதை ஏன் கேக்கறிங்க. அது ஒரு நல்ல கதை. அதை சொல்ல வேண்டும் என்றால் பக்கம் பக்கமா எழுதனும். சுருக்கி சொல்கிறேனுங்க.என்னோட தோழிகளின் அன்பு தொல்லையினால் எழுத வந்தேன். ஆங்கிலமும் இல்லாமல், தப்பு தப்பா தமிழில் எழுதுகிறேன்.ப்ளாக்கில் இன்னும் நிறய்ய விஷயங்கள் இருக்கு. அதை எல்லாம் கூட இன்னும் சரிவர தெரியாமல் நேரம் இருக்கும்போதல்லாம் வந்து எழுதுகிறேன்.

4..உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

இன்னும் அந்த முயற்ச்சியில் இறங்கவே இல்லைங்க.
என்னங்க நாம என்ன பிரபலமடைய செய்ய. நாம நேயர்கள் வந்து போகிறாங்களே அது தாங்க மேலும் மேலும் பிரபலமடைய செய்யும் என்று நான் நம்புகிறேன்.

5.வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

50+50 எல்லா சொந்த விஷயமும் இதில் எழுத முடியாதுங்க.
பாதி பாதிதாங்க.

6.நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

கண்டிப்பா இல்லிங்க.இதில் கூட சம்பாதிக்கலாமா?அப்படி எல்லாம் கூட இருக்கா? இப்பவெல்லாம் யாருங்க டைரியில் எழுதுகிறார்கள்.
இந்த நவின யுகத்தில் எனக்கு தெரிந்தவை இதில் எழுதி பத்திரமா என் நட்புறவுகளுக்கும் என் சந்ததிகளுக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தான் எழுதி வைக்கிறேன். மேலும் எனக்கும் எல்லாம் எப்பவுமே நினைவில் வராது, அந்தமாதிரி நேரத்திற்க்கு ஒரு அவசரத்துக்கு பயன்படும் என்று தான் எழுதுகிறேன்.

7.நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

மூன்று அதை ஏன் கேட்கறிங்க.எனக்கு இசை நன்றாக தெரியும்
அதை வைத்து ஆரம்பிக்கவேண்டும் என்று நினத்து இது வரை இல்லை.
பார்ப்போம் கூடிய சீக்க்ரமே இதிலேயே இனைக்கவுள்ளேன்,
ஆங்கிலத்தில் ஒன்றும் தமிழில் இரண்டும் இருக்குங்க.
ஆனல் எதையுமே சரியா எழுத தான் நேரமில்லிங்க.
ஆங்கிலத்தில் தான் முதலில் எழுத ஆரம்பித்தேன்.
இப்ப ஒரு ப்ளாக்கிற்கே எழுத நேரமில்லை.
எல்லாத்தையும் ஒன்றாக இணைக்கவேண்டும் என்றிருக்கேன்.
இந்நாட்டின் படி யூனைட்டா இருக்கனும்.

8.மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.

அப்படிஒன்றும் இல்லிங்க. பொறாமை உண்டுங்க ஒன்னே ஒன்னில் மட்டும்
நான் இன்னும் சரியா தமிழில் எழுதமுடியவில்லையே என்று தாங்க.
ஒரோருத்தரும் எவ்வளவு அழகா தமிழில் எழுதாறாங்க.
பொறாமை, கோபம் இதெல்லாம் இல்லிங்க. அதெல்லாம் இருந்தால் ஒன்று சேருவது கஷ்டமுங்க.
போட்டி வேண்டும் கண்டிப்பா.ஆனால் பொறாமை இருக்கவே கூடாது.
அன்போடு பழகனும் அனபை பெறனும் இது தாங்க எனக்கு தெரிந்தது. மேலும் அன்பால் எல்லாம் அடையவேண்டும் என்பது தான் என்னோட லட்சியம்.

9.உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

சத்யா என்னவர்தாங்க.இப்பவெல்லாம் இந்த பக்கமே கூட எட்டி பார்பதில்லை.எனக்கு பாட்டு,குக்கிங்,கதை,கவிதை
இதில்லாம் நிறய்ய பரிசுகள் கிடைத்திருக்கு. நீ தான் நிறய்ய பரிசுகள் எல்லாம் வென்றிருக்காயே ஏன் நீ உனக்கு தெரிந்த எல்லாம், எழுதி அடுத்தவங்களுக்கும்,பயன்படும்படியா எழுது என்று சொல்லி ஆர்வமூட்டினார். நன்றி சத்யா.

10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னை பற்றி பெரிதாக ஒன்றும் சொல்வதற்க்கில்லை. எனக்கு இசை என்றால் ரொம்ப பிடிக்கும்.
நான் இசையில், கானபூஷன் பட்டம் பெற்றுள்ளேன், வானொலி, டிவி எல்லாவற்றிலும் பங்கேற்றிருக்கேன்.
அன்பான பெற்றோர்கள்,உடன்பிறந்தவர்கள்,அன்பான கணவர், அழகான குழந்தைகள். நிறைவான வாழ்க்கை, நோய் நொடியில்லாமல் இல்லாமல் நீடுழி வாழனும் அதை தான் நான் எப்போதும் இறைவனிடம் வேண்டுவேன்.
நிங்களும் எல்லாரும் எந்த குறையும் இல்லாமல், நோய் நொடியில்லாமல் சந்தோஷமா இருக்கனும் அதை தான் நான் எல்லாருக்கும் இந்த
வலை தளத்தின் வழி சொல்லிகொள்கிறேன்.
நான் எல்லோரிமும் ரொம்ப அன்பாக பழககூடியவள்,எல்லாருடைய்ய உதவியும், அன்பும் எனக்கும் வேண்டும்.
இந்த வலைதளத்தின் வழி நிறய்ய புதிய நட்புகளும்,அவர்களின் அன்பையும் நான் பெற்றிருக்கேன். மேலும் மேலும் இதே போல் பெறவேண்டும்.
அனைவரின் அன்போடும் மேலும் மேலும் என் தளத்திற்க்கு உங்களால் பெருமை வந்து சேரவேண்டும்.

என்னோட தொடரை நானும் தொடர ஆசைபடும் தோழிகள்+தோழர்.

Mohamed Ayoub
மனோ அக்கா
மஹி
கீதாஆச்சல்
சாருஸ்ரீராஜ்
பாயீஜா


மேலும் என் இந்த அழைப்பை ஏற்று நிங்களும் தொடருவிங்க என்று நம்புகிறேன்.

39 comments:

ஜெய்லானி said...

டீச்சர் டீச்சர் எனக்கு பாட்டு கத்து தருவீங்களா..!!

ஜெய்லானி said...

ஈஸியா அழகா சொல்லியிருக்கீங்க ...

Chitra said...

அருமையான பேட்டி!!!

அந்நியன் 2 said...

அய்யோயோ ..நானுமா ???
நீங்க வேறே நான் ஒன்னும் ஆசிரியர் இல்லிங்கோ,சும்மா டைம் பாஸ்சுக்கு வந்துட்டு போறேனுங்கோ.....

உங்களின் பதிவு ரொம்பவே நல்லா இருக்கு விஜியக்கா வாழ்த்துக்கள்.

Krishnaveni said...

interesting answers, happy blogging

kavisiva said...

பாசாங்குகள் இல்லாமல் உள்ளதை உள்ள படி அழகா சொல்லி இருக்கீங்க விஜி! நல்லா இருக்கு உங்களைப்பற்றி தெரியாத்ததும் தெரிந்து கொண்டேன் :)

பதிவர் சந்திப்பின் பார்ட் 2 இல் நீங்களும் வரீங்க ஒகேவா :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான பேட்டி!!!

Sanghamitra Bhattacherjee(Mukherjee) said...

Thanks for your lovely comment on my blog:)..please, do stay in touch!

Unknown said...

ரொம்ப அழகாக உங்களை பற்றி சொல்லியிருக்கிங்க.. பதிவினை பின் தொடர என்னை அழைத்தமைக்கு நன்றி...

Chitra said...

அன்போடு பழகனும் அனபை பெறனும் இது தாங்க எனக்கு தெரிந்தது. மேலும் அன்பால் எல்லாம் அடையவேண்டும் என்பது தான் என்னோட லட்சியம்.


......அழகான லட்சியம்..... எளிமையான பதில்கள்...... அருமை!

Jaleela Kamal said...

விஜி தான் என்னை ஆரம்பட்திலிருந்து தோழியா அழைத்தது,
விஜி தோழ்யா கிடைத்தது ரொம்ப சந்தோஷம்,ஏற்கனவே உங்கலை பற்றி தெரிந்து இருந்தாலும், அழகான அன்பானமுரையில் பதில் போட்டு இருகீங்க விஜி.

மலையாளம் தெரிந்த நீங்க அழகிய தமிழில் வலை பூ எழுதுறீங்க,
இதே பெரிய விஷியம் தோழி விஜி,

அந்நியன் 2 said...

வருகிற வியாழன் ஊருக்கு போறேன் அக்டோபர் பதினாறு ரிட்டன் வந்து கருத்து பரிமாறிக் கொள்ளலாம்க்கா பை பை .....தொடரட்டும் உங்கள் பயணம்

ஸாதிகா said...

விஜி,உங்கள் பேச்சில் சொட்டும் கனிவும்,கருணையும்,உபகார உணர்வும் அப்படியே பதிவில் பிரதிபலிக்கின்றது.

Mahi said...

விஜியக்கா,மாட்டிவிட்டுட்டீங்களே!:)
தொடர்கிறேன்..கொஞ்சம் டைம் குடுங்கோ.

Menaga Sathia said...

nice to know about u...interesting answers..

Pavi said...

நன்றாக இருக்கிறது இந்த பதிவு .

மோகன்ஜி said...

விஜி மேடம்,எளிமையா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்

Vijiskitchencreations said...

ஜெய் உங்களுக்கு அவசியம் வாங்க கற்று தருகிறேன்.நன்றி ஜெய்.

Vijiskitchencreations said...

சித்ரா வாங்க. எனக்கு உங்க ப்ளாக் ரொம்ப பிடிக்கும் நல்ல பதிவுகள் எப்பவும் வந்தாலும் படித்து எனக்கு தெரிந்த தமிழில் சொல்வேன்.
வாங்க.

Vijiskitchencreations said...

ஆயூப் வாங்க. அதெப்படி டீச்சர் மட்டும் தான் எழுதுவாங்களா, நிங்க ஊருக்கு போயி நல்லா என்ஞாய் செய்துவிட்டு மெள்ள வந்து எழுதுங்க.
நல்லபடியாக ஊர் பயணம் அமைய வாழ்த்துக்கள்.

Vijiskitchencreations said...

கவிசிவா வாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி.

Vijiskitchencreations said...

வெறும்பய பேர் ரொம்ப நன்றாக இருக்கு. வாங்க.நன்றி.

Vijiskitchencreations said...

sangamithra. welcome. I will try.

Vijiskitchencreations said...

சிநேகிதி நலமா? வாங்க அடிக்கடி வாங்க. நன்றி.

Vijiskitchencreations said...

ஜலீ நன்றி.ஆமாம் எல்லோரட தமிழை பார்த்து எனக்கு எப்பவும் ஒரு பொறாமை உண்டு. நல்லா அழகா ஒவ்வொருத்துரும் தமிழை எவ்வளவு நல்லா எழுதறாங்க.
என்ன பிஸியா பார்க்கவே முடியல்லை.

Vijiskitchencreations said...

ஆயூப் இனிய பயணம் அமைய வாழ்த்துக்கள். வெயிட்டிங்.

Vijiskitchencreations said...

ஸாதிகா அக்கா, எப்படி இருக்கிங்க, என்ன கானவே முடியல்லை. ஒரே பிஸியா?
ஆமாம் எனக்கு தெரிந்ததை அப்படியே எழுதியுள்ளேன். எனக்கு ஒரு தோழி இருக்காங்க அவங்க அன்பை பார்த்தால் நான் கொஞ்சம் கூட அவங்க பக்கம் இல்லை. அவ்வளவு அன்பாக பழகுவாங்க,பேசுவதும், உதவி செய்வதிலும் அவங்க க்ரேட். அந்த மாதிரி ஆட்களை நான் எப்பவுமே கடைப்பிடிப்பேன். நன்றி.

Vijiskitchencreations said...

என்ன மஹி.தான் பெற்ற இன்பம் அதை எல்லாரும் பெற வேண்டும் என்பது தான் என் பன்பு.
காத்திருக்கேன். தொடருங்கோ. நன்றி மஹி.

Vijiskitchencreations said...

மேனகா நன்றி. வாங்க எனக்கு உங்க குட்டி பென்னிடம் சொல்லுங்க அவ அழகா இருக்கா.

Vijiskitchencreations said...

பவி முதல் வருகை. நன்றி. மீண்டும் வாங்க.

Vijiskitchencreations said...

மோகன்ஜி வாங்க.உங்க வலையும் ரொம்ப நன்றாக இருக்கு.

பத்மநாபன் said...

விஜி சகோதரி, ஒவ்வோரு கேள்விக்கும் ரொம்ப எதார்த்தமா எழுதிருக்கிறிர்கள்..
வாழ்த்துக்கள்

அப்புறம் உங்கள் வலைப்பூவில் இருக்கும் பதார்த்தங்கள் , முறுக்குவகைகள், கொழுக்கட்டை, வடை பாயாசத்தோடு சாப்பாடு...எல்லாம் அருமையான பிரெசெண்டஷன்... சாப்பிடும் ஆவலை
தூண்டுகிறது....

Vijiskitchencreations said...

உங்க வருகைக்கு நன்றி. மீண்டும் வாங்க. உங்க ப்ளாக் ரொம்ப நல்லா இருக்கு.வாங்க பத்மநாபன். கண்டிப்பா எப்பவும் எங்க வீட்டில் வருகிறவோர்கள் எல்லாம் வயிறு நிறய்ய சாப்படு போடுவோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இசைக்கான பதிவை விரைவில் எதிர்பார்க்கிறோம்....:)

Kousalya Raj said...

யதார்த்தமான பதில்கள். என் தளத்திற்கான உங்கள் விஜயம் கண்டு மகிழ்கிறேன் தோழி. நட்பு தொடரட்டும். உங்களின் பல திறமைகள் தெரிந்து பெருமை படுகிறேன். எனக்கு இசையின் மேல் காதல் உண்டு. ஆனால் கேட்க மட்டும் தான். :))

Starjan (ஸ்டார்ஜன்) said...

உங்களை பற்றி அழகாக சொல்லிருக்கீங்க விஜி.. யதார்த்தமான பதில்கள்.

மின்மினி RS said...

உங்களை பற்றி அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி விஜிக்கா.. வாழ்த்துகள்.

Unknown said...

அருமையான பேட்டி.. நல்ல பதில்கள்.. வாழ்த்துக்கள்..

Asiya Omar said...

உங்களை பற்றிய தகவல் அருமையாக சொல்லி இருக்கீங்க.இசை -கானபூஷன் இது எனக்கு இப்ப தாங்க தெரியும்.மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.