தேவையானவை
ஆல் பர்பஸ மாவு (மைதா மாவு) 1 கப்
சர்க்கரை 3/4 கப்
வெனிலா எசன்ஸ் 1 டீஸ்பூன்
முட்டை 2
பேக்கிங் பௌடர் 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா 1 டீஸ்பூன்
உப்பு 1 சிட்டிகை
பட்டர் 8 தே.க(1 ஸ்டிக்)
கேக் பான்
குக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் - 1/2 தே.க
செய்முறை
அவனை 350 டிகிரி முற்சூடு செய்யவும்.
முதலில் மாவை சலித்து வைக்கவும் அதில் பேக்கிங் சோடா, பேக்கிங் பௌடர் சேர்க்கவும்.
ஒரு பெரிய பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நல்ல ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அதில் வெண்ணெய் சேர்த்து மீண்டும் ஐந்து செகண்ட்ஸ் அடிக்கவும்
இதில் வெனிலா எசன்ஸ், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடிக்கவும்.
சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக
கலந்து ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அவனில் கேக் பானில் குக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் தடவி
இந்த கேக் மாவு கலவையை ஊற்றி 25 ல் இருந்து 30 நிமிடம் பேக் செய்யவும்.
டூத் பிக்க்ர் அல்லது போஃக்கால் வைத்து எடுத்து ஒட்டாமல் வந்ததும் வெளியில் எடுக்கவும்.
நன்றாக ஆறியபின் ப்ராஸ்டிங் செய்யலாம்.
இங்கு ப்ளயின் கேக் தான் செய்துள்ளேன். மேலே ஸ்ப்ரிங்ள்ஸ்
தூவியும் அல்லது பொடித்த சர்க்கரையும் மேல் தூவியும் பரிமாறலாம்.
என் மகளுக்கு ப்ராஸ்டிங், ஐசிங் விரும்பாததினால் செய்யவில்லை.
இது டி கேக்காகவும், இதை சாப்பிடலாம்.
விரும்பினால் சாக்லேட் ப்ராஸ்டிங், ஐஸிங், க்ரிம் சேர்த்தும் சாப்பிடலாம்.
11 comments:
Oh dear..u write in tamil...hmm difficult then..may be enable translation for reader like me? The cake looks nice but
yummy cake...
பார்க்க மெத்தென்று உள்ளது விஜி.செய்து பார்த்து விடுகின்றேன்.
கேக் பார்க்க அழகாயிருக்கிறது, விஜி! செய்முறையும் செய்வதற்கேற்ப சுலபமாக இருக்கிறது.
பார்க்க அழகாயிருக்கிறது viji.
simple and easy to bake. Thank you.
அச்சோ...அப்ப ,எனக்கு முன்ன ஆறு பேர் வந்து சாப்பிட்டுட்டாங்களா ? !!! கேக் போச்சே..... !!!!
cake looks perfect and delicious :-)
விஜி கேக் ரொம்ப நல்லா இருக்கு
அடக்கடவுளே?! இது என்ன இன்னிக்கு ப்லாக்கர் திடீர்னு நீங்க போட்டதா ஒரு அம்பது போஸ்ட் காமிக்குது!!!! நானும் எல்லாத்தையும் ஒரேடியா பப்ளிஷ் பண்ணிட்டீங்களான்னு கேக்க வந்தா, எல்லாம் வேற வேற தேதில இருக்கு?! அவ்வ்வ்வ்வ்வ் எக்கச்சக்க வடை போச்சே!!!
விஜி,வெகுநாள் கழித்து, புது டெம்ப்ளேட்டோடு கலர்புல்லா வந்திருக்கீங்க!
கேக் நல்லா இருக்கு!
Post a Comment