Wednesday, July 28, 2010

காராவடை (Karaa Vadai)



தேவையானவை

புழுங்கல் அரிசி - 1 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
துவ்ரம் பருப்பு - 1/4 கப்
வற்றல் மிளகாய் - 2
பெருங்காயதுள் - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - பொரிப்பதற்க்கு


செய்முறை
அரிசி,பருப்பு எல்லாம் தனிதனியே 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
பருப்புகள் எல்லாம் தனிதனியே ஊறவைத்து நல்ல கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

அரிசி வற்றல் மிளகாயையும் சேர்த்து ஊறவைத்து நல்ல கெட்டியாக அரைத்தெடுக்கவும்.
கடாயில் தேவையான அளாவு எண்ணெய் விட்டு காயவிடவும்.
காய்ந்த்ததும் மிதமான தீயில் அரைத்தெடுத்துள்ள மாவில் உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து நல்ல நெல்லிகாய அளவு மாவு எடுத்து நன்றாக உருட்டி காய்ந்துள்ள எண்ணெயில்
போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும்.
இதை அப்படியே சாப்பிடலாம், வேண்டுமென்றால் தேங்காய் சட்ணியோடு சாப்பிடலாம்.
நல்ல ஹெல்தியான ப்ரோட்டின் நிறைந்த சத்துள்ள ஸ்னாக்.

Tuesday, July 20, 2010

மைக்ரோவேவ் மில்க் ஸ்விட்(Microwave Milk Sweet)

இது என் மகள் திவ்யாவின் 4 வது பிறந்தநாளுக்கு செய்தது. அவசரமாக வெளியூர் போகவேண்டி இருந்ததினால் அவசர மைக்ரோவேவ் ஸ்வீட். நல்லா வந்தது. நிங்களும் செய்து பாருங்க.
தேவையானவை
கண்டென்ஸ்ட் மில்க் 1 டின்
மில்க் பௌடர் 1 கப்
பட்டர் 1 ஸ்டிக் (ரூம் டெம்ப்ரேச்சர்)
மைக்ரோவேவ் சேவ்டி பௌல்
ஸ்பூன்
பதாம் அல்லது பிஸ்தா 1/2 ஸ்பூன்
செய்முறை

மைக்ரோவேவ் பௌலில் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து மைக்ரோவேவில்
மொத்தம் 5 நிமிடங்கள் வைக்கவும்.
ஒவ்வொரு நிமிடமும் முடிந்து வெளியில் எடுத்து மறுபடியும் கிளறி வைத்து எடுக்கவும்.
ஒரு ப்ளேட்டில் பட்டர் தடவி அதில் இந்த கலவயயை கொட்டி பதாம்,பிஸ்தா தூவி ஒரே சீராக தடவி விரும்பிய ஷேப்பில் வெட்டவும்
இது எளிதில் செய்து அசத்தலாம்.