காளான் கத்தரிக்காய்
தேவையானவை
பட்டன் காளான் - 1 கப்
கத்தரிக்காய் சின்னது - 4
வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
தனியா தூள் - 1/2 தே.க
மிளகாய் தூள் - 1/2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
தாளிக்க
எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/ தே.க
சீரகம் - 1/2 தே.க
செய்முறை
வெங்காயம், தக்காளியை பொடியாக அரியவும்.
பட்டன் காளானையும், கத்தரிக்காயையும் இரண்டாக வெட்டி வைக்கவும்.
கடாயில் தாளிக்கயுள்ளதை தாளித்து வெங்காயம், தக்காளி
சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதில் வெட்டிய கத்தரிக்காய், காளான் இரண்டையும் சேர்த்து,
உப்பு,மஞ்சள் தூள் தனியா தூள், மிளகாய்தூள் எல்லாவற்றையும்
சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் மூடி போட்டு வேகவிடவும்.
வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
இது சாததிற்க்கும், சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

5 comments:
Looks good.
...p.s. I have been to Brighton and Boston. Both are lovely places. :-)
வித்தியாசமாக இருக்கின்ரது விஜி,சைவ சமையலில் தூள் கிளப்பறீங்க.
தனி தனியா செஞ்சிருக்கேன்.
இது கண்டிப்பா செஞ்சு பாக்கணும்.
கத்தரிக்காயும்,காளானுமா?காம்பினேஷன் புதுசா இருக்கு விஜி! :)
Chitra, good. Mahi.நன்றி. ஆமாம் செய்து பாருங்க ரொம்ப நன்றாக இருக்கும்.
சுசி அடுத்த முறை இதே போல் செய்யுங்க நன்றாக இருக்கும்.நன்றி.
ஸாதிகா அக்கா ஏதோ எனக்கும் தெரிந்ததை பகிர்ந்துக்கிறேன். சில புதுவித சமையலை நானும் யார் வலைதளத்தில் வந்தாலும் முடிந்தவரை செய்து பார்க்கிறேன். புது வித சமையல் கற்றுக்க ஒரு சான்ஸ் அவ்வளவு தான். நன்றிக்கா.
ஆசியா வாங்க நன்றிங்க.
Post a Comment