Tuesday, January 19, 2010

கிச்சன் டிப்ஸ்

சேமியா பாயசம் செய்யும் போது மேலும் சுவையை அதிகரிக்க பாதாம், முந்திரி, தேங்காய் இவையில் ஏதாவது ஒன்றை அரைத்து பாயசத்தில் சேர்த்தால் புதுவித டேஸ்டோட நன்றாக இருக்கும்.

தால் பராத்தா

பருப்பு மீதமானல் அதை வைத்து அசத்தலான பராத்த ரெடி.
துவரம் பருப்பு, பாசி பருப்பு மிதமானல் (கெட்டியாக இருக்க வேண்டும்)
அதை சின்ன நெல்லிகாய் அளவு எடுத்து ரொட்டியின்
நடுவில் வைத்து மூடி ப்ராத்தா செய்ய்லாம். சூப்பரான ப்ரோட்டின் நிறந்த பராத்த ரெடி.
அதையே மசாலா தால் பராத்தாகவும் செய்யலாம்.

தோசை மாவு புளிக்கவில்லை என்றால் வெயில் வரும் இடத்தில் வைக்கலாம்.

ஒவனை 300 டிகிரியில் வைத்து 10 நிமிடம் ஆனதும் ஒவனை அனத்துவிட்டு அதில் வைக்கலாம்.

நல்ல சூடு தண்ணிர் உள்ள பாத்திரத்தில் இறக்கி வைக்கலாம்.

மைக்ரோவேவில் உள் வைத்திருந்தால் புளிக்கும் (ஆன் செய்ய வேண்டாம்)

சமைய்ல் அறையில் சமைத்து முடிந்ததும் எப்போதும் ஒரு வாசனை மெழுகு வத்தி ஏற்றி வைத்தால் சமையல் வாசனை ஒடோடி போயிடும்.

1 comment:

kavi.s said...

நல்ல பயனுள்ள டிப்ஸ் விஜி. நல்லாயிருக்கு உங்க ப்ளாக்.