Saturday, January 12, 2013

நெல்லிக்காய் தொக்கு





 
நெல்லிக்காய தொக்கு

தேவையானவை

நெல்லிக்காய்               5 பெரிது  

மிளகாயத்தூள்             ½ தே.க            

மஞ்சள் தூள்               ¼ தே.க

வெந்தயத்தூள்              ¼ தே.க

நல்லெண்னெய்             ½ தே.க

பெருங்காயத்தூள்           ¼ தே.க

செய்முறை

நெல்லிக்காயை நல்ல தண்ணிரில் கழுவி ஒரு பாத்திரத்தில் உப்பு போட்டு 2 கப் தண்ணிர் விட்டு வேகவிடவும்.

பத்துநிமிடம் கழிந்து நெல்லிக்காயை விரலகளாக் அமுக்கினால் வில்லைகளாக வருவது தான் சரியான பதம்.

தண்னிரை நல்ல வடிகட்டி எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பெருங்காயத்துள், கடுகு,மஞ்சள் தூள், வெந்தயத்தூள்(ட்ரை ரோஸ்ட்) செய்து வைக்கவும் அதையும் இதனுடன் சேர்த்து வேகவைத்துள்ள நெல்லிக்காயை கொட்டைய எடுத்து அதன் துண்டுகளை சேர்த்து (மேலும் வேண்டுமானல் கொஞ்சம் உப்பு )சேர்த்து நன்றாக வதக்கி மேலும் அரை சிட்டிகை எண்ணெய் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போக வதக்கி எடுக்கவும். இதில் எல்லா வகை சாததிற்க்கும் மேட்சிங்க் ஊறுக்காய். ஹெல்தி ஊறுகாய்.         

4 comments:

Radha rani said...

ஊறுகாய் எச்சில் ஊற வைக்குது.. நான் இதை வேக வைத்து மசித்து செய்வேன்..:)

Kanchana Radhakrishnan said...

தொக்கு அருமை.இனிய பொங்கல் வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நெல்லிக்காய் ஊறுகாயை படத்தில் பார்க்கும் போதே நாக்கில் ஜலம் ஊறுகிறது. சூப்பரான் சுவையான பதிவு. பாராட்டுக்கள்.

Venmuyal said...

Romba nallyirukku ... School gyabagam varythae... Thanks