Friday, September 17, 2010

லெமன்கீரை சாதம்(Lemon Spinach Rice)



கீரை எலுமிச்சை சாதம்



தேவையானவை

வடித்த சாதம்

லெமன் - 1

கீரை - 1 தே.க பொடியாக அரிந்தது

மஞ்சள் தூள் - 1/4 தே.க

எண்ணெய் - 1 தே.க

கடுகு - 1/2 தே.க

வற்றல் மிளகாய் - 1

உளுந்தம் பருப்பு - 1/2 தே.க

கடலை பருப்பு - 1/2 தே.க

பெருங்காயதூள் - 1/4 தே.க

கறிவேப்பிலை - கொஞ்சம்

வறுத்த வேர்கடலை - 1/2 தே.க

உப்பு - தேவைக்கேற்ப்ப



செய்முறை


எந்த கீரயை வேண்டுமானலும் இதில் சேர்க்கலாம்.

கீரையை நல்ல மண் போக அலசி பொடியாக அரிந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து அதில்

மஞ்சள் தூள்,உப்பும்,பொடியாக அரிந்த கீரையும் சேர்த்து நன்றாக

கிளறி மூடி போட்டு பத்து நிமிடம் வதக்கவும்.

வதங்கியதும் லெமன் ஜூஸ், சாதம் சேர்த்து நன்றக கலந்து மேலே

கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

நல்ல ஹெல்தியான டு இன் ஒன் லெமன் ரைஸ் ரெடி.

இது இங்கு நான் ஒரு கெட் டு கெதரில் எடுத்து சென்றது,
எங்க கெட் டு கெதரில் ஒரு விதிமுறை என்னவென்றால் அதில்
சமைக்கும் உணவு புதுமாதிரியாகவும் அதில் ப்ரோட்டின், வைட்டமின்ஸ்
எல்லாம் அடங்கியவையாக இருக்கவேண்டும்.(லெஸ் கார்ப்போ)

என் தோழிகள் எல்லாருக்கும் ரொம்ப பிடித்து போயி,வாவ் ரொம்ப டேஸ்டியாக இருக்கு என்று எனக்கு பாராடும்,என் மற்ற தோழிகளும் இப்ப செய்ய தொடங்கி பேரும் வாங்கிட்டங்க.எனக்கு ஒரு குஜராத்தி ஆண்டி செய்து நான் சாப்பிட்டேன்.சரி நிங்களும் எல்லாரும் இதே போல் அடுத்த தடவை கீரை சேர்த்துசெய்து சாப்பிட்டு வந்து மறக்காமல் சொல்லுங்க.


18 comments:

Chitra said...

நல்ல சத்துள்ள சாதம்.... Thank you for the recipe

Krishnaveni said...

interesting lemon - greens rice, yummy

Menaga Sathia said...

கீரை சேர்த்து செய்வது வித்தியாசமா இருக்கு,அருமை!!

தெய்வசுகந்தி said...

lemon rice with keerai! Good combination!!

Asiya Omar said...

healthy recipe.thanks viji.

Anonymous said...

விஜி ..லெமன் கீரை சாதம் சூப்பர் ஆ இருக்கு செஞ்சு பார்க்கறேன் பா பகிர்வுக்கு நன்றி

சாருஸ்ரீராஜ் said...

viji differnt one i will try

Jayanthy Kumaran said...

good try with wonderful result...gonna giv a try dear...

Tasty Appetite

சுசி said...

நல்ல சத்தானது மட்டுமில்லை சுலபமானதும் கூட. நன்றிங்க.

மனோ சாமிநாதன் said...

எலுமிச்சை கீரை சாதம் நன்றாக இருக்கிறது விஜி!

Unknown said...

நன்றாக இருக்கு, விதியாசமாகவும் இருக்கு விஜி

கண்ணகி said...

வித்தியாசமான பார்வையில் வித்தியாசமான சமையல்...கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

Gita Jaishankar said...

Hi Viji, rice looks really good, what a great idea to add greens with lemon rice...love it :)

GEETHA ACHAL said...

புதுமையாக இருக்கு விஜி...கண்டிப்பாக செய்து பார்க்கனும்...நன்றி..

Sriakila said...

லெமன் ரைஸ் செஞ்சிருக்கேன்..

லெமன் கீரை சாதம் வித்தியாசமா இருக்கு. செஞ்சுப்பாக்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

புதுமையாக இருக்கு விஜி.கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

Vijiskitchencreations said...

ஆமாம் சித்ரா.Krishnaveni,Menagasathia காஞ்சனா,தியா,Sriakila,கீதா ஜெய் சங்கர், கீதா ஆச்சல்,ஜெய், சிநேகிதி,கண்ணகி,அவசியம் செய்து பாருங்க டேஸ்டியா இருக்கும். நல்ல புதுவித ஹெல்தி லெமன் ரைஸ்.

Vijiskitchencreations said...

மனோ அக்கா, ஆமாம் புதிவித டேஸ்டோட நல்லா இருக்கும். நான் குஜராத்தி ஆண்டி வீட்டில் சாப்பிட்டேன், ரொம்ப நன்றாக இருந்தது.

ஸ்வேதா கண்டிப்பா பார்க்கிறேன்.
சுசி நன்றிப்பா.

சாரு,தெய்வசுகந்தி,சந்தியா, ஆசியா நன்றிப்பா அடுத்த முறை அவசியம் செய்து பாருங்க.