தேவையானவை
சமோசா 4 ரெடிமேட் சமோசா அல்லது ப்ரெஷ்
பொரி 1 கப்
சேவ்(ஒமபொடி) 1/2 கப்
வெங்காயம் பொடியாக அரிந்தது 1/2 கப்
தக்காளி பொடியாக அரிந்தது 1
உருளை கிழங்கு 1 வேகவைத்தது
கொத்தமல்லி இலை கொஞ்சம்
லெமன் ஜூஸ் 1/2 தே.க
இனிப்பு சட்னி
புதினா சட்னி
உப்பு தேவைகேற்ப்ப
செய்முறை
சமோசாவை சின்னதாக் கையால் நொருக்கி அல்லது பிய்த்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, வேகவைத்த உருளைகிழங்கு எல்லாவற்றையும் ஒரு பௌளில் போடவும்.
சாப்பிடுவதற்க்கு முன் சேவ்வும், பொரியும் சேர்த்து மேலே லெமன் ஜுஸ்,உப்பு இனிப்பு சட்னி, புதினா சட்னி விட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
காரம் வேண்டுவர்களுக்கு கொஞ்சம் சாட் மசாலா தூவி சாப்பிடவும்.
எளிதில் செய்ய கூடியது.
