Tuesday, April 13, 2010

போளிஎல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


தேவையானவை

பூரனத்திற்க்கு

கடலை பருப்பு - 1கப்
சர்க்க்ரை - 3/4 கப்
ஏலத்தூள் - 1/2 தே.க

மேல் மாவு செய்ய

மைதா மாவு (ஆல் பர்பஸ் மாவு) - 1 கப்
உப்பு - 1/4 தே.க
கேசரி கலர் அல்ல்து மஞ்சள் தூள் - 1/2 தே.க
நல்லெண்னெட்ய் - 2 தே.க

நெய் - 2 தே.க
அரிசிமாவு - 1 தே.க

செய்முறை

கடலை பருப்பை குக்கரில் 1/4 கப் தண்ன்ரிர் விட்டு நல்ல மசிய வேகவைக்கவும்.

மசியவில்லை என்றால் மாஷாரால் மசிக்கவும், (மிக்ஸியில் அரைக்கவும்)
கடாயில் கொஞ்சம் நெய் விட்டு அரைத்த மாவுகலவையை, சர்க்க்ரை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.
நன்றாக சுருண்டு வரும்போது எடுத்து ஆறவிடவும்.
சின்ன சின்ன உருணடைகளாக செய்யவும்.


மேல் மாவு தயாரிக்க மாவுடன் கொஞ்சம் தண்னிர்,நல்லெண்ய்,

உப்பு, கலர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
அரைமணி நேரம் ஊறவிடவும்.

மாவில் கொஞ்சம் எடுத்து சின்ன உருண்டைகளாக எடுத்து சின்ன சப்பாத்தி போல் செய்து அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடி அரிசிமாவை தொட்டு நல்ல சப்பாத்தி மோல் மெல்லியதாக இட்டு தோசை தவாவில்

மிதமான தீயில் வைத்து இரு புறமும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

நல்ல கம கம போளி ரெடி.

இத்துடன் பால்பாயசம், சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.


குறிப்பு: வாழை இலையில் வைத்து இட்டு சுட்டால் நன்றாக இருக்கும்.


17 comments:

ஸாதிகா said...

புத்தாண்டில் போளி..சூப்பர்.எனக்கு பிடித்த குறிப்புளாக போட்டு அசத்தறீங்க விஜி

JKR said...

சக வலைபதிவர்களுக்கும் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் எமது இணையதளம் சார்பாக இனிய புது வருட வாழ்த்துக்கள் MULLAIMUKAAM.BLOGSPOT.COM

Kanchana Radhakrishnan said...

புத்தாண்டு வழ்த்துக்கள் விஜி.போளி நல்லா இருக்கு.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

விஜி உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

போலி சூப்பராயிருக்கு,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

மங்குனி அமைச்சர் said...

மேடம் போளி பாக்கவே அருமையா இருக்கு ,

மங்குனி அமைச்சர் said...

///Vijis Kitchen said... 7

வந்துட்டேன். நானும் ஒரு வழியாக மழையில் நனைந்து கொண்டே அதிராவை பார்க்க ஒடோடி வந்தேன். அப்படியே இலா, ஹைஷ் எல்லாரையும் ஒரே டிரிப்பில் ஹாய் சொல்லிட்டு போலாம் என்று தான்.
என்ன அதிரா ஒரே கமெடியா இருக்கு. ம்.. நடக்கட்டும். நாளை வருகிறேன்.

அதிரா, ஹைஷ் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.////


எங்கல்லாம் பாத்த உங்களுக்கு காமடியா இருக்கா ? ஏற்கனவே ஒரு பெரிய டெர்ரர் ரவுடி கிட்ட மாட்டிகிட்டு நானே முளிசுகிட்டு இருக்கேன் , இதுல நீங்க வேற நக்கல் பன்றிகளா , அப்புறம் எங்க டெர்ரர் ரவுடி பாஸ் அதிரா கிட்ட சொல்லி உங்க வீட்டுக்கு ஒரு ஆடோ அனுபிடிவோம் ஜாக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கிரதை..............................

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர் --//மேடம் போளி பாக்கவே அருமையா இருக்கு ///


மடையா அது பாக்கறதுக்கு இல்ல சாப்பிடறது.

ஆமாங்க பக்கத்துல ஏதோ வெள்ளையா இருக்கே அது என்ன தயிரா ?

ஜெய்லானி said...

//குறிப்பு: வாழை இலையில் வைத்து இட்டு சுட்டால் நன்றாக இருக்கும்.//

ஆமா, அப்பதான் அடி பலமா இருக்கும். வெளிய யாருக்கும் தெரியாது.

மாதேவி said...

போளியுடன் புத்தாண்டு அசத்தல்.

உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Harines said...

HELLO VIJI

BOLI PARTHAL SAPPIDANAM POL YERUKKU, INDIA VARUMPOTHU PANNI KUDUNGAL

SANTHIRAMESH

Ammu Madhu said...

superb.

Vijis Kitchen said...

எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், நன்றி.

ஸாதிகா அக்கா ஆமாம் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.இதில் வெல்லம் சேர்த்தும் செய்வார்கள், அதுவும் நல்லா இருக்கும்.ஜேகேஆர் முதல் வருகைக்கு நன்றி.
மேனகா,மாதேவி, அம்மும் எல்லாருக்கும் நன்றி.

ஜெய்லானி& மங்கு இரண்டு பேருக்கும் முதலில் வணக்கம், வாழ்த்துக்கள்.
தயில் இல்லிங்கோ அது பால் பாயசம்முங்கோ,
வாழைஇலை இட்டால் இப்படி கூட இருக்கா நன்றிங்க.

மறக்காம வந்து போங்கோ.
மங்குனி, ஜெய் இல்லை என்றால் ப்ளாக்கர்ஸுக்கு நன்பர்களுக்கு எல்லாம் போர் அடிக்கும். எனக்கு உங்க 2 பேர் வருக்கையும் கமெண்ட்ஸும் பிடித்து இருக்கு. உங்க கூட்டனி எல்லாரையும் அடுத்த முறை மற்க்காமல் இங்கு வ்ர சொல்லுங்கப்பா.

Vijis Kitchen said...

காஞ்சனா, ஸ்டார் நடராஜன் நன்றி.

Jaleela said...

சூப்பர் போளி விஜி எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் முழு பாசிப்பய்றில் முயற்சித்து நல்ல வந்துள்ளது.

ஊருக்கு மர்லிவீட்டுக்கு போன போது போளி சூடா வச்சாங்கள்.ரொம்ப சூப்பர்.

ராமலக்ஷ்மி said...

இனிப்பான குறிப்பு. புத்தாண்டு வாழ்த்துக்களும்.

ராமலக்ஷ்மி said...

ramalakshmi_rajan@yahoo.co.in

மடல் செய்யுங்கள்:)!