Tuesday, December 18, 2012

பேச்சிலர்ஸ் சமையல் போட்டி



சமையல் அட்டகாசங்கள் நடத்தும் பெரிய பேச்சிலர்ஸ் பிஃஸ்ட் போட்டி நல்ல விறுவிறுப்பா போய் கொண்டிருக்கிறாது. நம்ம மக்கள்ஸ் எல்லாம் அல்ரெடி உங்க குறிப்பை கொடுத்து அசத்து இருப்ப்பிங்க இருந்தாலும் நமக்கு தெரிந்தவர்களுக்கும் நம்ம வலைப்பூவை அடிக்கடி வந்து போகிற நணபர்கள் எல்லோருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
நல்ல அழகிய சமைத்து அசத்தலாம் வலைபூ முதன் முதல் சமையல் போட்டி வைத்து அசத்துகிறாங்க.
நான் என் பங்கு குறிப்புகளை அதில் குடுத்துவிட்டேன். உங்க எல்லோருக்கும் பயனுள்ளாதாக இருக்கும்.

இது தான் நம்ம தோழி ஜலீ என்கிற ஜலீலாவின் வலைபூ.


http://samaiyalattakaasam.blogspot.com/









இதில் பங்கு பெறுகிற எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.





Tuesday, December 11, 2012

கேரட் உருளை வதக்கல் (கேரளா ஸ்டைல்)







தேவையானவை

கேரட்   பொடியாக அரிந்தது         1 கப்
உருளை     ”                                           1 கப்
வெங்காயம்                                          1
மஞ்சள் தூள்                                          1/2 தே.க
உப்பு                                                          தேவைகேற்ப்ப
கறிவேப்பிலை
  
அரைக்க

தேங்காய துருவல்                2 தே.க
சீரகம்                                           1/4 தே.க
மிளாகாய வற்றல்                  2(காரத்திற்க்கு எற்ப)

தாளிக்க

எண்ணெய் (தேங்காய் )            1
கடுகு                                                1/4 தே.க
உளுந்தம்பருப்பு                          1/4 தே.க
பெருங்காயத்தூள்                       1/4 தே.க



செய்முறை

கடாயில் தாளிக்கயுள்ளதை தாளித்து, வெங்காயம், சேர்த்து வதக்கியதும் அதில் தாளிக்கயுள்ளதை தாளித்து வெட்டி வைத்துள்ள காய்களையும் சேர்த்து ,மஞ்சள் தூளையும் சேர்த்து  1/2 தே.க எண்ணெய் விட்டு நன்றாக  கலந்து குறைந்த தீயில் 5 நிமிடம் வதக்கவிடவும்., நன்றாக வதங்கியதும் உப்பை சேர்த்து மேலும் குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும். கொஞ்சமாக தண்னிர் தெளிக்கவும். நிறய்ய தண்ணிர் விட்டால் அதன் டேஸ்ட்  வேறுபடும்.
கடைசியாக அரைத்துள்ள தேங்காய் கலவை சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
நல்ல டேஸ்டியான கேரட் உருளை வதக்கல் (பொரியல்) ரெடி.

குறிப்பு: தேங்காய், சீரகம், வற்றல்மிளாகாய் ஒன்றிரண்டாக க்ரஸ் செய்தது போல் அரைத்து எடுக்கவும். தண்ணிர் சேர்க்க வேண்டாம்.
உப்பு கடைசியில் சேர்க்கவும்.

இது எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு ஹெல்தியான வெஜ் பொரியல்.