Friday, November 19, 2010

பால் பௌடர் கோகனட் லட்டு(திருமண நாள் இனிப்பு)



இன்று என் திருமனநாளுக்கு நான் செய்த இனிப்பு.


தேவையானவை

மில்க் பௌடர் - 1 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின்
தேங்காய துருவல் - 2 தே.க
பால் - 2 தே.க
வெண்ணெய் - 2 தே.க
முந்திரி பருப்பு - 4
ஏலத்தூள் - 1 தே.க

செய்முறை


மைக்ரோவேவ் பௌளில் முதலில் வெண்ணெயை போட்டு உருக வைக்கவும்.
பால் பௌடர், கண்டென்ஸ்ட் மில்க்,பால்,தேங்காய துருவல் சேர்த்து 1 நிமிடம் வைக்கவும்.
வெளியில் எடுத்து போர்க்கால நன்றாக கிளறி விட்டு மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
வெளியில் எடுத்து ஏலத்தூள் சேர்த்து 1 நிமிடம் வைத்து வெளியில் எடுத்து நன்றாக கிளறி
ஆறவிடவும்.

மீதமான் சூட்டிலேயே உருண்டைகளாக பிடிக்கவும்.
எளிதில் செய்ய கூடிய ரிச்சான இனிப்பு.

Tuesday, November 16, 2010

சைனா க்ராஸ் ஆரஞ்,சாக்லேட் ஸ்வீட்ஸ்







இது இங்கு ஹாலோவின் பார்டிக்கு எங்கவீட்டில் செய்தது. எல்லா குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடாங்க.

சைனா க்ராஸ் - 1 பாக்கெட்
சாக்லேட் பௌடர் - 1 தே.க
பால் - 1 கப்
ஆரஞ் கலர் - 1/2 தே.க
பாதாம், பிஸ்தா - விரும்பினால்
உலர் தேங்காய் துருவல் - 1 தேங்காய் துருவல்

இரண்டு ப்ளேவரில் செய்தது.
1.தேங்காய் துருவல்+சாக்லேட் செய்தது
2.ஆரஞ் பேளவர்


செய்முறை

சைனா க்ராஸை ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
தண்னிரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பாத்திரத்தில் அரை கப் தண்ணிர்,பால் விட்டு குறைந்த தீயில் வைத்து
நல்ல கொதிக்க விடவும்.
கொஞ்சம் சைனா க்ராஸை கலர் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
கொதித்ததும் அதை வடிகட்டி ஒரு
ட்ரேயில் அல்லது பாத்திரத்தில் விட்டு ப்ரிட்ஜில் வைக்கவும்.
ஒரு மணிநேரம் கழிந்து விரும்பிய வடிவில் கட் செய்து சாப்பிடவும்.
இது கஸ்டர்டில் போட்டும் சாப்பிடலாம்.

மீதீயூள்ள சைனா க்ராஸில் சாக்லேட் பௌடர்+தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும் அதில் பாதாம் பருப்பை சேர்த்து நன்றாக கலந்து சூடு ஆறியதும் ட்ரேயில் விட்டு ப்ரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிடலாம்.
உடல் சூடிற்க்கு மிக்க நல்லது.
இது என் தோழி ஜலீலா அவர்களில் குறிப்பை பார்த்து நான் சில ப்ளேவரோடு சேர்த்து செய்தது.
நீண்ட நாட்களாக செய்ய நினைத்து அது ஒரு வழியா வெற்றிகரமாக செய்து முடிச்சாச்சு.
நிங்களும் எல்லாரும் முடிந்தால் செய்து பாருங்க.
என் குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடவில்லை.
என் வீட்டிற்க்கு வந்திருந்த எல்லொரும் விரும்பி சாப்பிடார்கள்.

நன்றி ஜலீ.






Friday, November 5, 2010

தீபாவளி வாழ்த்துக்கள்+இனிப்புகள்




எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பதிவுலக நண்பர்களுக்கும், பார்வையாளாருக்கும்
இனிப்போடும்,புத்தாடையோடும்,பட்டாசோடும் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.
வாங்க இங்கு இதோ இனிபோட பார்த்துகொண்டே நிங்க வாழ்த்துவதை நானும் பார்க்கிறேன்.
இந்த தடவை எங்க வீட்டில் செய்த பலகாரங்கள்.

ரவாலாடு
மில்க் கோகனட் பர்ப்பி
அசோகா
முந்திரி பர்ப்பி
அப்பம்(அதிரசம் சரியா வராது)

முள்ளு முறுக்கு
தேன்குழல்
மிக்ஸர்.


வாழ்த்து தெரிவித்த எல்லோருக்கும் நன்றி.



Thursday, November 4, 2010

தீபாவளி இனிப்பு பலகாரங்கள்





நம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள்.

ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி

இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது.

இதெல்லாம் நாளை எங்க வீட்டு தீபாவளி சமையல்,

வெள்ளை அப்பம், பஜ்ஜி,இட்லி சாம்பார்,சட்னி,அவியல்,உருளை வருவல்,வடை,அப்பளம்,பாயசம்,வெள்ளடிக்காய் பச்சடி.

எல்லோரும் வாங்க எங்க வீட்டு தீபாவளிக்கு வந்து எங்களோட சேர்ந்து இந்த இனிய பண்டிகையை பலகாரங்களோட கொண்டாடுவோம்.ஸாரி இங்கு பட்டஸ் கிடையாது,

நாங்க கோவிலுக்கு போவோம் அங்கு எல்லோருக்கும் 2 கம்பி மத்தாப்பூ கொடுப்பாங்க.

எல்லா என் தள வருகையாளார்களுக்கும், என் நன்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.