Wednesday, February 29, 2012

மாங்கோ பை- லீப் வருட டெசர்ட்













தேவையானவை

மாம்பழ கூழ் - 1 டின் ரெடெமேட் ( வீட்டிலும் மாம்பழதை கட் செய்து
அந்த சதை பகுதியை வழித்தெடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
பால் - 2 பெரிய கப் (புஃல் பேட்)
சர்க்கரை - 1/2 கப்
ஜெல்லடின் - அன் ப்ளேவர்ட் 1 பாக்கெட்
க்ரஸ்டு - 1 (க்ராம் க்ராக்கர்ஸ் க்ரஸ்டு) ரெடிமேடாக கிடைக்கும்
அலுமினியம் ட்ரே




செய்முறை

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி குறைந்த தீயில் வைத்து லேசாக கொதிக்க ஆரம்பிக்கும் போது மாம்பழ கலவையை அதில் ஊற்றி ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடவும். வேற ஒரு பாத்திரத்தில் தண்ணியை விட்டு லேசாக வார்ம் செய்து அதில் ஜெல்லடினை போட்டு போர்க்கால நல்ல மிக்ஸ் செய்து அதையும் மாம்பழ கலவையோடு சேர்த்து நன்றாக கிளறி விட்டு அதில் சர்க்க்ரையை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்
நல்ல கொஞ்சம் கொதிக்கும் போது அடுப்பை அணக்கவும், நல்ல க்ளேஸ்டாக தெரியும்.
இந்த கலவையை க்ரஸ்ட் இருக்கும் ட்ரேயில் ஊற்றி ப்ரிஸரில் 3 மணிநேரம் வைக்கவும்
பின் அதை எடுத்து பிஸ்ஸா கட் செய்வது போல் செய்து டெசஸ்ட்டாக பரிமாறவும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு டெசர்ட்.
பெரியவர்களை கேட்கவே வேண்டாம் உடனே காலி செய்திடுவாங்க.











5 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு. நன்றி விஜி.

Menaga Sathia said...

வித்தியாசமான ரெசிபி!!

Mahi said...

pie சூப்பர் கலரா இருக்குது விஜிக்கா. எனக்கென்னமோ இந்த வகை இனிப்புகள் பெரிதாக விருப்பம் இல்ல!;) சாப்பிட்டதே இல்ல,ஒருவேளை அதனாலயா இருக்குமோ???! :))))

ஸாதிகா said...

அருமையான குறிப்பு ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க விஜி.இனி அடிக்கடி வருவீர்கள் என நம்புகின்றேன்.

Kanchana Radhakrishnan said...

நல்ல குறிப்பு. நன்றி விஜி.