Showing posts with label சாதவகைகள். Show all posts
Showing posts with label சாதவகைகள். Show all posts

Thursday, March 24, 2011

தக்காளி பிரியாணி(பர்த்டே ஸ்பெஷல்)



இன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி
எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மெனு. என்னவரும்ம் என் குட்டிஸும் நைட் வெளியில் போய் சாப்பிடலாம் என்று சொல்லிட்டாங்க, அவங்க ட்ரிட் இன்றைக்கு.


தேவையானவை


பாஸ்மதி அரிசி 1 கப்
தக்காளி 4
பச்சைமிளகாய் 2
வெங்காயம் 1
பூண்டு 2
இஞ்ஞி 1 துண்டு
தேங்காய பால் 1/2 கப்
கரம் மசாலா தூள் 1 தே.க



மசாலாவிற்க்கு

பட்டை 1 துண்டு
நெய் 2 தே.க
ஏலம் 2
பிரியாணி இலை 2


செய்முறை

பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்கயுள்ளதை தாளிக்கவும்.
வெங்காயம் பெரியதாக அரிந்து அதையும் சேர்த்து வதக்கவும்.
இஞ்ஞி பூண்டு பேஸ்ட்டும் சேர்த்து வதக்கவும்.
அதில் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணிர் வடித்துவிட்டு சேர்த்து வதக்கவும்.
இதில் கரம்மசாலா தூள், அரைத்துள்ள தக்காளி பேஸ்ட், தேங்காய பால் எல்லாம் சேர்த்து
நன்றாக கலந்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரில்(1:2)தண்ணிர் வைத்து 1 விசில் வைத்தெடுக்கவும்.
ரைஸ் குக்கர் என்றால்
தண்ணிர் - 1 கப்
தேங்காய பால் - 1/2 கப்
என்ற விகிதத்தில் வைக்கவும்.
சுவையான தக்காளி பிரியாணி நல்ல ஆறியதும் மேலே கொஞ்சம் நெய் ஊற்றி கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
வெங்காயம் ரைத்தா, வெள்ளரி ரைத்தா சேர்த்து சாப்பிடலாம்.



Wednesday, January 26, 2011

சுதந்திரதின ஸ்பெஷல் ரைஸ்






கேரட்,முள்ளங்கி,பட்டாணி ரைஸ்

தேவையானவை

கேரட் - துறுவியது 1/2 கப்
வெள்ளை முள்ளங்கி - துறுவியது 1/2 கப்
பட்டாணி - ஊறவைத்தது1/4கப்
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சைமிளகாய் - 1 நீளமாக வெட்டியது
இன்ஞி பூண்டு பேஸ்ட் - 1/2 தே.க
வேகவைத்த உதிரி சாதம் - 2 கப்
உப்பு - தேவைகேற்ப்ப
லெமன் ஜுஸ் - 1/2 தே.க
கொத்தமல்லி இலை - கொஞ்சம்


மசாலா--------
பட்டை - 1 துண்டு
சோம்பு - 1/2 தே.க
கரம்மசாலா - 1/2 தே.க

செய்முறை

பச்சரிசி, பாஸ்மதி அரிசி எதுவானலும் வேகவைத்த
உதிரி சாதம்.கடாயில் நெய்+எண்ணெய் விட்டு சூடாகியதும்
பட்டை, சோம்பு,சேர்த்து வதங்கியதும், இஞ்ஞி பூண்டு பேஸ்ட்
வெட்டிய பச்சைமிளகாய்,வெங்காயம், சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதில் துறுவிய கேரட், துறுவிய முள்ளங்கி
பட்டானி சேர்த்து மேலும் பத்துநிமிடம் வேகவைக்கவும்.
இதில் கரம்மசாலா தூள், வேகவைத்த சாதம், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
லெமன் சாறை சேர்த்து மேலும் ஒருமுறை நன்றாக கலந்து
கொத்தமல்லி இலை துவி பரிமாறவும்.
இதற்க்கு கேப்ஸிகம் ரைத்தா, பச்சடி, வெங்காய பச்சடி
ரைத்தா சேர்த்துசாப்பிட நன்றாக இருக்கும்.

ஹெல்த்தி க்ரின்+பைபர் சாதம்.


HAPPY REPUBLIC DAY


Friday, September 17, 2010

லெமன்கீரை சாதம்(Lemon Spinach Rice)



கீரை எலுமிச்சை சாதம்



தேவையானவை

வடித்த சாதம்

லெமன் - 1

கீரை - 1 தே.க பொடியாக அரிந்தது

மஞ்சள் தூள் - 1/4 தே.க

எண்ணெய் - 1 தே.க

கடுகு - 1/2 தே.க

வற்றல் மிளகாய் - 1

உளுந்தம் பருப்பு - 1/2 தே.க

கடலை பருப்பு - 1/2 தே.க

பெருங்காயதூள் - 1/4 தே.க

கறிவேப்பிலை - கொஞ்சம்

வறுத்த வேர்கடலை - 1/2 தே.க

உப்பு - தேவைக்கேற்ப்ப



செய்முறை


எந்த கீரயை வேண்டுமானலும் இதில் சேர்க்கலாம்.

கீரையை நல்ல மண் போக அலசி பொடியாக அரிந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து அதில்

மஞ்சள் தூள்,உப்பும்,பொடியாக அரிந்த கீரையும் சேர்த்து நன்றாக

கிளறி மூடி போட்டு பத்து நிமிடம் வதக்கவும்.

வதங்கியதும் லெமன் ஜூஸ், சாதம் சேர்த்து நன்றக கலந்து மேலே

கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

நல்ல ஹெல்தியான டு இன் ஒன் லெமன் ரைஸ் ரெடி.

இது இங்கு நான் ஒரு கெட் டு கெதரில் எடுத்து சென்றது,
எங்க கெட் டு கெதரில் ஒரு விதிமுறை என்னவென்றால் அதில்
சமைக்கும் உணவு புதுமாதிரியாகவும் அதில் ப்ரோட்டின், வைட்டமின்ஸ்
எல்லாம் அடங்கியவையாக இருக்கவேண்டும்.(லெஸ் கார்ப்போ)

என் தோழிகள் எல்லாருக்கும் ரொம்ப பிடித்து போயி,வாவ் ரொம்ப டேஸ்டியாக இருக்கு என்று எனக்கு பாராடும்,என் மற்ற தோழிகளும் இப்ப செய்ய தொடங்கி பேரும் வாங்கிட்டங்க.எனக்கு ஒரு குஜராத்தி ஆண்டி செய்து நான் சாப்பிட்டேன்.சரி நிங்களும் எல்லாரும் இதே போல் அடுத்த தடவை கீரை சேர்த்துசெய்து சாப்பிட்டு வந்து மறக்காமல் சொல்லுங்க.


Monday, April 12, 2010

பிஸிபேளாபாத்


தேவையானவை


பச்சரிசி - 1 கப்

துவரம் பருப்ப்பு - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/2 தே.க

பெருங்காயத்தூள் - 1/2 தே.க

புளி - நெல்லிகாய் அளவு

நெய் - 1/2 தே.க



காயக்றிகள்


கேரட், பட்டாணி,பீன்ஸ்,உருளை,செளசெள,கத்தரிக்காய்,

சின்ன வெங்காயம்,தக்காளி, (அரிந்தது 1 கப்)


தாளிக்க

-------------

எண்ணெய் - 1 தே.க


முந்திரி பருப்பு - 4(நெய்யில் வறுத்தது)

வேர்க்கடலை - 1/2 தே.க

கடுகு - 1/2 தே.க

கறிவேப்பிலை - கொஞ்சம்,


மசாலா பௌடர்

-----------------------


கடலை பருப்பு - 1 தே.க

தனியா - 1/2 தே.க

வெந்தயம் - 1/4 தே.க

மிளகாய வற்றல் - 4

பட்டை - 1 துண்டு

க்ராம்பு - 2

தேங்காய் துருவியது - 1 தே.க


கடாயில் நல்ல சிவக்க வறுத்து பொடிக்கவும்.


குக்கரில் அரிசி,பருப்பு, உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நல்ல மசிய வேகவைக்கவும்.


பான் அல்லது கடாயில் எண்னெய் விட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நல்ல வதக்கவும். தக்காளி,காயகறிகள்,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

ஐந்து தே.க மசாலா பௌடர் சேர்த்து நன்றாக வதக்கி,

புளி கரைசல் 2 கப் தண்னிர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்து கெட்டியானதும் வேகவைத்த அரிசி,பருப்பு

சேர்த்து மேலும் அரை கப் தண்னிர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கெட்டியானதும் மேலே கொஞ்சம் நெய் விட்டு

தாளித்து கொட்டவும்.

மேலே வறுத்த வேர்க்க்டலை, முந்திரி போட்டு கலந்து

பரிமாறவும்.


சிப்ஸ், அப்பளம், வடாம் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

ஹெவி லன்ஞ்.

இந்த சாதம் கர்நாடகவில் ப்ரசித்தமானது.





Thursday, March 25, 2010

புதினா சாதம்


புதினா சாதம்

தேவையானவை

வடித்த சாதம் - 1 கப்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப்ப



அரைக்க

புதினா - 1 கட்டு
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
பச்சை மிளகாய் – 2
இஞ்ஞி - 1 சின்ன துண்டு
லெமன் ஜூஸ் - ½ தே.க

தாளிக்க

எண்ணெய் - 1 தே.க
கடுகு - ½ தே.க
மிளகாய் வற்றல் - 1
பெருங்காய தூள் - ¼ தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை

சாதத்தை நல்ல உதிரியாக வடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து
அரைத்துள்ள மசாலவை போட்டு உப்பு சேர்த்து
நல்ல பச்சை வாசனை போக வதக்கவும்.
வடித்துள்ள சாதத்தை அதில் கலந்து நல்ல கிளறவும்.
லெமன் ஜுஸ் விட்டு, கொஞ்சம் நெய்யும் சேர்த்து
கிளறி விட்டு இறக்கவும்.
நல்ல சட்னியோட சாப்பிட நன்றாக இருக்கும்.
விரும்பினால் வெங்காயம் பொடியாக நறுக்கி வதக்கி
சேர்க்கலாம்.

Tuesday, December 22, 2009

கேப்ஸிகம் ப்ரைட் ரைஸ்


தேவையானவை

பாச்மதி அரிசி - 1கப்
கேப்ஸிகம் - 1
வெங்காயம் - 1
பட்டானி - 1/2 தே.க
கேரட் - 1
தக்காளி - 1
இஞ்ஞி - 1/4 தே.க
பூண்டு - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
நெய் - 2 தே.க
or
பட்டர்

செய்முறை

பாஸ்மதி அரிசியை நல்ல கழுவி பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
வெங்காயம், காப்ஸிகம், கேரட் நீளமாக கட் செய்யவும்.
தக்காளியை சின்ன துண்டுகளாக்கவும்.

பட்டானியை ஊறவைக்கவும். ப்ரோசனும் உபயோகிக்கலாம்.
குக்கர் அல்லது பானில் பட்டர் அல்லது நெய் விட்டு
இஞ்ஞி, பூண்டு பேஸ்டு, வெங்காயம், தக்காளி போட்டு ஐந்துநிமிடம்
வதக்கவும்.

தக்காளி,காய்கறிகள் எல்லாம் சேர்த்து மேலும் ஐந்துநிமிடம்
வதக்கி அதில் ஊறவைத்த அரிசி,உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு
2 கப் தண்னிர் ஊற்றி குக்கர் அல்லது ரைஸ்குக்கரில்
உதிரியாக வேகவைக்கவும்.

கொஞ்சம் பட்டர் அல்லது நெய் போட்டு கொத்தமல்லி இலை
லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
இது நல்ல பட்டரி டேஸ்டோட கேப்சிகம் ரைஸ் சாப்பிட நன்றாக இருக்கும்.

Thursday, December 10, 2009

வெஜ்ப்ரைட் ரைஸ்