Monday, January 28, 2013

பருப்பு தொவையல்




பருப்பு தொவையல்

தேவையானவை



துவரம் பருப்பு                                   1/4 கப்
மிளகாய் வற்றல்                             2
தேங்காய் துருவல்                         1 தே.க (விரும்பினால்)
பெருங்காயத்தூள்                          1/2 தே.க
உப்பு                                                      தேவைகேற்ப்ப
பூண்டு (விரும்பினால்)                 2 பல்.
நெய் அல்லது எண்ணெய்           1/2 தே.க


செய்முறை

கடாயில் நெய் விட்டு பெருங்காயத்தூள், மிளகாய் வற்றல், பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிதமான தீயில் பொன்நிறாமாக வறுக்கவும்.
சூடு ஆறியதும் மிக்ஸியில் முதலில் பருப்பு வகைகளை போட்டு பொடித்து கொள்ளாவும்.
அடுத்து உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து ரவை பதத்தில் (கொஞ்சம் தண்ணிர் தெளித்து) அரைத்தெடுக்கவும்.
வாய்க்கு ருசியாகவும், ப்ரோட்டின்ஸ் அடங்கியதுமான ஒரு நல்ல தொவையல் ரெடி.
இதற்க்கு மேட்சிங் மிளகு ரசம் அப்பளம் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
மிளகு குழம்பு அல்லது, வற்றல் குழம்பும் நன்றாக இருக்கும்.
எனக்கு 2 வாரமாக காய்ச்சல்,சளி+இருமல். வாய் கசப்பு இருக்கிறதனால் இதை செய்து சாப்பிடனும் போல் இருந்தது.
வாய்க்கு ருசியாக நன்றாக இருந்தது.









6 comments:

இராஜராஜேஸ்வரி said...

எளிதாகச்செய்யும் ருசியான துவையல் .. பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Simple & Superb !

Mahi said...

அருமையான தொகயல்!

Vijiskitchencreations said...

நன்றி. மகி.

நன்றி. வை.கோ. ஸார்
நன்றி. இராஜாராஜேஸ்வர் மேடம்.

Asiya Omar said...

தொவையல் அருமை.எனக்கு இதைப் பார்த்தவுடன் இப்பவே இந்த காம்பினேஷன் சாப்பிட ஆசை வருகிறது..

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

சிம்பிளான துவையைல் இன்றே செய்கிறேன் இடியப்பத்துக்கு. ஆனா நான் இப்படி செய்யும்போது பழப்புளி அல்லது எலுமிச்சை சேர்ப்பதுண்டு.