Wednesday, September 29, 2010

ப்ரோட்டின் வெஜ் பொரியல்


தேவையானவை

வெங்காயம் - பொடியாக அரிந்தது 1/4 கப்
வெள்ளரிக்காய் - 1 துண்டுகளாக்கியது
குடமிளகாய் - 1 துண்டுகளாக்கியது
வேகவைத்த கொண்டைகடலை - 1/4 கப்
வேவைத்த காராமணி - 1/4 கப்
வேகவைத்த பச்சை பயறு - 1/4 கப்
கேரட் - 1/4 கப்சின்ன துண்டுகளாக்கியது
சாட் மசாலா தூள் - 1/4 தே.க
மிளகு தூள் - 1/4 தே.க

தாளிக்க
எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம் - 1/4 தே.க
வெள்ளை எள் - 1 தே.க ரோஸ்டட்

செய்முறை

கடாயில் தாளிக்கயுள்ளதை தாளித்து அதில் வெங்காயம்,
(வேண்டுமென்றால் தக்காளி கேரட், குடமிளகாய்,வெள்ளாரிக்காய்)
சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும், சாட்தூள்,மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.
எல்ல தானியவகைகளும் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
வதங்கியதும் வெள்ளை எள் தூவி,கொத்தமல்லி இலையும் சேர்த்து
நன்றாக கலந்து வேண்டுமென்றால் லெமன் ஜுஸ்
சேர்த்து இறக்கவும்.
இதை கலந்த சாதத்திற்க்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
இதை சால்ட் போலவும் சாப்பிடலாம்.

Tuesday, September 28, 2010

காளான் கத்தரிகாய் ( Mushroom brinjal curry)



காளான் கத்தரிக்காய்

தேவையானவை

பட்டன் காளான் - 1 கப்
கத்தரிக்காய் சின்னது - 4
வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
தனியா தூள் - 1/2 தே.க
மிளகாய் தூள் - 1/2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப

தாளிக்க

எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/ தே.க
சீரகம் - 1/2 தே.க

செய்முறை

வெங்காயம், தக்காளியை பொடியாக அரியவும்.
பட்டன் காளானையும், கத்தரிக்காயையும் இரண்டாக வெட்டி வைக்கவும்.
கடாயில் தாளிக்கயுள்ளதை தாளித்து வெங்காயம், தக்காளி
சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதில் வெட்டிய கத்தரிக்காய், காளான் இரண்டையும் சேர்த்து,
உப்பு,மஞ்சள் தூள் தனியா தூள், மிளகாய்தூள் எல்லாவற்றையும்
சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் மூடி போட்டு வேகவிடவும்.
வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
இது சாததிற்க்கும், சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Friday, September 17, 2010

லெமன்கீரை சாதம்(Lemon Spinach Rice)



கீரை எலுமிச்சை சாதம்



தேவையானவை

வடித்த சாதம்

லெமன் - 1

கீரை - 1 தே.க பொடியாக அரிந்தது

மஞ்சள் தூள் - 1/4 தே.க

எண்ணெய் - 1 தே.க

கடுகு - 1/2 தே.க

வற்றல் மிளகாய் - 1

உளுந்தம் பருப்பு - 1/2 தே.க

கடலை பருப்பு - 1/2 தே.க

பெருங்காயதூள் - 1/4 தே.க

கறிவேப்பிலை - கொஞ்சம்

வறுத்த வேர்கடலை - 1/2 தே.க

உப்பு - தேவைக்கேற்ப்ப



செய்முறை


எந்த கீரயை வேண்டுமானலும் இதில் சேர்க்கலாம்.

கீரையை நல்ல மண் போக அலசி பொடியாக அரிந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து அதில்

மஞ்சள் தூள்,உப்பும்,பொடியாக அரிந்த கீரையும் சேர்த்து நன்றாக

கிளறி மூடி போட்டு பத்து நிமிடம் வதக்கவும்.

வதங்கியதும் லெமன் ஜூஸ், சாதம் சேர்த்து நன்றக கலந்து மேலே

கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

நல்ல ஹெல்தியான டு இன் ஒன் லெமன் ரைஸ் ரெடி.

இது இங்கு நான் ஒரு கெட் டு கெதரில் எடுத்து சென்றது,
எங்க கெட் டு கெதரில் ஒரு விதிமுறை என்னவென்றால் அதில்
சமைக்கும் உணவு புதுமாதிரியாகவும் அதில் ப்ரோட்டின், வைட்டமின்ஸ்
எல்லாம் அடங்கியவையாக இருக்கவேண்டும்.(லெஸ் கார்ப்போ)

என் தோழிகள் எல்லாருக்கும் ரொம்ப பிடித்து போயி,வாவ் ரொம்ப டேஸ்டியாக இருக்கு என்று எனக்கு பாராடும்,என் மற்ற தோழிகளும் இப்ப செய்ய தொடங்கி பேரும் வாங்கிட்டங்க.எனக்கு ஒரு குஜராத்தி ஆண்டி செய்து நான் சாப்பிட்டேன்.சரி நிங்களும் எல்லாரும் இதே போல் அடுத்த தடவை கீரை சேர்த்துசெய்து சாப்பிட்டு வந்து மறக்காமல் சொல்லுங்க.


Wednesday, September 15, 2010

விநாயக சதுர்த்தி







எங்க வீட்டு பிள்ளயாருக்கு நான் செய்த கொழுக்கட்டையும் சுண்டலும்.
பதிவு போட கொஞ்சம் தாமதாமாகிவிட்டது.
எனக்கு இந்த பிள்ளையார் ரொம்ப பிடித்ததால் இதையும் இதில் சேர்த்துள்ளேன்.
மசாலா பிள்ளையார்.

Friday, September 10, 2010

வலைதளத்தில் விஜியின் தொடர்பதிவு

பதிவுலகில் இலாவின் அழைப்பு

விஜியை பற்றி மேலும் தெரியனும் என்று பதிவுலகில் விரும்பறாங்க.
என் அன்பான தோழி இலா என்னை அழைத்திருக்கும் இந்த வலைபதிவு தொடரில் எனக்கு தெரிந்தை உங்களோடு பகிர்ந்துக்கறேன்.
மேலும் என்னோட நட்புள்ளங்களுக்கும்,இதோ எனக்கு தெரிந்த தமிழில் எழுதுகிறேன். நிறை குறை இருந்தால் கண்டிப்பா வந்து சொல்லுங்க.

1,வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


ஏனுங்க இப்படி முதலிலேயே சந்தேகத்தோட கேட்கறிங்க.
என் பேரிலேயே ஒரு வெற்றி இருக்கு Victory.அது தான் என் அம்மா, அப்பா ஆசையாக வைத்த பெயர்.
அடுத்து என்னவரும்,என்னை சுற்றியுள்ள சொந்தமும்,சுற்றமும்,நட்பும் சேர்ந்து எனக்கு ஒரு பேர் சூட்டினார்கள்
அந்த பேரில் தான் இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கேன்.
இந்த நாட்டில் அப்பாவின் பேரை கடைசியில் சேர்த்து அழைப்பது முறை.
அதன் படி என்னை அழைக்கவேண்டும் என்றால் ரொம்ப கஷ்டபடுவார்கள்.
இந்நாட்டவர்கள் என்னை மிஸ் வி என்றும் அழைக்கிறார்கள்.

2.அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.

இதில் சந்தேகமே வேண்டாம், என் பேரை சொல்ல நான் எப்பவுமே பெருமை கொள்கிறேன்.
என் பேரில் தான் எல்லாமே இருக்கு, இருக்கணும்.

3.நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

அதை ஏன் கேக்கறிங்க. அது ஒரு நல்ல கதை. அதை சொல்ல வேண்டும் என்றால் பக்கம் பக்கமா எழுதனும். சுருக்கி சொல்கிறேனுங்க.என்னோட தோழிகளின் அன்பு தொல்லையினால் எழுத வந்தேன். ஆங்கிலமும் இல்லாமல், தப்பு தப்பா தமிழில் எழுதுகிறேன்.ப்ளாக்கில் இன்னும் நிறய்ய விஷயங்கள் இருக்கு. அதை எல்லாம் கூட இன்னும் சரிவர தெரியாமல் நேரம் இருக்கும்போதல்லாம் வந்து எழுதுகிறேன்.

4..உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

இன்னும் அந்த முயற்ச்சியில் இறங்கவே இல்லைங்க.
என்னங்க நாம என்ன பிரபலமடைய செய்ய. நாம நேயர்கள் வந்து போகிறாங்களே அது தாங்க மேலும் மேலும் பிரபலமடைய செய்யும் என்று நான் நம்புகிறேன்.

5.வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

50+50 எல்லா சொந்த விஷயமும் இதில் எழுத முடியாதுங்க.
பாதி பாதிதாங்க.

6.நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

கண்டிப்பா இல்லிங்க.இதில் கூட சம்பாதிக்கலாமா?அப்படி எல்லாம் கூட இருக்கா? இப்பவெல்லாம் யாருங்க டைரியில் எழுதுகிறார்கள்.
இந்த நவின யுகத்தில் எனக்கு தெரிந்தவை இதில் எழுதி பத்திரமா என் நட்புறவுகளுக்கும் என் சந்ததிகளுக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தான் எழுதி வைக்கிறேன். மேலும் எனக்கும் எல்லாம் எப்பவுமே நினைவில் வராது, அந்தமாதிரி நேரத்திற்க்கு ஒரு அவசரத்துக்கு பயன்படும் என்று தான் எழுதுகிறேன்.

7.நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

மூன்று அதை ஏன் கேட்கறிங்க.எனக்கு இசை நன்றாக தெரியும்
அதை வைத்து ஆரம்பிக்கவேண்டும் என்று நினத்து இது வரை இல்லை.
பார்ப்போம் கூடிய சீக்க்ரமே இதிலேயே இனைக்கவுள்ளேன்,
ஆங்கிலத்தில் ஒன்றும் தமிழில் இரண்டும் இருக்குங்க.
ஆனல் எதையுமே சரியா எழுத தான் நேரமில்லிங்க.
ஆங்கிலத்தில் தான் முதலில் எழுத ஆரம்பித்தேன்.
இப்ப ஒரு ப்ளாக்கிற்கே எழுத நேரமில்லை.
எல்லாத்தையும் ஒன்றாக இணைக்கவேண்டும் என்றிருக்கேன்.
இந்நாட்டின் படி யூனைட்டா இருக்கனும்.

8.மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.

அப்படிஒன்றும் இல்லிங்க. பொறாமை உண்டுங்க ஒன்னே ஒன்னில் மட்டும்
நான் இன்னும் சரியா தமிழில் எழுதமுடியவில்லையே என்று தாங்க.
ஒரோருத்தரும் எவ்வளவு அழகா தமிழில் எழுதாறாங்க.
பொறாமை, கோபம் இதெல்லாம் இல்லிங்க. அதெல்லாம் இருந்தால் ஒன்று சேருவது கஷ்டமுங்க.
போட்டி வேண்டும் கண்டிப்பா.ஆனால் பொறாமை இருக்கவே கூடாது.
அன்போடு பழகனும் அனபை பெறனும் இது தாங்க எனக்கு தெரிந்தது. மேலும் அன்பால் எல்லாம் அடையவேண்டும் என்பது தான் என்னோட லட்சியம்.

9.உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

சத்யா என்னவர்தாங்க.இப்பவெல்லாம் இந்த பக்கமே கூட எட்டி பார்பதில்லை.எனக்கு பாட்டு,குக்கிங்,கதை,கவிதை
இதில்லாம் நிறய்ய பரிசுகள் கிடைத்திருக்கு. நீ தான் நிறய்ய பரிசுகள் எல்லாம் வென்றிருக்காயே ஏன் நீ உனக்கு தெரிந்த எல்லாம், எழுதி அடுத்தவங்களுக்கும்,பயன்படும்படியா எழுது என்று சொல்லி ஆர்வமூட்டினார். நன்றி சத்யா.

10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னை பற்றி பெரிதாக ஒன்றும் சொல்வதற்க்கில்லை. எனக்கு இசை என்றால் ரொம்ப பிடிக்கும்.
நான் இசையில், கானபூஷன் பட்டம் பெற்றுள்ளேன், வானொலி, டிவி எல்லாவற்றிலும் பங்கேற்றிருக்கேன்.
அன்பான பெற்றோர்கள்,உடன்பிறந்தவர்கள்,அன்பான கணவர், அழகான குழந்தைகள். நிறைவான வாழ்க்கை, நோய் நொடியில்லாமல் இல்லாமல் நீடுழி வாழனும் அதை தான் நான் எப்போதும் இறைவனிடம் வேண்டுவேன்.
நிங்களும் எல்லாரும் எந்த குறையும் இல்லாமல், நோய் நொடியில்லாமல் சந்தோஷமா இருக்கனும் அதை தான் நான் எல்லாருக்கும் இந்த
வலை தளத்தின் வழி சொல்லிகொள்கிறேன்.
நான் எல்லோரிமும் ரொம்ப அன்பாக பழககூடியவள்,எல்லாருடைய்ய உதவியும், அன்பும் எனக்கும் வேண்டும்.
இந்த வலைதளத்தின் வழி நிறய்ய புதிய நட்புகளும்,அவர்களின் அன்பையும் நான் பெற்றிருக்கேன். மேலும் மேலும் இதே போல் பெறவேண்டும்.
அனைவரின் அன்போடும் மேலும் மேலும் என் தளத்திற்க்கு உங்களால் பெருமை வந்து சேரவேண்டும்.

என்னோட தொடரை நானும் தொடர ஆசைபடும் தோழிகள்+தோழர்.

Mohamed Ayoub
மனோ அக்கா
மஹி
கீதாஆச்சல்
சாருஸ்ரீராஜ்
பாயீஜா


மேலும் என் இந்த அழைப்பை ஏற்று நிங்களும் தொடருவிங்க என்று நம்புகிறேன்.

Thursday, September 2, 2010

கிருஷ்ண ஜெயந்தி








வருட வருடம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாடுகிற தினத்தை தான் நாம் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி, அஷடமி ரோஹினி
என்றும் கூறி நல்ல கோலகலமாக இந்தியாவில் வடக்கும், தெற்கும்,
எல்லாவீட்டிலும் அவங்க ஊர்படி, முறை படி பல வித பலகாரங்கள் செய்து,
பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

ஆனலும் கிருஷ்ன பரமாத்மா வெண்ணையும், அவலும் விரும்பி சாப்பிடுவது என்று எல்லாருக்கும் தெரிந்ததே.
அதுவும் அமெரிக்காவில் பட்டர் விதவிதமான,ஒர்காண்டிக்,பேட் ப்ஃரி போன்ற விதங்களில் விற்பது உண்டு.
அதனால் இங்குள்ள கிருஷ்னருக்கு பட்டர் முறுக்கு,பட்டர் ரோல்ஸ்,பட்டர் பால்ஸ் செய்தும் வழிபடுகிறார்கள்.
கிருஷ்னருக்கு அமெரிக்கா உனவையும் அறிமுகபடுத்தி அதை நடை முறையில் இப்ப கொண்டாடுகிறார்கள்.

ஆனால் நம்ம வீட்டில் கிருஷ்னருக்கு மட்டும் தான் பட்டர் (பேரை சொல்லி நாங்க சாப்பிடமாட்டோம் என்று பொய் ப்ராமிஸ்) செய்வதில்லை.
கடவுள் பேரை சொல்லியே சாப்பிடுவது தான் தொன்று தொட்டு வழக்கமாகிவருகிறது.அதில் எந்த மாற்றமும் இல்லை.

என் சின்ன பென் 3 வயது திவ்யா கேட்டாள் அம்மா கிருஷணர் கேக் கட் பண்ணுவாரில்ல என்றும் தான் செய்து சீடைகளை கண்டிப்பா கிருஷ்னர் சாப்பிடுவாரில்ல என்றும் கேள்வி ஏவுகணையை விட்டு கொண்டிருந்தாள்.
அவள் மனதை நோகடிக்க வேண்டாம் என்று என் கணவர் டோண்ட் வொர்ரி கிருஷ்ணர்
லட்டுவை கட் பண்ணி கொண்டாலாம் என்று சொல்லி லட்டுவை கட் செய்துவிட்டு ஒரே குஷியாகிவிட்டள்.

எங்க வீட்டு கிருஷ்ணருக்காக செய்து கிருஷ்ணர் சாப்பிட்டு ருசி பார்த்து பின் நாங்க சாப்பிட்டது.