Showing posts with label சிற்றுண்டிகள். Show all posts
Showing posts with label சிற்றுண்டிகள். Show all posts

Tuesday, July 31, 2012

ஒவன் பேக்ட் மசாலா வடை

ஒவன் பேக்ட் மசாலா வடை
என் தோழி கீதா ஆச்சலின் ரெசிப்பி பார்த்து செய்தது. இதில் சின்ன மாற்றாம் நான் பட்டாணி பருப்பு நிற்ய்யவும் கால் கப் கடலை பருப்பும் சேர்த்து செய்தேன்.
நன்றி கீதா.
நீண்ட நாடகள் கழிந்து ஒரு நல்ல ரெசிப்பியோட உங்களை எல்லாம் இங்கு மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழச்சி.

பேக்ட் மசாலா வடை

தேவையானவை


கடலைபருப்பு
மிளகாய் வற்றல்
இஞ்ஞி
வெங்காயம்
பச்சைமிளகாய்
சோம்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி
புதினா
எண்ணெய்
உப்பு
பேக்கிங் ட்ரே
அலுமினியம் பாயில்

செய்முறை

பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து மிளகாய் வற்றலோடு சேர்த்து ரவை பததிற்க்குஅரைதெடுக்கவும்.

வெங்காயம், இஞ்ஞி பச்சைமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக அரியவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா,சோம்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

குக்கிங்க் ஸ்பேரே அல்லது கொஞ்சம் எண்ணெய் பேக்கிங் ட்ரேயில் பேக்கிங்க் ஷீட் அல்லது அனுமினியம் பாயில் போட்டு அதில் குக்கிங் ஆயில் ஸ்ப்ரே தெளித்து வடைகளை கொஞ்சம் இடைவெளி விட்டு வைக்கவும்.

பேக்கிங் முறை அவரவ ஆவனின் மாடலை பொறுத்து வைக்கவும்.
முதலில் 10 நிமிடம் ப்ராயில் மோடில் வைக்கவும்.
பின் அதை திருப்பி விட்டு 350 டிகிரியில் 15 நிமிடம் வைத்து எடுத்தால் நல்ல மொறு மசால வடை ரெடி.
யாராலயும் கண்டுபிடிக்க முடியாது இது ஒவனில் செய்த்தது என்று சொன்னால் தான் தெரியும்.
சுவை மணம் எல்லாம் பொரித்தெடுக்கும் வைடை போலவே நன்றாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்க்கு ஏற்றது.















Wednesday, March 7, 2012

3 இன் 1 ப்ரேக்பாஸ்ட் (க்ரஸாண்ட்,வாவில்ஸ்,)
















தேவையானவை

க்ரஸாண்ட் - 2
வாவிள்ஸ் - 2
ஸ்க்ராம்பிள்ட் எக் அல்லது ஆம்லெட்
சீஸ் ஸ்லைஸ் - 1(விரும்பினால்)

செய்முறை

க்ராஸாண்ட் (ரெடிமேடா கையில் கிடைக்கும்) அதை வாங்கவும்.
வாவில்ஸ் (ரெடெமேட்)
முட்டை - 2 அதை ஆம்லெட்டாகவும், அல்லது ஸ்க்ராம்பில்ட்டாகவும் செய்து வைக்கவும்.
டோஸ்டரில் க்ராஸாடையும், வாவில்ஸையும் டோஸ்ட் செய்யவும்.
க்ராஸாண்ட் வாம்மாக இருக்கும் போதே சீஸ் சைலஸையும், ஸ்க்ராம்பில்ட் எக்கையும் அதில்வைத்த்து க்ராஸண்ட் சான்ட்விச்சாகவும் ப்ரேக்பாஸ்டாக குழந்தை முதல் பெரியவரை சாப்பிடலாம்.

வாவில்ஸையும் இதே போல் டோஸ்டரில் இருந்து எடுத்ததும், அதில் சீஸ்ஸ்லைசயும் ஸ்க்ராம்பில்ட் எக்கையும் வைத்து சாப்பிட குடுக்கலாம்.

இரடுமே ப்ரேக்பாஸ்டாக சாப்பிடலாம்.

நல்ல ஹெலொதி ப்ரேக்பாஸ்ட்.

என் கனவருக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த ப்ரேக்பாஸ்ட்.எங்கள் வீட்டில் வெக்கேசனுக்க்கு என் குழந்தைகளின் ப்ரென்ட்ஸ் வந்தபோது இதை குடுத்தோம் எல்லோருக்கும் ரொம்ப விரும்பி மேலும் கேட்டு சாப்பிடாங்க நானும் விரும்பி சாப்பிட்டேன்,நிங்களும் அவசியம் அடுத்த முறை இதே போல் செய்து சாபிட்டு சொல்லுங்க.












Wednesday, May 4, 2011

சீஸ் நாச்சோஸ் (Cheese Nachoes)











தேவையானவை


நாச்சோஸ் - பௌள் ஷேப்பில் உள்ளது
ஆலோப்பினோ பெப்பர் - 1 வட்டமாக அரிந்தது
ஷெட்டர் சீஸ் - துருவல் 1 கப்
வெங்காயம் - பொடியாக அரிந்தது
தக்காளி - 1 பொடியாக அரிந்தது
வெங்காய தாள் - பொடியாக அரிந்தது 1 தே.க

செய்முறை

ஒரு பெரிய பௌலில் முதலில் நாச்சோஸை வரிசையாக வைக்கவும்.
அதன் மேல் பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, ஒலீவ்ஸ், ஆலோப்பினோ பெப்பர் வைத்து மேலே வெங்காய தாள் போட்டு அதன் மேல கொஞ்சம் ஷெட்டர் சீஸை மைக்ரோவேவ் பௌலில் 10 செகன்ஸ் வைத்து உருக்கி அதை இதன் மேல் விட்டு மீண்டும் மேலே ஷெட்டர் சீஸ்ஸையும் தூவி பரிமாறாவும். ஒரே நொடியில் எல்லாமே காலி.

குழந்தைகளுக்கு ஆலோப்பினோ இல்லாமல் கொடுக்கவும். அதில் காரம் நிறய்ய இருக்கிறது.

திடிர் விருந்தாளிகள் வந்தால் பத்தே நிமிடத்தில் செய்து அசத்திடலாம்.
நல்ல மசாலா டியோடு இதுவும் சாப்பிட நல்ல ஹெல்தி ஸ்னாக்.

கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் சீஸை தவித்து சாப்பிடலாம்.

Friday, April 29, 2011

சமோசா பேல்பொரி(Samosa Bhel)













தேவையானவை
சமோசா 4 ரெடிமேட் சமோசா அல்லது ப்ரெஷ்
பொரி 1 கப்
சேவ்(ஒமபொடி) 1/2 கப்
வெங்காயம் பொடியாக அரிந்தது 1/2 கப்
தக்காளி பொடியாக அரிந்தது 1
உருளை கிழங்கு 1 வேகவைத்தது
கொத்தமல்லி இலை கொஞ்சம்
லெமன் ஜூஸ் 1/2 தே.க
இனிப்பு சட்னி
புதினா சட்னி
உப்பு தேவைகேற்ப்ப

செய்முறை

சமோசாவை சின்னதாக் கையால் நொருக்கி அல்லது பிய்த்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, வேகவைத்த உருளைகிழங்கு எல்லாவற்றையும் ஒரு பௌளில் போடவும்.
சாப்பிடுவதற்க்கு முன் சேவ்வும், பொரியும் சேர்த்து மேலே லெமன் ஜுஸ்,உப்பு இனிப்பு சட்னி, புதினா சட்னி விட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
காரம் வேண்டுவர்களுக்கு கொஞ்சம் சாட் மசாலா தூவி சாப்பிடவும்.
எளிதில் செய்ய கூடியது.

Saturday, August 14, 2010

சுதந்திர தின ஊத்தப்பம்







எல்லா இந்திய குடிமக்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.




ஊத்தப்ப மாவில் கேரட்,பச்சை காப்ஸிகம்.சின்ன வெங்காயம்,பச்சைமிளகாய்,கொத்தமல்லி எல்லாம் பொடியாக அரிந்து ஊத்தப்பம் மாவை தோசைகல்லைல் சின்ன வட்டமாக விட்டு அதன் மேல் காய்களை போட்டு சுட்டெடுக்கவும்.


இதற்க்கு தொட்டுகொள்ள வெங்காய சட்னி,குருமா, சாம்பார். போன்றவை நன்றாக இருக்கும்.





Wednesday, July 28, 2010

காராவடை (Karaa Vadai)



தேவையானவை

புழுங்கல் அரிசி - 1 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
துவ்ரம் பருப்பு - 1/4 கப்
வற்றல் மிளகாய் - 2
பெருங்காயதுள் - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - பொரிப்பதற்க்கு


செய்முறை
அரிசி,பருப்பு எல்லாம் தனிதனியே 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
பருப்புகள் எல்லாம் தனிதனியே ஊறவைத்து நல்ல கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

அரிசி வற்றல் மிளகாயையும் சேர்த்து ஊறவைத்து நல்ல கெட்டியாக அரைத்தெடுக்கவும்.
கடாயில் தேவையான அளாவு எண்ணெய் விட்டு காயவிடவும்.
காய்ந்த்ததும் மிதமான தீயில் அரைத்தெடுத்துள்ள மாவில் உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து நல்ல நெல்லிகாய அளவு மாவு எடுத்து நன்றாக உருட்டி காய்ந்துள்ள எண்ணெயில்
போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும்.
இதை அப்படியே சாப்பிடலாம், வேண்டுமென்றால் தேங்காய் சட்ணியோடு சாப்பிடலாம்.
நல்ல ஹெல்தியான ப்ரோட்டின் நிறைந்த சத்துள்ள ஸ்னாக்.

Saturday, April 3, 2010

கமன் டோக்ளா





தேவையானவை

பச்சரிசி - 1
உளுந்து - ½ கப்
தயிர் - ½ கப்
பச்சை மிளகாய் – 2
பேக்கிங் சோட - ½ தே.க
உப்பு - தேவைகேற்ப்ப

தாளிக்க

எண்ணெய் - 1 தே.க
சீரகம் - ½ தே.க
கொத்தமல்லி இலை – கொஞ்சம்

செய்முறை

அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி
1 மணிநேரம் ஊறவிட்டு நல்ல தண்ணிரி இல்லாமல்
வடிகட்டி ரவை பதத்தில் பொடிக்கவும்.

மாவை தயிர்+தண்னிர்+உப்பு சேர்த்து நன்றாக கலந்து
3 மணிநேரம் புளிக்க விடவும்.

சோடா,அரிந்த பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து
குக்கர் பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து அதில் விட்டு
பத்து நிமிடம் ஆவியில் வைக்கவும்.

வெளியில் எடுத்து மேல் தாளித்து கொத்தமல்லி இலை தூவி
துண்டுகளாக வெட்டி சட்னியோட பரிமாறவும்.

இதில் விரும்பினால் காய்கறிகள்,தேங்காய் துருவல் பொடியாக அரிந்து போட்டு செய்யலாம்.


குறிப்பு: அவசரத்திற்க்கு இட்லி ரவையிலும் செய்யலாம்.
பாஸ்மதி அரிசி, புழுங்கல் அரிசியிலும் செய்யலாம்.
கடலை மாவு, ஒட்ஸ்,கேழ்வரகு மாவு, வெள்ளை ரவை போன்றவற்றிலும்
செய்யலாம்,

Monday, March 22, 2010

கீரை வடை




தேவையானவை

உளுத்தம்பருப்பு - 1 கப்
கீரை - ½ கப் அரிந்தது
பச்சைமிளகாய் - 1
இஞ்ஞி - ¼ தே.க
உப்பு - தேவைகேற்ப்ப


செய்முறை

உளுந்தை 2 மணிநேரம் தண்ணிரில் ஊறவைக்கவும்.
தண்ணிர் வடியவிட்டு உப்பு சேர்த்து நல்ல அரைக்கவும்.
தண்ணிர் வேண்டுமானல் கொஞ்சமாக தெளித்து அரைக்கவும்.
கிரையை பொடியாக அரிந்து வைக்கவும்.
பச்சைமிளகாயை பொடியாக அரியவும்.
இஞ்ஞியை துருவியில் துருவி கொள்ளவும்.
அரைத்த மாவில் கீரை,பச்சைமிளகாய்,இஞ்ஞி
சேர்த்து கலந்து சின்ன வடைகளாக தட்டி
எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இது நல்ல ஹெல்தியான கீரை வடை

Saturday, February 20, 2010

பாவ் பாஜி மசாலா







தேவையானவை



உருளை கிழங்கு - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
பட்டாணி(க்ரின் பீஸ் - 1/4 கப்
கேரட் - 2
க்ஃலிப்ளவர் - 1/2 கப்(நறுக்கியது)
இஞ்ஞி & பூண்டு பேஸ்ட் - 1/2 தே.க
கொத்தமல்லி இலை - 1/2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
பாவ் ப்ரட் - 4
பட்டர் - 1 துண்டு
லெமன் - வெட்டிய துண்டுகள்
வெங்காயம்


செய்முறை


உருளை கிழங்கு,கஃலிப்ளவர்,கேரட்,பீஸ், எல்லாவற்றையும் துண்டுகாளாக்கி உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து வேகவைக்கவும்.
கடாயில் நெய்+எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்ஞி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கிய பின் பாவ் பாஜி
மசாலா சேர்த்து வேக வைத்துள்ள காயயையும் சேர்த்து நன்றாக கலக்கி கொஞ்சம் தண்ணிர் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைக்கவும்.
நனறாக மாஷரால் மாஷ் செய்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
தவாவில் கொஞ்சம் பட்டர் போட்டு அதில் பாவ துண்டுகளை தேய்த்து பாவ் லைட்டா ப்ரவுனாக மாறும் போது எடுத்து லெமன் துண்டுகள்+ பாஜியோட பரிமாறவும்.




Wednesday, January 13, 2010

வெண் பொங்கல்




தேவையானவை

பச்சரிசி - 1 கப்
பச்சபருப்பு - 1/2 கப்
தண்ணிர் - 3 கப்
பால் - 1/4 கப்
மிளகு - 1/4 தே.க
சீரகம் - 1/4 கப்
நெய் - 1/4 கப்
இஞ்ஞி - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப


செய்முறை

பருப்பை மிதமான தீயில் வறுக்கவும்.
அரிசி,பருப்பு,தண்னிர்,பால் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
நெய்யில் இஞ்ஞி,மிளகு சீரகம், (முழுதாகவும்) போடலாம்.
ஒன்றிரண்டாக உடைத்து போட்டால் நல்ல
வாசனையோட இருக்கும்.
விரும்பினால் முந்திரியையும் சேர்க்கலாம்.
நல்ல மிளகு சீரக வாசனையோட வெண் பொங்கல் ரெடி.
இதற்க்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்ணி, கொத்ஸ்,சாம்பார் நன்றாக இருக்கும்.






Tuesday, January 5, 2010

வெங்காய பக்கோடா



தேவையானவை

வெங்காயம் நீளமாக அரிந்தது - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
அரிசிமாவு - 1 தே.க
மிளகாய் தூள் - 1 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
உப்பு - தேவைகேற்ப்ப
எண்னெய் - பொரிக்க

செய்முறை

கடலைமாவு,அரிசிமாவு, உப்பு,மிளகாய்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை எல்லாவற்றையும் நன்றாக் கொஞ்சம் கொஞ்சமாக தண்னிர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
மாவு கிள்ளி போடும் பதத்தில் இருக்கவேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும்.
இதற்க்கு கெட்சப் அல்லது தேங்காய் சட்னியோட சாப்பிட நன்றாக இருக்கும்.

Wednesday, December 30, 2009

உருளை போண்டா

உருளை கிழங்கு போண்டா





தேவையானவை


ஸ்டப் செய்வதற்க்கு
--------------------------

உருளை கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்ஞி - 1/2 தே.க
மஞ்சள் தூள் - 1/4 தே.க
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
உப்பு - தேவைகேற்ப்ப

போண்டா மாவு தயாரிக்க
------------------------------
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 தே.க
மிளகாய் தூள் - 1/2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப

பொரிக்க
----------------
எண்னெய் - 2 கப்


செய்முறை
----------------

உருளைகிழங்கை வேகவைத்து மசிக்கவும்.
பொடியாக அரிந்த பச்சைமிளகாய்+இஞ்ஞி,கொத்தமல்லி இலை
மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக பிசைந்து
சின்ன உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

கடலை மாவில்,மிளகாய் தூள், உப்பு, போட்டு தோசை
மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக
எடுத்து மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு
பொன்னிறாமாக பொரித்தெடுக்கவும்.

இதற்க்கு தொட்டுகொள்ள சட்ணி அல்லது சாஸ்ஸுடன்
சாப்பிட நன்றாக இருக்கும்.

Thursday, November 19, 2009

தேன்குழல் முறுக்கு


















தேவையானவை
---------------------

அரிசிமாவு - 1கப்
உளுத்தம் மாவு - 1/2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
சீரகம் - 1/2 தே.க
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

அரிசிமாவு, உளுத்தம்மாவு சீரகம்,உப்பு எல்லாவற்றையும்
சூடாகியிருக்கும் எண்னெயில் இருந்து 1 தே.க விட்டு
கலந்து கொஞ்சம் தண்ணிர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
மாவு ரொம்ப கெட்டியாகவும், தளர்வாகவும் இல்லாமல்
இருக்கனும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் மாவை தேன்குழல்
முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து பொன்நிறமாக பொரித்து
எடுக்கவும்.

இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் 1 வாரம்
வரை கெடாமல் இருக்கும்.

மனகொம்பு

















தேவையானவை


பச்சரிசி மாவு - 1 கப்
பச்சபருப்பு மாவு - 1/2கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
உப்பு - தேவைகேற்ப்ப
வெண்னெய் - 1/4 தே.க

செய்முறை

பச்சபருப்பை வெறும் கடாயில் நல்ல
வாசனை போக வறுத்து பொடிக்கவும்.
பொட்டுக்க்டலையை பொடிக்கவும்.
பச்சரிசி மாவு+பொட்டுக்க்டலை பருப்பு மாவு+பச்சப்ருப்பு மாவு,வெண்ணெய்,உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கொஞ்சம் தண்ணிர் தெளித்து கையில் பிசைவது போல்
வரும்போது எடுத்து மனகொம்பு முறுக்கு அச்சில் போட்டு எண்ணெய் சூடானதும் பிழிந்து பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.
இதை காற்று புகாத டப்ப்பாவில் போட்டு வைத்தால் நல்ல மொறுவென்று இருக்கும்.

இதில் நிறய்ய ப்ரோட்டின்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்னாக்.

கடலை பருப்பு சுண்டல்

Tuesday, November 17, 2009

உளுந்து வடை



உளுந்து வடை
--------------

உளுந்து - 1கப்
உப்பு - தேவைகேற்ப்ப
எண்னெய் - பொறிக்க
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை

உளுந்தை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
நல்ல தண்னிரை வடித்து ப்ளண்டரில் அல்லது
க்ரைண்டரில் தண்ன்ரிர் கொஞ்சமாக தெளித்து உப்பும்
சேர்த்து நல்ல கெட்டியாக அரைக்கவும்.
உடனே செய்வதாயிருந்தால் 1 தே.க அரிசிமாவு சேர்த்து
செய்தால் நல்ல மொறு மொறு வடையாக சாப்பிடலாம்.
ப்ரிட்ஜில் வைத்து செய்தால் மாவு நல்ல கெட்டியாக இருக்கும்.
இதில் விரும்பினால் வெங்காயம், பச்சமிளகாய் சேர்த்தும்
செய்யலாம்.

குறிப்பு: மாவு வடையாக தட்ட வராமல் இருந்தால் அதில்
கொஞ்சம் அரிசிமாவு சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்.
இதற்க்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

காலிப்ஃளவர் பராத்தா
















தேவையானவை
----------------

கோதுமை மாவு - 2 கப்
நெய்


ஸ்டப் செய்வதற்க்கு
--------------------------

காஃலிப்ளவர் - துறுவியது 1 கப்
பச்சைமிளகாய் - 1 அரிந்தது
சீரகம் - 1/4 தே.க
கொத்தமல்லி இலை - கொஞ்சம் அரிந்தது
உப்பு - தேவைகேற்ப்ப

செய்முறை
-------------
கோதுமைமாவை நன்றாக தண்னிர் சேர்த்து
பிசைந்து அரைமணி நேரம் வைக்கவும்.

துறுவிய காஃலிப்ளவரை தண்னிர் இல்லாமல் வடித்து வைக்கவும்.

கடாயில் எண்னெய் விட்டு அதில் சீரகம் போட்டு
பொரிந்தது மீதமுள்ள எல்லாவற்றையும் ஸ்டப்
செய்யவேண்டியவற்றை போட்டு வதக்கி எடுக்கவும்.

ஒரு நெல்லிகாயை அளவு மாவை எடுத்து அதை சின்ன
வட்டமாக இட்டு அதில் நடுவில் ஒரு ஸ்பூன் ஸ்டபிங்
கலவையை எடுத்து வைத்து மூடி எல்லா இடமும் ஒரே
போல பரவலாக வரும்படி இட்டு குறைந்த தீயில் அடுப்பை
வைத்து தோசைகல் போட்டு 2 புறமும் திருப்பி போட்டு கொஞ்சம் நெய் விட்டு தடவி அதை எடுத்து வைக்கவும்.

இதற்க்கு தொட்டு கொள்ள தயிர் அல்லது ஊறுகாய் நன்றாக இருக்கும்.