Tuesday, December 11, 2012

கேரட் உருளை வதக்கல் (கேரளா ஸ்டைல்)







தேவையானவை

கேரட்   பொடியாக அரிந்தது         1 கப்
உருளை     ”                                           1 கப்
வெங்காயம்                                          1
மஞ்சள் தூள்                                          1/2 தே.க
உப்பு                                                          தேவைகேற்ப்ப
கறிவேப்பிலை
  
அரைக்க

தேங்காய துருவல்                2 தே.க
சீரகம்                                           1/4 தே.க
மிளாகாய வற்றல்                  2(காரத்திற்க்கு எற்ப)

தாளிக்க

எண்ணெய் (தேங்காய் )            1
கடுகு                                                1/4 தே.க
உளுந்தம்பருப்பு                          1/4 தே.க
பெருங்காயத்தூள்                       1/4 தே.க



செய்முறை

கடாயில் தாளிக்கயுள்ளதை தாளித்து, வெங்காயம், சேர்த்து வதக்கியதும் அதில் தாளிக்கயுள்ளதை தாளித்து வெட்டி வைத்துள்ள காய்களையும் சேர்த்து ,மஞ்சள் தூளையும் சேர்த்து  1/2 தே.க எண்ணெய் விட்டு நன்றாக  கலந்து குறைந்த தீயில் 5 நிமிடம் வதக்கவிடவும்., நன்றாக வதங்கியதும் உப்பை சேர்த்து மேலும் குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும். கொஞ்சமாக தண்னிர் தெளிக்கவும். நிறய்ய தண்ணிர் விட்டால் அதன் டேஸ்ட்  வேறுபடும்.
கடைசியாக அரைத்துள்ள தேங்காய் கலவை சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
நல்ல டேஸ்டியான கேரட் உருளை வதக்கல் (பொரியல்) ரெடி.

குறிப்பு: தேங்காய், சீரகம், வற்றல்மிளாகாய் ஒன்றிரண்டாக க்ரஸ் செய்தது போல் அரைத்து எடுக்கவும். தண்ணிர் சேர்க்க வேண்டாம்.
உப்பு கடைசியில் சேர்க்கவும்.

இது எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு ஹெல்தியான வெஜ் பொரியல்.






10 comments:

Aruna Manikandan said...

simple and delicious poriyal :)

Vijiskitchencreations said...

Thanks Aruna.

Kanchana Radhakrishnan said...

Poriyal supper and yummy.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நாவில் நீர் ஊற வைக்கும் நல்ல வதக்கல். ;))))) பாராட்டுக்கள்.

Asiya Omar said...

வாவ்! பார்க்கவே அருமையாக இருக்கு.
யாராவது எனக்கு விதம் விதமாக இப்படி ருசியாக வெஜ் சமைச்சு போடமாட்டாங்களான்னு இருக்கு.

மனோ சாமிநாதன் said...

காரட் உருளை வதக்கல் பிரமாதமாக இருக்கிறது விஜி!!

Jaleela Kamal said...

saththaana poriyal

இராஜராஜேஸ்வரி said...

ஹெல்தியான வெஜ் பொரியல். பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

தேங்காய், சீரகம், வற்றல்மிளாகாய் ஒன்றிரண்டாக க்ரஸ் செய்தது போல் அரைத்து எடுக்கவும். தண்ணிர் சேர்க்க வேண்டாம்.//
எங்கள் பக்கம் எல்லா பொரிஉஅலுக்கும் இப்படித்தான் செய்வோம். அதை துவரம் என்று சொல்வோம்.
காரட் துவரம் மிக நன்றாக இருக்கிறது.

Mahi said...

புது காம்பினேஷன்! நல்லா இருக்கு.