Thursday, March 22, 2012

யூகாதி பண்டிகை





















































































தெலுங்கு வருட பிறப்பு-யூகாதி

தேங்காய போளி

தேவையானவை

மைதாமாவு 1 கப்
தேங்காய் துறுவியது 1 கப்
வெல்லம் பொடித்தது 1 கப்
உப்பு 1/2 தே.க
ஏலத்தூள் 1 தே.க
தண்ணிர் கொஞ்சம்
எண்ணெய் 2 தே.க
நெய் 1 தே.க
வாக்ஸ் பேப்பர் 2 சிறிய துண்டுகள்

செய்முறை

மைதாமாவை உப்பு, கொஞ்சம் தண்ணிர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்
நன்றாக பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

பூரணத்திற்க்கு ஒரு அடிகனமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணிர் விட்டு குறைந்ததீயில்
வைக்கவும். தண்ணிர் கொதிக்க ஆரம்பித்ததும். அதில் வெல்லத்தை போட்டு நன்றாக கிளறி விடவும்.
நன்றாக கொதிக்கும் போது துறுவிய தேங்காயும் சேர்த்து கிளறி விடவும். பாத்திரத்தில் ஒரங்களில் ஒட்டாமல் நல்ல திக்காக வரும் போது ஏலத்தூள்,நெய், விரும்பினால் 1/2 தே.க ரவையும் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.

கை பொறுக்கும் சூடு இருக்கும்போது சின்ன உருண்டைகளாக்கி வைக்கவும்,
மேல் மாவிற்க்கு மைதாமாவில் இருந்து சிறு உருண்டைகளாக எடுத்து கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிவிட்டு ஒரு பேப்பரில் வைத்து கையால சின்ன சப்பாத்தி போல் பரத்தவும். அதில் பூரண உருண்டையை வைத்து நன்றாக எல்லாபக்கமும் மூடி விடவும்.
அதை முதலில் ஒரு வேக்ஸ் பேப்பரில் வைக்கவும், அதன் மேல் அடுத்த வேக்ஸ் பேப்பர் வைத்து சப்பாத்தி குழவியால் நன்றாக பரத்தவும்.

இப்போது தவாவில் குறைந்த தீயில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்நிறமாக வெந்து எடுக்கவும்.
நல்ல டேஸ்டியான தேங்காய் போளி ரெடி.


எல்லா தெலுகு மக்களுக்கும் இனிய யூகாதி வாழ்த்துக்கள்.













7 comments:

இராஜராஜேஸ்வரி said...

எல்லா மக்களுக்கும் இனிய யூகாதி வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தேங்காய்போளி பார்க்கவே சூப்பராக உள்ளது. நாக்கில் நீர் ஊறுகிறது. உடனே சுடச்சுட இரண்டு பார்சலில் அனுப்புங்கோ, ப்ளீஸ்.

அனைவருக்கும் யுகாதி பண்டிகை வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தேங்காய்போளி பார்க்கவே சூப்பராக உள்ளது. நாக்கில் நீர் ஊறுகிறது. உடனே சுடச்சுட இரண்டு பார்சலில் அனுப்புங்கோ, ப்ளீஸ்.

அனைவருக்கும் யுகாதி பண்டிகை வாழ்த்துகள்.

Anonymous said...

Happy Ugadi viji... nice to c ur cookery and craft blogs... liked both of it!
Vidhya
http://blessedfingers.blogspot.in
http://azhagiyakaivannam.blogspot.in

ராமலக்ஷ்மி said...

இனிய யுகாதி வாழ்த்துகள். தேங்காய் பூரண போளி பிடித்தமான ஒன்று. செய்முறையை அருமையாகத் தந்துள்ளீர்கள்.

Asiya Omar said...

செய்முறை சூப்பர் விஜி.வேக்ஸ் பேப்பரில் வைத்து உருட்டும் டிப்ஸ்க்கு நன்றி.

ஸாதிகா said...

எந்த ஒரு சிறு பண்டிகையும் விடாது கடை பிடித்து அதை பகிர்ந்து கொள்ளும் விஜிக்கு நன்றிகள்.