Tuesday, January 26, 2010

அவன் க்ரிஸ்ப்பி கத்தரிக்காய்






































தேவையானவை

கத்தரிக்காய் பெரிது - 1
கார்ன் மாவு - 2 தே.க
அரிசிமாவு - 2 தே.க
மிளகாய் துள் - 1 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப


செய்முறை

கததரிக்காயை நல்ல கழுவி துடைத்து அரை இன்ச் வட்டத்தில் அரியவவும்.
ஒரு தட்டில் உப்பு, கார்ன் மாவு,அரிசிமாவு,மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து நன்றாக் ஒரு ஸ்பூனால் கலக்கவும். (தண்ணிர் சேர்க்க வேண்டாம்) கத்தரிக்காயின் மேல் எண்ணெய் தடவி இந்த தூளில் புரட்டி ஒரு ஒவன் தட்டில்
இடைவெளி விட்டு அடுக்கி வைக்கவும்.

அவனை 400 டிகிரி முற்சூடு செய்யவும்.

இந்த தட்டை ஒவனில் வைத்து 20 நிமிடங்கள் வைக்கவும்.

நல்ல கிரிஸ்பியான கத்தரிக்காய் ரெடி.

இதை சாதத்தோடு சாப்பிட நன்றாக இருக்கும்.

ஒவன் இல்லாதவர்கல் தோசை தாவாவில் போட்டு இருபுறமும் திருப்பி வைத்து மேலே கொஞ்சம் எண்ணெய் விட்டு மொறுகலாக எடுக்கவும்.

Thursday, January 21, 2010

மைக்ரோவேவ் கலாகண்ட்



மைக்ரொவேவ் கலாகண்ட்

ரிக்கோட்டா சீஸ் - 1 டப்பா
பால் பௌடர் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 2 தே.க
பிஸ்தா - 1 தே.க
முந்திரி - 1 தே.க


ஒரு மைக்ரோவேவ் பௌளில் சீஸ்,சர்க்கரை, பால் பௌடர் எல்லாவற்றையும் ஒன்றாக
கலந்து மைக்ரோவேவில் 20 நிமிடங்கள் வைக்கவும்.

மைக்ரோவேவ் பவரை பொறுத்து நிமிடங்களை கூட்டியோ,குறைத்தோ வைக்கவும்.

இது நல்ல ரிச் & டேஸ்டி கலாகண்ட்.

Tuesday, January 19, 2010

கிச்சன் டிப்ஸ்

சேமியா பாயசம் செய்யும் போது மேலும் சுவையை அதிகரிக்க பாதாம், முந்திரி, தேங்காய் இவையில் ஏதாவது ஒன்றை அரைத்து பாயசத்தில் சேர்த்தால் புதுவித டேஸ்டோட நன்றாக இருக்கும்.

தால் பராத்தா

பருப்பு மீதமானல் அதை வைத்து அசத்தலான பராத்த ரெடி.
துவரம் பருப்பு, பாசி பருப்பு மிதமானல் (கெட்டியாக இருக்க வேண்டும்)
அதை சின்ன நெல்லிகாய் அளவு எடுத்து ரொட்டியின்
நடுவில் வைத்து மூடி ப்ராத்தா செய்ய்லாம். சூப்பரான ப்ரோட்டின் நிறந்த பராத்த ரெடி.
அதையே மசாலா தால் பராத்தாகவும் செய்யலாம்.

தோசை மாவு புளிக்கவில்லை என்றால் வெயில் வரும் இடத்தில் வைக்கலாம்.

ஒவனை 300 டிகிரியில் வைத்து 10 நிமிடம் ஆனதும் ஒவனை அனத்துவிட்டு அதில் வைக்கலாம்.

நல்ல சூடு தண்ணிர் உள்ள பாத்திரத்தில் இறக்கி வைக்கலாம்.

மைக்ரோவேவில் உள் வைத்திருந்தால் புளிக்கும் (ஆன் செய்ய வேண்டாம்)

சமைய்ல் அறையில் சமைத்து முடிந்ததும் எப்போதும் ஒரு வாசனை மெழுகு வத்தி ஏற்றி வைத்தால் சமையல் வாசனை ஒடோடி போயிடும்.

டபுள் கா மீட்டா(மைக்ரோவேவ் முறை)












தேவையானவை

ப்ரெட் ஸ்லைஸ் 2
கண்டென்ஸ்ட் மில்க் - 1
பட்டர் - 1 துண்டு
முந்திரி பருப்பு - 4
பாதாம் - 4
செர்ரி பழம் - 4


செய்முறை
ப்ரெட் ஸ்லைஸ்களை ஒரங்கள் வெட்டி அதன் மீது பட்ட்ர் தடவி வைக்கவும்.
ஒரு மைக்ரோவேவ் தட்டில் பட்டர் தடவி அதில் ப்ரெட் ஸ்லைஸகளை நானகை அடுக்கவும்

அதன் மேல் சிற்து பட்டர்,கண்டென்ஸ்ட் மில்க் விட்டு முந்திரிபருப்பு, சின்னதாக அரிந்த செர்ரி துண்டுகள் போடவும்.

மீதமுள்ள 4 ப்ரெட் ஸ்லைஸ்களை அடுக்கி வைத்து மீதமுள்ள கண்டென்ஸ்ட் மில்க்,முந்திரி, செர்ரி துண்டுகள் வைத்து மைக்ரோவேவில் 5 நிமிடங்கள் வைக்கவும்.
இதை அவரவர் விருப்பதிற்கேப்ப சூடாகவோ, குளிர்ச்சியாகவோ வைத்து பரிமாறலாம்.

மைக்ரோவேவின் பவரை பொறுத்து நிமிடங்களை கூட்டியோ குறைத்தோ வைக்கவும்.
.

Sunday, January 17, 2010

பஹாரா பைங்கன்









தேவையானவை
---------------

கத்தரிக்காய் - 5
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - சின்ன நெல்லிகாய அளவு
எண்ணெய் - 2 தே.க
தேங்காய் - 1 தே.க
எள் வெள்ளை - 1 தே.க
வேர்கடலை - 1 தே.க
இஞ்ஞி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
சீரகம் - 1 தே.க
தனியா தூள் - 1 தே.க
மிளகாய் தூள் - 1 தே.க
மஞ்சள் தூள் - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப

செய்முறை
-----------

மசாலாவிற்க்கு:
வேர்க்கடலை, எள் இரண்டையும் நல்ல பொன் நிறத்தில்
ரோஸ்ட் செய்து தேங்காயோடு நல்ல பேஸ்டாக அரைக்கவும்.
இஞ்ஞி பூண்டு அரைக்கவும்..
புளியை நல்ல கெட்டியாக கரைத்துகொள்ளாவும்.
கத்தரிக்காயை நல்ல கழுவி டிஷ்யூ பேப்பர் வைத்து துடைக்கவும்.
எண்ணெய் வைத்து அதில் பொரிக்கவும்.
அதே எண்ணெயில் வெங்காயம்,தக்காளி,இஞ்ஞி,பூண்டு பேஸ்டையும்
சேர்த்து ஐந்து நிமிடம் வரை வதக்கவும்.

மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தணியா தூள்,,உப்பு சேர்த்து வதக்கவும்.
பொரித்துள்ள கத்தரிக்காய,புளி தண்னிர் சேர்த்து
மூடி போட்டு பத்து நிமிடம் வேகவைக்கவும்.
கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
இந்த கத்தரிக்காய் கறி சாததிற்க்கும், ரொட்டி, பரோட்டாவிற்க்கும் ஏற்ற சைட் டிஷ்.

Wednesday, January 13, 2010

வெண் பொங்கல்




தேவையானவை

பச்சரிசி - 1 கப்
பச்சபருப்பு - 1/2 கப்
தண்ணிர் - 3 கப்
பால் - 1/4 கப்
மிளகு - 1/4 தே.க
சீரகம் - 1/4 கப்
நெய் - 1/4 கப்
இஞ்ஞி - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப


செய்முறை

பருப்பை மிதமான தீயில் வறுக்கவும்.
அரிசி,பருப்பு,தண்னிர்,பால் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
நெய்யில் இஞ்ஞி,மிளகு சீரகம், (முழுதாகவும்) போடலாம்.
ஒன்றிரண்டாக உடைத்து போட்டால் நல்ல
வாசனையோட இருக்கும்.
விரும்பினால் முந்திரியையும் சேர்க்கலாம்.
நல்ல மிளகு சீரக வாசனையோட வெண் பொங்கல் ரெடி.
இதற்க்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்ணி, கொத்ஸ்,சாம்பார் நன்றாக இருக்கும்.






சர்க்கரை பொங்கல்

எல்லா தோழர் தோழியருக்கும் தளவருகைதரும் எல்லோருக்கும்
என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
எல்லோரும் எங்க வீட்டுக்கு பொங்கல் சாப்பிட வாங்க.




தேவையானவை

பச்சரிசி - 1 கப்

பாசி பருப்பு - 1/2 கப்

வெல்லம் - 1/2 கப்

பால் - 1/4 கப்

நெய் - 1/4 தே.க

ஏலத்துள் - 1/2 தே.க

முந்திரி - 5


செய்முறை


பானை அல்லது ப்ரஷர் குக்கரில் தண்ணிர்+பால் சேர்த்து பொங்கி வரும்போது, அரிசி,பாசி பருப்பு சேர்த்து வேகவைக்கவும்

குக்கரில் செய்வதாயிருந்தால் 3 விசில் விடவும்.

முந்திரியை நெய்யில் வறுக்கவும்.

வெந்த பொங்கலில் ஏலதூள்+வறுத்த முந்திரி

மேலும் கொஞ்சம் நெய் விட்டு நல்ல கிளறி விடவும்.

நல்ல நெய் மணத்தோடு கமகம சர்க்கரை பொங்கல் ரெடி.


Tuesday, January 12, 2010

கத்தரிக்காய் புளிப்பு கூட்டு






தேவையானவை

பச்ச கத்தரிக்காய் - 5
துவரம் பருப்பு - ½ கப்
புளி - நெல்லிகாய் அளவு
சம்பார் பொடி - 1 தே.க
மஞ்சள் தூள் - ½ தே.க
உப்பு - தேவைகேற்ப்ப

மசாலா பொடிக்க
------------------------
எண்ணெய் - 1 தே.க
தனியா - 1 தே.க
உளுத்தம் பருப்பு - 1 தே.க
வற்றல் மிளகாய் - 5
தேங்காய் துருவல் - 2 தே.க
தாளிக்க
------------
எண்னெய் - 1 தே.க
கடுகு - ½ தே.க
வெந்தயம் - ½ தே.க
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயத்தூள் - ½ தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை
கத்தரிக்காயை நல்ல சின்ன துண்டுகளாக்க நறுக்கவும்.
பொடிக்கயுள்ளதை எண்ணெய் விட்டு நன்கு சிவக்க வறுத்து பொடிக்கவும்.
பருப்பை வேகவத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி சேர்த்தும் செய்யலாம்.
துவரம் பருப்புக்கு பதில் கடலைபருப்பு சேர்க்கலாம்.
மொச்சை,கடலை,பயறுவகைகள் சேர்த்தும் செய்யலாம்.
பாத்திரத்தில் தண்னிர், கத்தரிக்காய், புளிகரைசல்,
மஞ்சள் தூள்,உப்பு,சாம்பார் பொடி சேர்த்து பத்து நிமிடம்
நன்கு கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் அதில் பொடித்துள்ள பொடி,வேக வைத்துள்ள பருப்பையும் சேர்த்து மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
நல்ல வெந்ததும் தாளிக்கயுள்ளதை தாளித்து இறக்கவும்.
இதே போல் பூசனி,வாழைக்காய்,சௌ சௌ,சேனகிழங்கு
போன்ற காய்களிலும் செய்யலாம்.

Monday, January 11, 2010

சாக்லேட் பர்ப்பி














சாக்லேட் பர்ப்பி


தேவையானவை

கோக்கோ பௌடர் - 1 தே.க
கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின்
சர்க்கரை - 1 தே.க
முந்திரி பருப்பு - 5 ( பச்சையாக உடைத்தது)
பட்டர் - 1 தே.க ( 1/2 துண்டு)

செய்முறை

எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து நான் ஸ்டிக் அல்லது அடிகனமான பாத்திரத்தில் வைத்துஅடுப்பை குறைந்த்த தீயில் வைத்து கிளறவும்.
கெட்டியாக ஆரம்பித்ததும் மீண்டும் உடைத்துள்ள முந்திரியை போட்டு கலந்து பத்து நிமிடம் கிளறி விட்டு இறக்கவும்.
ஒரு ட்ரேயில் கொஞ்சம் பட்டர் அல்லது நெய் தடவி அதில் இந்த கலவயை கொட்டி விரும்பிய வடிவில் வெட்டவும்.
சுவையான கோக்கோ பர்ப்பி ரெடி.
செய்வது சுலபம்.

Friday, January 8, 2010

வெஜ் கேசடீயா






வெஜ் கேசடீயா Veg quesadilla

தேவையானவை


டோர்டியா - 2
வெங்காயம் - 1
சீஸ் துறுவியது - 1/2 கப்
காயகறி கலவை
ப்ரோக்கலி,காரட்,
கேபேஜ்,காப்ஸிகம் - 1/2 கப்
உப்பு - தேவைகேற்ப்ப
கறுப்பு பீன்ஸ் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1/4 தே.க


போர்சன் அல்லது டின் பின்ஸ் ரெடியாக கிடைக்கும்.
பின்ஸ் முதல் நாள் இரவே ஊறவைத்து வேகவைக்கவும்.

பானில் எண்னெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் பீன்ஸ், காய்கறி கலவை,உப்பு சேர்த்து வதக்கவும்.
தவாவில் டோர்டியாவை போட்டு மிதமான தீயில் இரு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
டோர்டியாவின் அரைபாகத்தில் காய்கறி கலவை, துறுவிய
சீஸ் கலவை வைத்து மறு பாதியால் மூடவும்.
அதன் மேல் கொஞ்சம் பட்டர் அல்லது எண்ணெய் தடவி
மீண்டும் தவாவில் மூடிய டோர்டியாவை போட்டு உள்ளே
இருக்கும் சீஸ் உருகும் வரை வைத்து எடுக்கவும்.
இதை விரும்பிய வடிவில் வெட்டி சாப்பிடலாம்.
நல்ல சத்தான ருசியான வெஜ் கேசடியா தயார்.
குழந்தைகளுக்கு சீஸ் கேசடியா ஸ்குல் லன்ஞ் குடுத்தனுப்பலாம்.
எல்லாரும் விரும்பி உண்ணகூடியது.

Tuesday, January 5, 2010

வெங்காய பக்கோடா



தேவையானவை

வெங்காயம் நீளமாக அரிந்தது - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
அரிசிமாவு - 1 தே.க
மிளகாய் தூள் - 1 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
உப்பு - தேவைகேற்ப்ப
எண்னெய் - பொரிக்க

செய்முறை

கடலைமாவு,அரிசிமாவு, உப்பு,மிளகாய்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை எல்லாவற்றையும் நன்றாக் கொஞ்சம் கொஞ்சமாக தண்னிர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
மாவு கிள்ளி போடும் பதத்தில் இருக்கவேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும்.
இதற்க்கு கெட்சப் அல்லது தேங்காய் சட்னியோட சாப்பிட நன்றாக இருக்கும்.

Saturday, January 2, 2010

கேரட் அல்வா




தேவையானவை

கேரட் துருவல் 1 கப்
மில்க் பௌடர் 1 தே.க
சீனி 1 கப்
நெய் 1/4 கப்
பால் 1 தே.க
ஏலதூள் 1/2 தே.க
முந்திரி 5
கிஸ்மிஸ் 5


செய்முறை
----------

பானில் அல்லது கடாயில் கொஞ்சம் நெய்விட்டு முந்திரியை வறுத்து கொள்ளவும்.
கேரட்ட துருவல்+ பால் விட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அரைக்காமலும் செய்யலாம்

பானில் நெய் விட்டு அரைத்த விழுது சீனி, பால் பௌடர் எல்லாவற்றையும்
சேர்த்து நன்றாக கிளறிவிட்டு பத்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேகவிடவும்.
மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டு கிளறிவிட்டு கொண்டே இருக்கவும்.
பானில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும்.

மேலே வறுத்த முந்திரி,ஏலத்துள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.