Monday, June 21, 2010

கத்தரிக்காய் பச்சடி






தேவையானவை

சின்ன கத்தரிக்காய் - 5
தக்காளி - 2
வெங்காய்ம் பெரிது - 1
எண்ண்ய் - 1/4 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
பச்சைமிளகாய் - 2
வரமிளகாய் - 2
புளி - நெல்லிகாய் அளவு
வெந்தயம் - 1/4
உளுந்தம்பருப்பு - 3
கடுகு - 1 1/2
மஞ்சள் - 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப்ப
கொத்தமல்லி இலை - கொஞ்சம்


செய்முறை

கத்தரிக்காய் நல்ல பெரிய துண்டுகளாக்கி உப்பு கலந்த தண்ணிரில்
போடவும். பெரிய கத்தரிக்கயிலும் செய்யாலாம்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிவைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்தை போட்டு தாளித்து பெருங்காயம்
வெங்காய்ம், தக்காளி,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் கத்தரிக்காய், உப்பு சேத்து பத்து நிமிடம் நன்றாக வதக்கவும்.
சூடு ஆறியபின் மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாகஅரைத்தெடுக்கவும்.
இது இட்லி தோசை கலந்தசாததிற்க்கும் நன்றாக இருக்கும்.

16 comments:

ராமலக்ஷ்மி said...

இது அடிக்கடி நான் செய்வது:)! நல்ல பகிர்வு விஜி. மற்றவருக்கும் பரிந்துரை செய்கிறேன்:)!

Asiya Omar said...

விஜி எண்ணெய் மிகக்குறைவாக சொல்லிருக்கீங்க,காள்ஸ்பூன் போதுமா?நானும் செய்வதுண்டு.அருமையாக இருக்கு.

ஜெய்லானி said...

இட்லிக்கு நல்ல காம்பினேஷன். எண்ணெய் தான் பொதுமான்னு தெரியல.( ஒரு வேளை நிங்க யூஸ் பன்னுவது பெரிய டைப் ஸ்பூனோ )

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு விஜி

Chitra said...

நான் இன்னும் கொஞ்சம் அதிகம் எண்ணையில் வதக்கி செய்வேன். அருமையான ரெசிபிங்க....!

Menaga Sathia said...

very nice viji!!

Jaleela Kamal said...

ஒரு வேளை விஜி டயட்டுக்காக கொஞ்சம என்னை ஊற்றி இருப்பாங்க

Mahi said...

நானும் இதே மாதிரி செய்வேன் விஜி,உருளைகிழங்கு சேர்த்து..சம் டைம்ஸ், எண்ணெயே சேர்க்காமல்,குக்கர்ல எல்லாவற்றையும் ஒரு விசில் வைத்து எடுத்து மசித்துடுவேன்..

இட்லி/தோசைக்கு சூப்பரா இருக்கும்.நல்லகுறிப்பு!

Vijiskitchencreations said...

வாவ் ரொம்ப நாளைக்கு பின் இங்கு எல்லாரையும் பார்த்தது சந்தோஷமா இருக்கு. இருந்தும் இன்னும் இந்த சமையல் அறை சபை நிறைய்ய வேண்டியிருக்கு. வர வேண்டியவர்கள் எல்லாம் கெதியா வாங்கோ வந்து எண்ணெய் குறைவாக உள்ள இந்த ரெசிப்பியை ரசித்து சொல்லவும்.
ஸாதிகா அக்கா, காஞ்சனா, அதிரா, இமா செல்வி அக்கா, மனோ அக்கா எல்லாம் வாங்கோ.

கொலஸ்ட்ரால் முன்னெசரிகைக்காக தான் எங்க வீட்டில் எல்லாமே எண்ணெய் குறைவாக தான் செய்கிறேன், நிறய்ய அயிட்டம்ஸ் ஒவனில் தான் செய்கிறேன், நம்புங்கப்பா எவ்வளவு வித்தியாசம் + வெயிட் லாஸ் குறைய நல்ல ஹோம்மேட் ட்ரிட்மெண்ட். என் டாக்டர் தோழி சொன்னது.

நான் இது நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்வதினால் எண்ணெய் மிக மிக குறைவாக தான் விடுவதுண்டு.. அதுவும் ஒலிவ் ஆயில் என்பதினால் நல்ல ஸ்டிக்கியாகவே இருக்கும்.
எண்ணெய் குறைவுக்கு நல்ல விளக்கிட்டேன் ,இந்த மாதிரி சந்தேகங்கள் கேட்டா நல்லா பார்க்க, படிக்க ஒரு சந்தோஷமா இருக்கு. இன்னும் கொஞ்சம் வேணுமா, எங்க எல்லாரும் சேர்ந்து ஒரு பெரிய கைத்தட்டுங்க.

ஜலீ என்றைக்கு ஊருக்கு , என்னோடா சிஸ்டம் ப்ராப்ளமானதினால் சரியாக படிப்பதற்க்கு முன் மெசேஜ் போயிவிட்டது.

Vijiskitchencreations said...

ராமலஷ்மி அக்கா சந்தோசஷம், நன்றிக்கா.
ஜெய் இல்லைப்பா நான் இதற்க்கு மட்டும் கொஞ்சமா சேர்த்து செய்திருக்கேன். நல்ல கேள்வி நன்றி ஜெய். எங்க உங்க அமைச்சர் இந்த பக்கம் வரதில்லை இந்த சமையலறை மறந்துட்டாரா, பார்த்தால் நான் விசாரித்தாக சொல்லவும்.

Vijiskitchencreations said...

ஆசியா, எப்படி இருக்கிங்க? வாங்க.
சாரு ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கிங்க?
சித்ரா ரொம்ப சந்தோஷமா இருக்கு. அடிக்கடி வாங்க.
மேனகா நன்றிப்பா.

மஹீ எப்படி இருக்கிங்க? ஆமாம்
நிங்க சொல்லும் முறை கூட நல்லா தான் இருக்கு. உருளை நல்லா தான் இருக்கும். இப்பவெல்லாம் கார்ப்போ குறைவாக தான் நான் எடுத்துக்கிற்றேன். நிறய்ய வெஜ்டெபிஸ், டோப்ஃபு இதெல்லாம் தான்ப்பா. நான் அடுத்து டோப்ஃபு ரெசிப்பி போடறேன் ரொம்பா நல்லா இருக்கும். நன்றி மஹி.

ஹுஸைனம்மா said...

விஜி, இப்படியும் கத்தரிக்காப் பச்சடி செய்யலாமா? நான் கத்தரிக்காயைச் ’சுட்டு’த்தான் செய்யணும்னு நினைச்சு அடிக்கடி செய்றதில்லை. அரைப்பதுக்கு முந்திய ஸ்டெப் வரை செய்து பொறியலாக வைப்பதுண்டு.

புளி அரைக்கும்போது சேர்க்கலாமா?

Vijiskitchencreations said...

ஹுசைனம்மா ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கிங்க? சிலபேர் கத்தரிக்காய் வதக்கும் போது புளியும் சேர்த்து வதக்கி அரைப்பார்கள்.
நாங்க அரைக்கும் போது புளிகரைசல் (புளியயை தண்ணிரில் ஊறவைத்து நல்ல கெட்டி ஜூஸை) அதில் சேர்த்து அரைப்போம். இதில் ஜூஸை தான் சேர்த்துள்ளேன். நல்ல டேஸ்டியா இருந்தது. நிங்களும் இதே போல் செய்யுங்கோ.நன்றி.

Srividhya Ravikumar said...

Very nice recipe.. mom used to make this as a side dish for pongal.. i like it.. following you..

ஸாதிகா said...

அட..வித்தியாசமாக இருக்கே?என்ன நீண்டநாட்களாக விஜி ஆளையே காணோம்?

மனோ சாமிநாதன் said...

எனக்குப் பிடித்த கத்தரிக்காய் பச்சடியைப் போட்டிருக்கிறீர்கள் விஜி! நான் இதேபோல- ஆனால் கத்தரிக்காயை சுட்டு செய்வேன். தோசை, பிரெட் எல்லாவற்றிற்கும் நன்றாக இருக்கும். புகைப்படங்களும் அழகு!!