தேவையானவை
பச்சரிசி - 1 கப்
துவரம் பருப்ப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 தே.க
பெருங்காயத்தூள் - 1/2 தே.க
புளி - நெல்லிகாய் அளவு
நெய் - 1/2 தே.க
காயக்றிகள்
கேரட், பட்டாணி,பீன்ஸ்,உருளை,செளசெள,கத்தரிக்காய்,
சின்ன வெங்காயம்,தக்காளி, (அரிந்தது 1 கப்)
தாளிக்க
-------------
எண்ணெய் - 1 தே.க
முந்திரி பருப்பு - 4(நெய்யில் வறுத்தது)
வேர்க்கடலை - 1/2 தே.க
கடுகு - 1/2 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்,
மசாலா பௌடர்
-----------------------
கடலை பருப்பு - 1 தே.க
தனியா - 1/2 தே.க
வெந்தயம் - 1/4 தே.க
மிளகாய வற்றல் - 4
பட்டை - 1 துண்டு
க்ராம்பு - 2
தேங்காய் துருவியது - 1 தே.க
கடாயில் நல்ல சிவக்க வறுத்து பொடிக்கவும்.
குக்கரில் அரிசி,பருப்பு, உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நல்ல மசிய வேகவைக்கவும்.
பான் அல்லது கடாயில் எண்னெய் விட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நல்ல வதக்கவும். தக்காளி,காயகறிகள்,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஐந்து தே.க மசாலா பௌடர் சேர்த்து நன்றாக வதக்கி,
புளி கரைசல் 2 கப் தண்னிர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்து கெட்டியானதும் வேகவைத்த அரிசி,பருப்பு
சேர்த்து மேலும் அரை கப் தண்னிர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கெட்டியானதும் மேலே கொஞ்சம் நெய் விட்டு
தாளித்து கொட்டவும்.
மேலே வறுத்த வேர்க்க்டலை, முந்திரி போட்டு கலந்து
பரிமாறவும்.
சிப்ஸ், அப்பளம், வடாம் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
ஹெவி லன்ஞ்.
இந்த சாதம் கர்நாடகவில் ப்ரசித்தமானது.
5 comments:
My fav.சிப்ஸ், அப்பளம், வடாம் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
பிஸிபேளாபாத் எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்கள் முறையிலும் அவசியம் செய்துபார்க்கிறேன் விஜி
காஞ்சனா அக்கா நன்றி. ஆமாம் சிப்ஸ் பெஸ்ட் காம்பினேஷன்.
ஸாதிகா அக்க நன்றி. அவசியம் செய்யுங்க ரொம்ப சிம்பிள்.
//பிஸிபேளாபாத் //
இது எங்கங்க இருக்கு ஆக்ரா பக்கத்திலா ?
பிஸிபேளாபாத் அருமை,விஜி..
Post a Comment