தேவையானவை
----------------
கோதுமை மாவு - 2 கப்
நெய்
ஸ்டப் செய்வதற்க்கு
--------------------------
காஃலிப்ளவர் - துறுவியது 1 கப்
பச்சைமிளகாய் - 1 அரிந்தது
சீரகம் - 1/4 தே.க
கொத்தமல்லி இலை - கொஞ்சம் அரிந்தது
உப்பு - தேவைகேற்ப்ப
செய்முறை
-------------
கோதுமைமாவை நன்றாக தண்னிர் சேர்த்து
பிசைந்து அரைமணி நேரம் வைக்கவும்.
துறுவிய காஃலிப்ளவரை தண்னிர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
கடாயில் எண்னெய் விட்டு அதில் சீரகம் போட்டு
பொரிந்தது மீதமுள்ள எல்லாவற்றையும் ஸ்டப்
செய்யவேண்டியவற்றை போட்டு வதக்கி எடுக்கவும்.
ஒரு நெல்லிகாயை அளவு மாவை எடுத்து அதை சின்ன
வட்டமாக இட்டு அதில் நடுவில் ஒரு ஸ்பூன் ஸ்டபிங்
கலவையை எடுத்து வைத்து மூடி எல்லா இடமும் ஒரே
போல பரவலாக வரும்படி இட்டு குறைந்த தீயில் அடுப்பை
வைத்து தோசைகல் போட்டு 2 புறமும் திருப்பி போட்டு கொஞ்சம் நெய் விட்டு தடவி அதை எடுத்து வைக்கவும்.
இதற்க்கு தொட்டு கொள்ள தயிர் அல்லது ஊறுகாய் நன்றாக இருக்கும்.
2 comments:
டபுள்காமீட்டா,ரசமலாய்,உளுந்துவடை,மசலாசப்பாத்தி,சுண்டல் எல்லாம் திருமண நாள் ஸ்பெஷலா?பேஷ்..பேஷ்..
ஆமாம் அக்கா.
Post a Comment