Saturday, January 1, 2011
புத்தாண்டு கேக்
ப்ளெயின் கேக்
புத்தாண்டு ஸ்பெஷல் ப்ருட்ஸ் கஸ்டர்டு & ப்ளெயின் கேக்.
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தேவையானவை
ஆல் பர்பஸ மாவு (மைதா மாவு) 1 கப்
சர்க்கரை 3/4 கப்
வெனிலா எசன்ஸ் 1 டீஸ்பூன்
முட்டை 2
பேக்கிங் பௌடர் 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா 1 டீஸ்பூன்
உப்பு 1 சிட்டிகை
பட்டர் 8 தே.க(1 ஸ்டிக்)
கேக் பான்
குக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் - 1/2 தே.க
செய்முறை
அவனை 350 டிகிரி முற்சூடு செய்யவும்.
முதலில் மாவை சலித்து வைக்கவும் அதில் பேக்கிங் சோடா, பேக்கிங் பௌடர் சேர்க்கவும்.
ஒரு பெரிய பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நல்ல ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அதில் வெண்ணெய் சேர்த்து மீண்டும் ஐந்து செகண்ட்ஸ் அடிக்கவும்
இதில் வெனிலா எசன்ஸ், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடிக்கவும்.
சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக
கலந்து ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அவனில் கேக் பானில் குக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் தடவி
இந்த கேக் மாவு கலவையை ஊற்றி 25 ல் இருந்து 30 நிமிடம் பேக் செய்யவும்.
டூத் பிக்க்ர் அல்லது போஃக்கால் வைத்து எடுத்து ஒட்டாமல் வந்ததும் வெளியில் எடுக்கவும்.
நன்றாக ஆறியபின் ப்ராஸ்டிங் செய்யலாம்.
இங்கு ப்ளயின் கேக் தான் செய்துள்ளேன். மேலே ஸ்ப்ரிங்ள்ஸ்
தூவியும் அல்லது பொடித்த சர்க்கரையும் மேல் தூவியும் பரிமாறலாம்.
என் மகளுக்கு ப்ராஸ்டிங், ஐசிங் விரும்பாததினால் செய்யவில்லை.
இது டி கேக்காகவும், இதை சாப்பிடலாம்.
விரும்பினால் சாக்லேட் ப்ராஸ்டிங், ஐஸிங், க்ரிம் சேர்த்தும் சாப்பிடலாம்
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
செய்முறையும் சேர்த்திருக்கலாமே:)!
கேக்கிற்கு நன்றி:)!
wow that was really superb...
ரொம்ப தாமதமாக வந்து விட்டேன் மூன்று நாளா நெட் வேலை செய்யலை புத்தாண்டு வாழ்த்துக்கள் !
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ரெசிப்பி இருந்திருந்தா செஞ்சுபார்க்க உதவியா இருந்திருக்கும்..
சீரக மிட்டாய்களை தூவியிருக்கிறது பார்க்க ரொம்ப அழகா இருக்கு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Cake looks perfectly baked,looking forward for the recipe!
நன்றி ராமலஷ்மி.
செய்முறை முன்பே குடுத்திருந்தேன்., இதோ உங்களுக்காகவே இங்கும் கொடுத்திட்டேன்.
அகிலா புத்தாண்டு வாழ்த்துக்கள். வருகைக்கு மிக்க நன்றி.
என்ன அந்நியன் ஸார் ஒரே பிஸியா.
புத்தாண்டு வாழ்த்துக்கள். லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான் நிங்க.
காஞ்சனா. நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அமைதிசாரல் அவசியம் இதோ உங்களுக்காக இங்கெ கொடுத்திட்டேன்.
செய்து பாருங்க. புத்தாண்டு வாழ்த்துக்கள்.என் மகள் தான் கலர் மிட்டாய் தூவி அலங்கரித்தாள்.அவசியம் அவளிடமே சொல்லிட்டேன். ஒரே சந்தோஷம் அவளுக்கு.
raks kitchen, welcome. haapy new year.
here it is recipe. pls try and tell me.
thanks.
தோழி விஜி எப்படி இருக்கீங்க
புத்தாண்டு கேக் மிக அருமை.
ரொம்ப பிஸியா?
நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்.
vijiபுத்தாண்டு கேக் அபாரம்.அப்படியே பெரிசா ஒரு துண்டை கட் பண்ணி அக்காவுக்கு ஒரு பார்சல்.(விஜி முட்டை சாப்பிடுவீங்களா?)
கேக் பார்க்க நல்லாதான் இருக்கு. பார்க்க மட்டும்தானா.
கேக் பார்க்கவே அழகா இருக்குங்க.. உங்க மகளின் டேகரேஷனும் அருமை..
உங்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. :)
Post a Comment