Saturday, March 24, 2012

பிறந்தநாள் இனிப்பு பைனாப்பிள் வீப்
































இன்று என் பிறந்தநாளுக்கு நான் செய்த இனிப்பு, இன்று வெளியில் லன்ஞ்க்கு ஓலிவ் கார்டன்+கோவில் போய் வந்து மீதியை அடுத்தபதிவில் சந்திக்கிறேன். எல்லாரும் வந்து இனிப்பை பார்த்து நிங்களும் செய்விங்க என்று நம்புகிறேன்.நேரில் வருகிறவர்களுக்கு நிறையவும், வராதவர்களுக்கு அவசியம் பார்சல் உண்டு. எல்லாரும் ஹேப்பி தானே.வாங்கோ வாங்கோ.




தேவையானவை

பைனாப்பிள் துண்டுகள் - 1கப்
கூல் வீப் - 1
மில்க்மெய்ட் - 1 டின்
பாதாம், அக்ரூட் - 1 தே.க

செய்முறை

ஒரு பெரியா கேஸ்ரோல் அல்லது நல்ல ப்ரிஜரில் வைக்ககூடிய சேப் பௌல் அதில் கூல் வீப்+பைனாப்பிள் துண்டுகள் (மிக மிக பொடியாக அரிந்தது, முடிந்தால் மிக்ஸியில் போட்டு ஒரு சாப் செய்தது)மில்க் மெய்ட் எல்லாவற்றையும் போட்டு நன்றாக போர்க்கால் கிளறிவிட்டு அதன் மேல் உலர் பருப்புகள் போட்டு அலங்கரித்து ப்ரிஜரில் 3 மணி நேரம் வைத்து பரிமாறுவதற்க்கு முன் ப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து சாப்பிடவும். விநாடிகளில் காலியாகிவிடும்.

எளிதில் அடுப்பே இல்லாமல் செய்து அசத்திவிடகூடிய இனிப்பு.






Thursday, March 22, 2012

யூகாதி பண்டிகை





















































































தெலுங்கு வருட பிறப்பு-யூகாதி

தேங்காய போளி

தேவையானவை

மைதாமாவு 1 கப்
தேங்காய் துறுவியது 1 கப்
வெல்லம் பொடித்தது 1 கப்
உப்பு 1/2 தே.க
ஏலத்தூள் 1 தே.க
தண்ணிர் கொஞ்சம்
எண்ணெய் 2 தே.க
நெய் 1 தே.க
வாக்ஸ் பேப்பர் 2 சிறிய துண்டுகள்

செய்முறை

மைதாமாவை உப்பு, கொஞ்சம் தண்ணிர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்
நன்றாக பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

பூரணத்திற்க்கு ஒரு அடிகனமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணிர் விட்டு குறைந்ததீயில்
வைக்கவும். தண்ணிர் கொதிக்க ஆரம்பித்ததும். அதில் வெல்லத்தை போட்டு நன்றாக கிளறி விடவும்.
நன்றாக கொதிக்கும் போது துறுவிய தேங்காயும் சேர்த்து கிளறி விடவும். பாத்திரத்தில் ஒரங்களில் ஒட்டாமல் நல்ல திக்காக வரும் போது ஏலத்தூள்,நெய், விரும்பினால் 1/2 தே.க ரவையும் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.

கை பொறுக்கும் சூடு இருக்கும்போது சின்ன உருண்டைகளாக்கி வைக்கவும்,
மேல் மாவிற்க்கு மைதாமாவில் இருந்து சிறு உருண்டைகளாக எடுத்து கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிவிட்டு ஒரு பேப்பரில் வைத்து கையால சின்ன சப்பாத்தி போல் பரத்தவும். அதில் பூரண உருண்டையை வைத்து நன்றாக எல்லாபக்கமும் மூடி விடவும்.
அதை முதலில் ஒரு வேக்ஸ் பேப்பரில் வைக்கவும், அதன் மேல் அடுத்த வேக்ஸ் பேப்பர் வைத்து சப்பாத்தி குழவியால் நன்றாக பரத்தவும்.

இப்போது தவாவில் குறைந்த தீயில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்நிறமாக வெந்து எடுக்கவும்.
நல்ல டேஸ்டியான தேங்காய் போளி ரெடி.


எல்லா தெலுகு மக்களுக்கும் இனிய யூகாதி வாழ்த்துக்கள்.













Friday, March 16, 2012

கீரை மிளகூட்டல் (கேரளா)
















கீரை மிளகூட்டல்

தேவையானவை

கீரை - 1கட்டு

அரைக்க
-------


தேங்காய் துறுவல் - 2 தே.க
மிளகாய் வற்றல் - 1
மிளகு - 1/2 தே.க
சீரகம் - 1/2 தே.க
உளுந்து - 1/2 தே.க


தாளிக்க

தே.எண்ணெய்அல்லது(எந்த) - 1/2 தே.க
உளுந்தம் பருப்பு - 1/4 தே.க
கடுகு - 1/ 4தே.க
பெருங்காயதூள் - 14 தே.க
கறிவேப்பிலை - கொஞசம்

செய்முறை


கீரையை மண்போக நன்றாக அலசி பொடியாக அரியவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து, மிளகு,மிளாகாய் போட்டு வறுத்து எடுக்கவும்.சூடு ஆறியது தேங்காய துருவல் சேர்த்து நல்ல அரைக்கவும்.


கீரை கொஞ்சமாக உப்பு சேர்த்து தண்ணிர் விட்டு முடாமல் வேக வைக்கவும், வெந்ததும் அதில் அரைத்துள்ள விழுதை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் மூடி போடாமல் வேகவைக்கவும்.
தாளிக்கயுள்ளதை தாளித்து அதில் சேர்க்கவும்.

டிப்ஸ்: கீரை பார்க்க பச்சையாக வேண்டுமென்றால் மூடாமல் குறைந்த தீயில் வைக்கவும்,
வற்றல் குழம்பு, சுட்ட அப்பளம், கீரை காம்பினேஷனோட சூடா சாதம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

கீரை சாப்பிட விரும்பாதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.







Wednesday, March 7, 2012

3 இன் 1 ப்ரேக்பாஸ்ட் (க்ரஸாண்ட்,வாவில்ஸ்,)
















தேவையானவை

க்ரஸாண்ட் - 2
வாவிள்ஸ் - 2
ஸ்க்ராம்பிள்ட் எக் அல்லது ஆம்லெட்
சீஸ் ஸ்லைஸ் - 1(விரும்பினால்)

செய்முறை

க்ராஸாண்ட் (ரெடிமேடா கையில் கிடைக்கும்) அதை வாங்கவும்.
வாவில்ஸ் (ரெடெமேட்)
முட்டை - 2 அதை ஆம்லெட்டாகவும், அல்லது ஸ்க்ராம்பில்ட்டாகவும் செய்து வைக்கவும்.
டோஸ்டரில் க்ராஸாடையும், வாவில்ஸையும் டோஸ்ட் செய்யவும்.
க்ராஸாண்ட் வாம்மாக இருக்கும் போதே சீஸ் சைலஸையும், ஸ்க்ராம்பில்ட் எக்கையும் அதில்வைத்த்து க்ராஸண்ட் சான்ட்விச்சாகவும் ப்ரேக்பாஸ்டாக குழந்தை முதல் பெரியவரை சாப்பிடலாம்.

வாவில்ஸையும் இதே போல் டோஸ்டரில் இருந்து எடுத்ததும், அதில் சீஸ்ஸ்லைசயும் ஸ்க்ராம்பில்ட் எக்கையும் வைத்து சாப்பிட குடுக்கலாம்.

இரடுமே ப்ரேக்பாஸ்டாக சாப்பிடலாம்.

நல்ல ஹெலொதி ப்ரேக்பாஸ்ட்.

என் கனவருக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த ப்ரேக்பாஸ்ட்.எங்கள் வீட்டில் வெக்கேசனுக்க்கு என் குழந்தைகளின் ப்ரென்ட்ஸ் வந்தபோது இதை குடுத்தோம் எல்லோருக்கும் ரொம்ப விரும்பி மேலும் கேட்டு சாப்பிடாங்க நானும் விரும்பி சாப்பிட்டேன்,நிங்களும் அவசியம் அடுத்த முறை இதே போல் செய்து சாபிட்டு சொல்லுங்க.