வெஜ் பாஸ்தா
தேவையானவை
பாஸ்தா - 1 கப்
காய்கறிகள் - (கேரட்,வெங்காயம்,பட்டாணி,பீன்ஸ்)
ஓலீவ் எண்ணெய் - 1 தே.க
பூண்டு - 1 துண்டு
டொமெட்டோ சாஸ் - 1/4 கப்
சீஸ் - துறுவியது (பார்மஸன்,மொசரல்லா)
பட்டர் - 1 தே.க
பார்ஸ்லி இலை - கொஞ்சம் பொடியாக அரிந்தது
செய்முறை
பாஸ்தாவை 6 கப் தண்னிர் வைத்து நல்ல கொதிக்கவிடவும்.நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு சேர்த்து பாஸ்தாவை போட்டு ஒரு தடவை கிளறி விட்டு வேகவைக்கவும்.
வெங்காயம், பூண்டு, காய்கறிகள் எல்லாம் விரும்பிய வடிவில் வெட்டி வைக்கவும்.(இதில் வெங்காயம்,பூண்டு, பார்ஸ்லி,சேர்த்துள்ளேன்)பதினைந்து நிமிடம் கழிந்து பாஸ்தாவை எடுத்து ண்ணிரை வடியவிடவும்.
கடாயில் ஓலீவ் எண்ணெய் அல்லது வெஜ்டெபிள் எண்ணெய்
விட்டு பட்டரும் சேர்த்து பூண்டை போட்டு வதக்கவும்,
பின் வெங்காயம் வெஜ்டெபிள்ஸ் எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கி உப்பு சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம வதக்கி விட்டு டொமெட்டோ சாஸையும் விட்டு நன்றாக கலந்து பாஸ்தாவையும் போட்டு கலந்து குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வேகவிடவும். சீஸ் போட்டு நன்றாக கலந்து மேலே பார்ஸ்லி இலையும் போட்டு மேலும் கொஞ்சம் சீஸ் போட்டு பரிமாறவும்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்.
7 comments:
Hi Viji ,
Thanks for dropping by in our recp. blog .... following you ...you too have 2 good blogs ...will keep in touch...
naan tamil la type pannen na ...kandippa neenga tamil maranduvenga ...yethukku risk yedukkanum ...vendam ...so typing in english ...
குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் உணவு.அழகாக சமைத்து படம் எடுத்து இருக்கின்றீர்கள்.
அருமையான வெஜ் பாஸ்தா.
Hi Viji, first time here. You have a very nice blog with a good collection of recipes..I loved reading all your posts..will keep in touch :)
miga arumaiyaga ulathu ungal samayal...
விஜி! பாஸ்தா பார்க்க அழகாக இருக்கிறது! சுவையான குறிப்பு!!
அருமையான பாஸ்தா. presentation அழகாக இருக்கிறது.
Post a Comment