Monday, June 21, 2010

கத்தரிக்காய் பச்சடி






தேவையானவை

சின்ன கத்தரிக்காய் - 5
தக்காளி - 2
வெங்காய்ம் பெரிது - 1
எண்ண்ய் - 1/4 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
பச்சைமிளகாய் - 2
வரமிளகாய் - 2
புளி - நெல்லிகாய் அளவு
வெந்தயம் - 1/4
உளுந்தம்பருப்பு - 3
கடுகு - 1 1/2
மஞ்சள் - 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப்ப
கொத்தமல்லி இலை - கொஞ்சம்


செய்முறை

கத்தரிக்காய் நல்ல பெரிய துண்டுகளாக்கி உப்பு கலந்த தண்ணிரில்
போடவும். பெரிய கத்தரிக்கயிலும் செய்யாலாம்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிவைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்தை போட்டு தாளித்து பெருங்காயம்
வெங்காய்ம், தக்காளி,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் கத்தரிக்காய், உப்பு சேத்து பத்து நிமிடம் நன்றாக வதக்கவும்.
சூடு ஆறியபின் மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாகஅரைத்தெடுக்கவும்.
இது இட்லி தோசை கலந்தசாததிற்க்கும் நன்றாக இருக்கும்.

Thursday, June 10, 2010

கேக்


தேவையானவை
ஆல் பர்பஸ மாவு (மைதா மாவு) 1 கப்
சர்க்கரை 3/4 கப்
வெனிலா எசன்ஸ் 1 டீஸ்பூன்
முட்டை 2
பேக்கிங் பௌடர் 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா 1 டீஸ்பூன்
உப்பு 1 சிட்டிகை
பட்டர் 8 தே.க(1 ஸ்டிக்)
கேக் பான்
குக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் - 1/2 தே.க
செய்முறை
அவனை 350 டிகிரி முற்சூடு செய்யவும்.
முதலில் மாவை சலித்து வைக்கவும் அதில் பேக்கிங் சோடா, பேக்கிங் பௌடர் சேர்க்கவும்.
ஒரு பெரிய பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நல்ல ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அதில் வெண்ணெய் சேர்த்து மீண்டும் ஐந்து செகண்ட்ஸ் அடிக்கவும்
இதில் வெனிலா எசன்ஸ், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடிக்கவும்.
சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக
கலந்து ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அவனில் கேக் பானில் குக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் தடவி
இந்த கேக் மாவு கலவையை ஊற்றி 25 ல் இருந்து 30 நிமிடம் பேக் செய்யவும்.
டூத் பிக்க்ர் அல்லது போஃக்கால் வைத்து எடுத்து ஒட்டாமல் வந்ததும் வெளியில் எடுக்கவும்.
நன்றாக ஆறியபின் ப்ராஸ்டிங் செய்யலாம்.
இங்கு ப்ளயின் கேக் தான் செய்துள்ளேன். மேலே ஸ்ப்ரிங்ள்ஸ்
தூவியும் அல்லது பொடித்த சர்க்கரையும் மேல் தூவியும் பரிமாறலாம்.
என் மகளுக்கு ப்ராஸ்டிங், ஐசிங் விரும்பாததினால் செய்யவில்லை.
இது டி கேக்காகவும், இதை சாப்பிடலாம்.
விரும்பினால் சாக்லேட் ப்ராஸ்டிங், ஐஸிங், க்ரிம் சேர்த்தும் சாப்பிடலாம்.

Friday, June 4, 2010

அமெரிக்க தமிழர் திருவிழா FETNA 2010

”செந்தமிழால் சேர்ந்திணைவோம், செயல்பட்டே இனம் காப்போம்”
FETNA 2010 .
செந்தமிழ்க் காவலர் என்று போற்றப்படும் ச. இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவாகவும் இந்த வருடம் அமைந்திருக்கிறது.
இந்த வருடம் ”செந்தமிழால் சேர்ந்திணைவோம், செயல்பட்டே இனம் காப்போம்” என்கிற தலைப்பை மையாமாக வைத்து கதை, கவிதை, பாட்டு, நடனம்,வினாடிவினா, தமிழ் பீ, ஜெப்படி,கவியரங்கம் நடக்கவிருக்கிறது.
இந்த பெஃட்னா தலமை குழு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு
மாநிலத்தில் இருந்து திருவிழாவை திட்டமிட்டு அங்குள்ள தமிழர்களுடன் உற்சாகத்துடன் ஒன்று சேர்ந்து உழைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறது.இந்த வருடம் கனெக்டிக்கடில் நடக்கிறது.
வட அமெரிக்காவில் கனெக்டிக்கெட் மகாணத்தில் ப்வனி வரப்போகிறாள் நம் தமிழ்தாய். வரும் ஜூலை மாதம் 3-5 தினங்களில் (அமெரிக்க சுத்ந்திர தின விடுமுறை) அன்று வாட்டர்பெர்ரி என்கிற ஊரில் பாலஸ் தியேட்டரில் நடக்கவிருக்கும் கண்கொள்ளா காட்சி. இதில் கலை இலக்கிய நிகழ்ச்சிகளும், அந்தந்த மாநிஙகளிலுந்தும் தமிழ்சங்க நிகழ்ச்சிகள், எராளமான கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாட இருக்கிறது.
இந்தியாவில் இருந்து இயக்குனர், பாரதிராஜா, நடிகர், விக்ரம், நடிகை த்ரிஷா,
தவத்திரு மருதாசலா அடிகளார், நடிகர், சந்தாணம், சிந்திக்கவைக்க, பேராசியயை பர்வீன் சுல்தானா, கவிஞர் தாமரை, மற்றும் பாடகி சாதனா சர்க்கம், மெல்லிசை இயக்குனர் ஹாரிஸ் ஜெயராஜ், பாடகர் கார்த்திக்குடன் இன்னிசையும் நடக்கவிருக்கிறது காணா தவறாதிர். மேலும் விபரங்களுக்கு FETNA 2010.
நன்றி. இதை பப்ளிசிட்டி செய்ய உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும்
மறக்காமல் சொல்லவும். இந்த செய்தியை ஆர்வத்துடன் படிக்கிற நிங்கள் செய்யவேண்டியது:

ஆசையிருந்தும் நேரம், தூரம், பணவீக்கம் போன்ற நெருக்கடியால் உங்களால்
வர முடியாவிட்டாலும், அமெரிக்காவில் உள்ள உங்கள், உறவினர்/நண்பருக்கு தெரிய படுத்தவும். அதை விட மேலானது உங்கள் வாழ்த்துக்களை
மறக்காமல் FETNa வுக்கு அனுப்பவும்.
நன்றி..நன்றி..