Thursday, March 24, 2011

தக்காளி பிரியாணி(பர்த்டே ஸ்பெஷல்)



இன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி
எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மெனு. என்னவரும்ம் என் குட்டிஸும் நைட் வெளியில் போய் சாப்பிடலாம் என்று சொல்லிட்டாங்க, அவங்க ட்ரிட் இன்றைக்கு.


தேவையானவை


பாஸ்மதி அரிசி 1 கப்
தக்காளி 4
பச்சைமிளகாய் 2
வெங்காயம் 1
பூண்டு 2
இஞ்ஞி 1 துண்டு
தேங்காய பால் 1/2 கப்
கரம் மசாலா தூள் 1 தே.க



மசாலாவிற்க்கு

பட்டை 1 துண்டு
நெய் 2 தே.க
ஏலம் 2
பிரியாணி இலை 2


செய்முறை

பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்கயுள்ளதை தாளிக்கவும்.
வெங்காயம் பெரியதாக அரிந்து அதையும் சேர்த்து வதக்கவும்.
இஞ்ஞி பூண்டு பேஸ்ட்டும் சேர்த்து வதக்கவும்.
அதில் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணிர் வடித்துவிட்டு சேர்த்து வதக்கவும்.
இதில் கரம்மசாலா தூள், அரைத்துள்ள தக்காளி பேஸ்ட், தேங்காய பால் எல்லாம் சேர்த்து
நன்றாக கலந்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரில்(1:2)தண்ணிர் வைத்து 1 விசில் வைத்தெடுக்கவும்.
ரைஸ் குக்கர் என்றால்
தண்ணிர் - 1 கப்
தேங்காய பால் - 1/2 கப்
என்ற விகிதத்தில் வைக்கவும்.
சுவையான தக்காளி பிரியாணி நல்ல ஆறியதும் மேலே கொஞ்சம் நெய் ஊற்றி கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
வெங்காயம் ரைத்தா, வெள்ளரி ரைத்தா சேர்த்து சாப்பிடலாம்.



12 comments:

Chitra said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். தக்காளி பிரியாணியும் அவியலும் நல்ல மேட்ச். அப்படியே அந்த சோன்பப்டி ரெசிபியும் தாங்க... :-)

Kurinji said...

Wish You many more happy returns of the day Viji!!!
Kurinjikathambam
Event : HRH-Puffed Rice

ராமலக்ஷ்மி said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜி! தந்திருக்கும் தக்காளி பிரியாணி ட்ரீட்டுக்கு நன்றி:)!

Mahi said...

Wish you a Very Happy B'day and Many More Happy Returns!

Biriyani looks yummy..expecting the recipe of Son-papdi! :)

Prema said...

Wish u happy b'day and many more happy returns of the day dear!

love this Thakkali Briyani,yummy!

ஜெய்லானி said...

//வெங்காயம் ரைத்தா, வெள்ளரி ரைத்தா சேர்த்து சாப்பிடலாம்.//

நீங்க எப்படி வேனா சாப்பிடுங்க ஆனா ..எனக்கு படத்துல இருக்கிற மாதிரி பிரியாணியே போதும் :-))


இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்..!! வாழ்த்துக்கள் :-)

Raks said...

Happy Birthday! Enjoy your day,nice tomato pulav recipe!

Lifewithspices said...

Many more happy returns of the day n i love the colorful biriyani!!!

அந்நியன் 2 said...

பிறந்த நாள் கொண்டாடுவதைப் பார்த்தால் கூடிய சீக்கிரம் அரசியலில் வந்து விடுவீர்கள் போல தெரிகிறது.

வாழ்த்துக்கள் !

GEETHA ACHAL said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜி..

நான் உங்க follower ஆக் இருக்கேன்..ஆனால் எதுவுமே dashboardயில் updateஆகமாட்டுதே..

I will unfollow u and try again by following you...


Eagerly waiting for sonpapdi recipe...

Asiya Omar said...

belated birthday wishes viji,recipe super.

Sapthaswar said...

வாழ்த்துக்கள் சொன்ன எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.