Saturday, January 19, 2013
பூசனிக்காய் கூட்டு
வெள்ள பூசனிக்காய் கூட்டு
தேவையானவை
வெள்ளை பூசனிக்காய் 1 கப் (துண்டுகளாக்கியது)
கடலை பருப்பு 2 தே.க
தேங்காய் 4 தே.க (துறுவியது)
சீரகம் 1/2 தே.க
மிளகாய்வற்றல் 1
உப்பு தேவைகேற்ப்ப
மஞ்சள்தூள் 1/2 தே.க
தாளிக்க
எண்ணெய் 1/2 தே.க
கடுகு 1/2 தே.க
உளுத்தம்பருப்பு 1/2 தே.க
பெருங்காயத்தூள் 1/4 தே.க
மிளாகாய்வற்றல் 1
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை
பூசனித்துண்டுகள், கடலைபருப்பு உப்பு சேர்த்து தண்ணிரில் 15 நிமிடம் வேகவைக்கவும்.
தேங்காய்,சீரகம், மிளாகாய்வற்றல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
வெந்த பூசனித்துண்டுகளோடு அரைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் 10 நிமிடம் வேக்வைக்கவும்.
தாளிக்கயுள்ளதை தாளித்து கூட்டில் போட்டு நன்றாக கிளறிவிடவும்.
இந்த கூட்டு கலந்த சாததிற்க்கும், வற்றல்குழம்பு சேர்த்து கலந்த சாததிற்க்கும் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
நல்ல நார்ச்சத்துள்ளா காய் உடம்பிற்க்கு ஏற்றது.
குறிப்பு: விருப்பமான பருப்புகள் சேர்க்கலாம். நான் இதில் சில நேரம் பச்சை வேர்க்கடலை, கொண்டைகடலை, ஊற வைத்த பயறுவகைகள் சேர்ப்பேன். இன்று ப்ரெஸ்பச்சை துவரை பட்டாணி சேர்த்து செய்துள்ளேன்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நல்லா இருக்கு விஜிக்கா! நான் கடலைப்பருப்பு மட்டுமே சேர்த்து பூசணிக்காய் கூட்டு செய்வேன். நீங்க சொல்வது போல பச்சை வேர்க்கடலை சேர்த்து செய்து பார்க்கணும்.
எனக்கு இந்த கூட்டு ரொம்பபிடிக்கும்...சூப்பராக இருக்கின்றது...
வாங்க மகி. ரொம்ப நல்லா இருக்கும். வேர்க்ர்கடலை சேர்த்து செய்து அதை நாங்க ஒரு குஜராத்தி அம்மா வீட்டில் கெட் டு கெதர்க்கு சப்பாத்திக்கு குடுத்தாங்க ரொம்ப டேஸ்டியா இருந்தது. அவங்க எனக்கு ஒரு டிப் சொன்னாங்க. தேங்காய் அரைத்து போடறதற்க்கு பதில் கொஞ்சம் பொட்டுக்க்டலை சோம்பு,பூண்டு சேர்த்து செய்தால் மேலும் சுவை அதிகரிக்கும். நான் செய்ததில்லை. வேர்க்க்டலை சேர்த்து செய்தேன்.
கீதா வாங்க எப்படி இருக்கிங்க. குட்டி பையன் உங்களை பிஸியா வைச்சு இருப்பான் போல.ஆமாம் எனக்கும் ரொம்ப பிடித்த அயிட்டம்.
healthy and delicious kootu :)
thanks Aruna.
Post a Comment