தேவையானவை
ஆல் பர்பஸ மாவு (மைதா மாவு) 1 கப்
சர்க்கரை 1/2 கப்
வெனிலா எசன்ஸ் 1 டீஸ்பூன்
முட்டை 2
பேக்கிங் பௌடர் 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா 1 டீஸ்பூன்
உப்பு 1 சிட்டிகை
பட்டர் 8 தே.க(1 ஸ்டிக்)அல்ல்து எண்ணெய் பாதி+பட்டர்
எண்னெய் சேர்த்தால் எண்ணெய் 1/2 கப் பட்டர் 1/2 கப்
ஆரஞ் பழ தோல் சீவியது - 1/2 டீஸ்பூன்
கேக் பான்
குக்கிங் ஸ்ப்ரே அல்லது வெண்ணெய் - 1/2 தே.க
செய்முறை
அவனை 350 டிகிரி முற்சூடு செய்யவும்.
முதலில் மாவை சலித்து வைக்கவும் அதில் பேக்கிங் சோடா, பேக்கிங் பௌடர் சேர்க்கவும்.
ஒரு பெரிய பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நல்ல ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அதில் வெண்ணெய் +எண்னெய் சேர்த்து மீண்டும் ஐந்து செகண்ட்ஸ் அடிக்கவும்
இதில் வெனிலா எசன்ஸ், சர்க்கரை ,ஆரஞ் தோல் சேர்த்து மீண்டும் அடிக்கவும்.
சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக
கலந்து ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அவனில் கேக் பானில் குக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் தடவி
இந்த கேக் மாவு கலவையை ஊற்றி 25 ல் இருந்து 30 நிமிடம் பேக் செய்யவும்.
டூத் பிக்க்ர் வைத்து எடுத்து ஒட்டாமல் வந்ததும் வெளியில் எடுக்கவும்.
நன்றாக ஆறியபின் அவரவர் விருப்பத்திற்க்கு தகுந்த ப்ராஸ்டிங் செய்யலாம்.
இங்கு ப்ளயின் கேக் தான் செய்துள்ளேன். மேலே ஸ்ப்ரிங்ள்ஸ்
தூவியும் அல்லது பொடித்த சர்க்கரையும் மேல் தூவியும் பரிமாறலாம்.
என் குழந்தைகளுக்கு ப்ராஸ்டிங், ஐசிங் விரும்பாததினால் செய்யவில்லை.
விரும்பினால் சாக்லேட் ப்ராஸ்டிங், ஐஸிங், க்ரிம் சேர்த்தும் சாப்பிடலாம்

இந்த கேக்கை சாப்பிட்டு நிங்களும் வாலண்டேஸ் டே கொண்டாடி மகிழுங்க.
எல்லாருக்கும் ஹாப்பி வாண்டேஸ் டே வாழ்த்துக்கள்.
13 comments:
அருமை விஜி !
Event: Healthy Recipe Hunt
குறிஞ்சி குடில்
Nice!!!!
அழகாக் கொண்டு வந்துள்ளீர்கள் வடிவத்தை:)! குறிப்புக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.அருமை விஜி.
Cake looks very pretty!
superb yaar..
Tasty appetite
எனக்கு இந்த வாலேன்ட்ஸ் டே மீதுலாம் நம்பிக்கை இல்லைங்க அதுலாம் மொதலாளித்துவத்தின் ராஜ தந்திரம்,இதை வைத்து பல கோடிகள் சம்பாதித்து இருப்பார்கள்.
நீங்கள் செய்த கேக்கின் வடிவம் சூப்பர்.
மனைவியை காதலியாக நினைத்துக் கொண்டாலே போதும்ங்க.
Viji Chechi! Nice cake ! One reason to eat cake :)
எனக்கு ஒரு பீஸ் அனுப்பவும்.. விஜி.. தீர்ந்து போச்சா..:)
குறிஞ்சி, தெய்வசுகந்தி,இலா, ஆசியா நன்றி.
thanks Raks Kitchen.
Ramalakshmi கத்தியை வைத்தே ஷேப் செய்துட்டேன். நன்றி.
ஜெய் நன்றி.
ஆமாம் சரியா சொன்னிங்க அன்னியன். என் வீட்டுகாரரும் இதே தான் சொலாங்க.
வலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/to-z-tips-pedia.html
I don't understand what is this? //
அந்த பதிவின் கடைசியில் உங்க பதிவின் valentine day கேக் தான் ட்ரீட் தரேன்னு கொடுத்து இருக்கேன் பாருங்க..அப்படியே உங்க ப்லாக் லிங்க் கொடுத்து இருக்கேன் விஜி...பதிவின் இறுதியில் பாருங்களேன்...
Post a Comment