Showing posts with label கேக். Show all posts
Showing posts with label கேக். Show all posts

Thursday, June 10, 2010

கேக்


தேவையானவை
ஆல் பர்பஸ மாவு (மைதா மாவு) 1 கப்
சர்க்கரை 3/4 கப்
வெனிலா எசன்ஸ் 1 டீஸ்பூன்
முட்டை 2
பேக்கிங் பௌடர் 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா 1 டீஸ்பூன்
உப்பு 1 சிட்டிகை
பட்டர் 8 தே.க(1 ஸ்டிக்)
கேக் பான்
குக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் - 1/2 தே.க
செய்முறை
அவனை 350 டிகிரி முற்சூடு செய்யவும்.
முதலில் மாவை சலித்து வைக்கவும் அதில் பேக்கிங் சோடா, பேக்கிங் பௌடர் சேர்க்கவும்.
ஒரு பெரிய பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நல்ல ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அதில் வெண்ணெய் சேர்த்து மீண்டும் ஐந்து செகண்ட்ஸ் அடிக்கவும்
இதில் வெனிலா எசன்ஸ், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடிக்கவும்.
சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக
கலந்து ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அவனில் கேக் பானில் குக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் தடவி
இந்த கேக் மாவு கலவையை ஊற்றி 25 ல் இருந்து 30 நிமிடம் பேக் செய்யவும்.
டூத் பிக்க்ர் அல்லது போஃக்கால் வைத்து எடுத்து ஒட்டாமல் வந்ததும் வெளியில் எடுக்கவும்.
நன்றாக ஆறியபின் ப்ராஸ்டிங் செய்யலாம்.
இங்கு ப்ளயின் கேக் தான் செய்துள்ளேன். மேலே ஸ்ப்ரிங்ள்ஸ்
தூவியும் அல்லது பொடித்த சர்க்கரையும் மேல் தூவியும் பரிமாறலாம்.
என் மகளுக்கு ப்ராஸ்டிங், ஐசிங் விரும்பாததினால் செய்யவில்லை.
இது டி கேக்காகவும், இதை சாப்பிடலாம்.
விரும்பினால் சாக்லேட் ப்ராஸ்டிங், ஐஸிங், க்ரிம் சேர்த்தும் சாப்பிடலாம்.

Friday, March 12, 2010

வாழைபழ கேக்(Banana Walnut Cake)






மைதா மாவு - 1 கப்
பேக்கிங சோடா - 1 தே.க
பேக்கிங் பௌடர் - 1 தே.க
உப்பு - 1/4 தே.க
வெனிலா எஸன்ஸ் - 1 தே.க
முட்டை - 2
சர்க்கரை - 1 கப்
வெஜிடெபிள் எண்ணெய் 1/2 கப்
மசித்த வாழைபழம் - 2
வால்நட் - 1 தே.க
செய்முறை



அவனை முறுசூடு செய்யவும். 350 டிகிரி 45 நிமிடங்கள்


வாழை பழங்களை நல்ல மசித்து கொள்ளவும்.
மாவு,பேக்கிங் சோடா,பேக்கிங் பௌடர், உப்பு சேர்த்து நன்றாக சலிக்கவும்.

முட்டை, சர்க்க்ரை சேர்த்து நன்றாக 6 நிமிடங்கள் அடிக்கவும்.

அதில் மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதி பழகலவையை சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.

விரும்பினால் வால்நட் சேர்த்து கலக்கவும்.

லோஃப் பான்,அல்லது பேக்கிங் ட்ரேயில் ஊற்றி முற்சூடு செய்த
அவனில் 45 நிமிடங்கள் வைக்கவும்.

ஒரு முள்கரண்டியால் குத்தி பார்த்து ஒட்டாமல் வந்தால் வெளியில்எடுக்கவும்.

இதை காலை நேர ப்ரேக் பாஸ்டாகவும், மாலை நேர டி கேக்காகவும் சாப்பிட நன்றாக இருக்கும்.