Saturday, January 2, 2010

கேரட் அல்வா




தேவையானவை

கேரட் துருவல் 1 கப்
மில்க் பௌடர் 1 தே.க
சீனி 1 கப்
நெய் 1/4 கப்
பால் 1 தே.க
ஏலதூள் 1/2 தே.க
முந்திரி 5
கிஸ்மிஸ் 5


செய்முறை
----------

பானில் அல்லது கடாயில் கொஞ்சம் நெய்விட்டு முந்திரியை வறுத்து கொள்ளவும்.
கேரட்ட துருவல்+ பால் விட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அரைக்காமலும் செய்யலாம்

பானில் நெய் விட்டு அரைத்த விழுது சீனி, பால் பௌடர் எல்லாவற்றையும்
சேர்த்து நன்றாக கிளறிவிட்டு பத்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேகவிடவும்.
மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டு கிளறிவிட்டு கொண்டே இருக்கவும்.
பானில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும்.

மேலே வறுத்த முந்திரி,ஏலத்துள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

5 comments:

அண்ணாமலையான் said...

சூப்பாரா இருக்கு பாக்கறதுக்கு.. சாப்புடவும் அதே மாதிரி இருக்குமா?

Jaleela Kamal said...

கேரட் ஹல்வா சூப்பர், மேலே உள்ள தாலி சாப்பாடு எனக்கா, ரொம்ப பிடிச்சது வடையுடன், அப்பளம் சேர்ந்து சாப்பிட ம்ம். புல் கட்டு தான் போங்க விஜி

Vijiskitchencreations said...

அண்ணாமலையான் என்ன இப்படி கேட்டுடிங்க.வாங்க அல்லது இதே முறையில் செய்து சாப்பிட்டு சொல்லுங்க.
ஜலீ ஆமாம் உங்களுக்கே தான். அதில் சந்தேகமே இல்லை.

அண்ணாமலையான் said...

வரனுமா? அப்ப இதான் உலகத்துலயே காஸ்ட்லி அல்வா(அவ்ளோ செலவாகும்ல?)

Vijiskitchencreations said...

அதில் என்ன சந்தேகம்.