Friday, May 31, 2013
ஒட்ஸ் உப்புமா
தேவையானவை.
ஒட்ஸ்(Old Fashion Oats) 1 கப்
எண்ணெய் 1 தே.க
மிளகாய் வற்றல் 1
பச்சைமிள்காய் 1
வெங்காயம் 1
தக்காளீ 1
பச்சை பட்டாணி 1 தே.க
இஞ்ஞி கொஞ்சம்
தாளிக்க தேவையாவ அளவு
உப்பு
கடுகு
கறிவேப்பிலை
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
செய்முறை
ஒட்ஸை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும். சிவக்க கூடாது.
சூடு ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
வெங்காயம் பொடியாக அரிந்து வைக்கவும்.
தக்காளி பொடியாக அரியவும்
பச்சைமிளகாயை நீட்டமாக வெட்டிவைக்கவும்,
கடாயில் என்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து பின் வெங்காயம், தக்காளி, பச்சை பட்டாணி சேர்த்து வதக்கியதும் அரை கப் தண்ணிர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்ததும் பொடித்துள்ள ஒட்ஸை சேர்த்து நன்றாக கிளறி குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வைக்கவும்.
ஒட்ஸ் சீக்கிரம் வெந்து விடும்.
சுவையான எளிதில் செய்யகூடிய ஒட்ஸ் உப்புமா.
ஹெல்தி+டயட் சிற்றுண்டி.
குறிப்பு: ஒட்ஸ் பிடிக்காதவர்கள் இதில் கொஞ்சம் ரவை(கோதுமை ரவை) சேர்த்தும் செய்யலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
உப்புமா .... அருமை.
சுவையான பதிவு. பாராட்டுக்கள்.
Thanks Vai.Go.sir.
சுவையான எளிதில் செய்யகூடிய ஒட்ஸ் உப்புமா. ஹெல்தி+டயட் சிற்றுண்டி. குறிப்புகளுக்குப் பாராட்டுக்கள்..!
என்னா ஒரு கண்டுபிடிப்பு... நான் ஓட்ஸ் தோசைதான் அடிக்கடி செய்வதுண்டு. இது நல்ல ஐடியாவா இருக்கே, இனி ட்ரை பண்ணுறேன்ன்.
சுவையான ஒட்ஸ் உப்புமா...
செய்முறை குறிப்பிற்கு நன்றி...
நன்றி வை.கோ ஸார்.
நன்றி தனபாலன். ட்ரை பன்னுங்க.
நன்றி இராஜராஜாஸ்வரி மேம்.
வாங்க அதிரா. ஆமாம் இந்த பக்கம் இப்ப தான் உங்களை முதன் முதலில் பார்க்கிறேன். நிங்க என் சமையலுக்கு இப்ப தான் வர்றிங்க. குட். ஆமாம் அதிரா தோசை நானும் செய்வேன். ஒரு தோழி வீட்டில் இது சாப்பிட்டேன் எனக்கு பிடித்து இருந்தது. இப்ப என்னவரும் சாப்பிட்டு இது ஒட்ஸ் சான்ஸே இல்லை நல்ல சுவையா இருக்கு என்று பாராட்டும் கிடைத்துவிட்டது.
அவசியம் ட்ரை செய்யுக்க அதிரா.நன்றி.அடிக்கடி வாங்க.
நல்ல குறிப்பு!
நானும் அடிக்கடி செய்வதுண்டு. ருசியும் அபாரமாயிருக்கும்.
ரவை சேர்த்ததில்லை இதுவரை...
அதையும் சேர்த்து செய்து பார்த்திடுவோம்.
பகிர்விற்கு நன்றி!
Post a Comment