Friday, March 16, 2012
கீரை மிளகூட்டல் (கேரளா)
கீரை மிளகூட்டல்
தேவையானவை
கீரை - 1கட்டு
அரைக்க
-------
தேங்காய் துறுவல் - 2 தே.க
மிளகாய் வற்றல் - 1
மிளகு - 1/2 தே.க
சீரகம் - 1/2 தே.க
உளுந்து - 1/2 தே.க
தாளிக்க
தே.எண்ணெய்அல்லது(எந்த) - 1/2 தே.க
உளுந்தம் பருப்பு - 1/4 தே.க
கடுகு - 1/ 4தே.க
பெருங்காயதூள் - 14 தே.க
கறிவேப்பிலை - கொஞசம்
செய்முறை
கீரையை மண்போக நன்றாக அலசி பொடியாக அரியவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து, மிளகு,மிளாகாய் போட்டு வறுத்து எடுக்கவும்.சூடு ஆறியது தேங்காய துருவல் சேர்த்து நல்ல அரைக்கவும்.
கீரை கொஞ்சமாக உப்பு சேர்த்து தண்ணிர் விட்டு முடாமல் வேக வைக்கவும், வெந்ததும் அதில் அரைத்துள்ள விழுதை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் மூடி போடாமல் வேகவைக்கவும்.
தாளிக்கயுள்ளதை தாளித்து அதில் சேர்க்கவும்.
டிப்ஸ்: கீரை பார்க்க பச்சையாக வேண்டுமென்றால் மூடாமல் குறைந்த தீயில் வைக்கவும்,
வற்றல் குழம்பு, சுட்ட அப்பளம், கீரை காம்பினேஷனோட சூடா சாதம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
கீரை சாப்பிட விரும்பாதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
Yum Kootu. Happy to follow you.
amma makes this kootu often...i love this always
Very Nice. I feel mouth watering on seeing this picture & its process. Thanks for sharing!
விஜி நிச்சயம் உங்க முறைப்படி செய்து பார்ப்பேன்.பார்க்கவே ஆசையாக இருக்கு.
சூப்பரா இருக்கு! நான் வெங்காயமும் சேர்த்து செய்வது வழக்கம். அடுத்த முறை இப்படி செய்துபார்க்கிறேன்.
Keerai Milagu kootu looks so good !!
Keerai Milagu kootu looks so good !!
சூப்பரா இருக்கு.
நல்ல ரெசிப்பி. செய்முறை ஆவலைத் தூண்டுது. இதை எந்தக் கீரைவகையிலும் செய்யலாமா? குறிப்பிட்ட வகைக் கீரைதான் ருசிக்கும் என்று இருக்கிறதா?
anu welcome and thanks.
Aarthi welcome back and thanks agian. Me too I luv this My mom's recipe.
வை.கோ ஸார் வணக்கம். முதல் வருகைக்கு நன்றி. ஆமாம் கீரையை நான் சமைக்கும் போதெ இந்த பச்சை கலரை பார்த்ததும் சூடா இருக்கும் போதே சாப்பிட தூண்டியது.நல்லா சாப்பிட்டேன்.அடிக்கடி வாங்க.நன்றி.
ஆஸியா நன்றி. எப்படி இருக்கிங்க வாங்க.
மகி நன்றி. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க. வெங்காயம் சேர்த்து செய்தால் கொஞ்சம் சுவை மாறும் ஆனால் கண்டிப்பா நல்லா இருக்கும்.
நன்றி. Shabitha Karthikeyan good helathy recipee.
Thanks Pranjali. Sure I will.
கீதமஞ்சரி வருகைக்கு நன்றி. கண்டிப்பா ஆனால் பாலக் என்கிற கீரையில் செய்தால் மிகவும் நன்றாக இருக்க்கும். எங்க அம்மா தண்டு கீரையும், சிறுகீரை, மணத்தக்காளி கீரையிலும் செய்வாங்க. உண்மையிலேயே மணமாக சாப்பிட நன்றாக இருக்கும்.அடிக்கடி வாங்க.
இந்த ரெஸிப்பி எனக்கு மிகவும் பிடிக்கும் விஜி.
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.பகிர்வுக்கு நன்றி.
Post a Comment